தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல், நேரடியாக கேட்ட, மூன்று தொகுதிகள் யாருக்கு என்ற தகவல், காங்கிரஸ் வட்டாரங்களில் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கி உள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மூன்று தொகுதிகளை விரும்பி கேட்டுள்ளார். அதன்படி, கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய, மூன்று தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கி உள்ளது.

இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது. கரூர் - ஜோதிமணி, திருச்சி - திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரி - செல்லக்குமார் போட்டியிடுவர் என, தெரிகிறது. அப்ப, குஷ்புவுக்கு...?
No comments:
Post a Comment