Sunday, March 17, 2019

தி.மு.க.,வில் ஆறு வாரிசுகள் போட்டி.

லோக்சபா தொகுதிகளுக்கான, தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில், வாரிசுகள் ஆறு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் மகள் கனிமொழி; பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் மகன் தயாநிதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன், முன்னாள் அமைச்சர்களான, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, ஆற்காடு வீராசாமியின் மகன், டாக்டர் கலாநிதி என, வாரிசுகள் ஆறு பேருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என, இரு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில், 13 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


கடந்த தேர்தலில் போட்டியிட்ட, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், சி.என்.அண்ணாதுரை ஆகிய, ஐந்து பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், புதுமுக வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல், கட்சி தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வெளியிடப்பட்ட, முதல் பட்டியல்.


முந்தியது தி.மு.க.,:



அ.தி.மு.க., பொதுச் செயலராக, ஜெ., இருந்த வரை, எந்த தேர்தலாக இருந்தாலும், முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் இறங்கி விடுவார். அவர், பிரசாரத்தை துவக்கும் போது தான், தி.மு.க., கூட்டணியையே இறுதி செய்யும். தற்போது, ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க.,வை, முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம் இருவரும் வழிநடத்தி செல்கின்றனர். ஜெ., பாணியில், முதலில் வேட்பு மனுவை, அ.தி.மு.க., பெற்றது. ஆனாலும், கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பட்டியல், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவது என, அனைத்திலும், தி.மு.க., முந்தியது; அ.தி.மு.க., பின் தங்கியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...