Thursday, March 7, 2019

*கருணைக்கிழங்கு - மருத்துவ பயன்கள்*

✷ கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. காரும் கருணைக்கிழங்கு, காராக் கருணைக்கிழங்கு.
✷ சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும் அரிப்பும் ஏற்படாது மற்றும் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைத்து பயன்படுத்தினாலும் காரல், நமைச்சல் இருக்காது.

✷ ஜீரண மண்டல உறுப்புகளில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் உடையது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதனால் மூலச்சு டு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும் ஆற்றல் உடையது.
✷ நாள்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும். பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் வெள்ளைப்படுதலை சரி செய்ய மருந்தாக உதவுகிறது கருணைக்கிழங்கு. இதில் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளது.
✷ சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக்கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது ஆகும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாக, கருணைக்கிழங்கு அதிகமாக பயன்படுகிறது.
✷ உடல் எடை அதிகமாக இருப்பவர்களும், பார்வைக் கோளாறு உள்ளவர்களும், மூட்டுவலி, கை வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்கு ஆகும்.
✷ நோயில் கருணை காட்டுவதில் கருணைக்கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மட்டும் வேக வைத்து அப்படியே உணவாக எடுத்து கொண்டு வந்தால் மூலம் குணமாகும்.
✷ குடலில் கிருமி சேராமல் மலத்தை வெளியேற்றுவது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைக்கவும், கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவதும் போன்றவற்றிற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...