Saturday, March 9, 2019

40 தொகுதிகளிலும் அமமுக போட்டி; இனிமேல் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு தொகுதி எதுவும் கிடையாது - தினகரன் கறார்.

மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்றும், இனிமேல் கூட்டணிக் கதவை தட்டும் எந்தக் கட்சிக்கும் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது என்று தினகரன் கறாராக 06-03-2019 அன்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைய தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை ஆர்வம் காட்டின. 
ஆனால் ஒரு கட்சி கூட தினகரனுடன் கூட்டணி வைக்க துணிவற்று இருந்த னர்.
இதனால் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனோ தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.
தற்போது திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இடம் கிடைக்காமல் தனித்து விடப்பட்ட சில அரசியல் அநாதைக் கட்சிகள் தினகரன் தரப்பை கூட்டணிக்காக அணுகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், மக்களவைத் தேர்தலில் அமமுக 40 தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணிக்கு 2 தொகுதிகள் போக எஞ்சிய 38 தொகுதிகளிலும் தனித் தே போட்டியிடும் .இனிமேல் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் அவர்களுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது. ஆனால் கூட்டணிக்கு வரும் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமமுகவுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கறாராக தெரிவித்தார்.
எங்களுடன் கூட்டணிக்காக பல கட்சிகள் அணுகின. ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த அந்தக் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அதிமுக அமைத்துள்ள கூட்டணி வடிகட்டிய சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும், ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஜெயலலிதா படத்தைக் காட்டி அதிமுக ஓட்டுக் கேட்கக் கூடாது என்றும் தினகரன் தெரிவித்தார்.
டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில், திமுக தனது கூட்டணியை இறுதி செய்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேசமயம் அதிமுகவும் கிட்டத்தட்ட ஓரளவுக்கு கூட்டணியை முடித்துவிட்டது. ஆனால் தேமுதிக, அதிமுகவில் இணையுமா? இணையாதா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
இதனிடையே டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...