Friday, March 15, 2019

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, அனைத்து சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை அளிப்பது தொடர்பான பேச்சு, சுமுகமாக முடிந்துஉள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.




நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை 2015ம் ஆண்டு, செப்.,ல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.இது தொடர்பாக, நடந்த பேச்சில் சுமுக நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறைதான்.ஆனால், வங்கிகள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. இதனால், அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வந்தோம். 


இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பிடம், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர் பேச்சுநடத்தினர். இதில் தற்போது சுமுகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முடிவு அறிவிக்கப்பட வில்லை. தேர்தலுக்கு பின், முடிவுகள் அறிவிக்கப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...