Tuesday, March 19, 2019

தெரியாததை ஒத்துக்கொள்🙏🙏

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க நான்கு நபர்கள் வந்திருந்தார்கள். முனிவரிடம் அந்த நான்கு நபர்களும்,"சாமி உலகத்தைப் புரிந்து கொள்ளவே முடியலையே, அதற்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதற்கு, அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒரு வரியில் பதில் கூறினார். ஆனாலும் வந்தவர்கள், அவரிடமிருந்து எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" என்று கேட்டாங்க. அதற்கு முனிவர் அவர்களிடம் "சரி இப்ப நான் உங்களை ஒரு புஷ்பக விமானத்தில் அழைத்துக் கொண்டு போவேன். போகும் வழியில், ஒரு காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப் பற்றி உங்களோட கருத்தை நீங்கள் சொல்ல வேண்டும் , கருத்து தவறாக இருந்தால், இந்த விமானம் உங்களை கீழே தள்ளிவிட்டுவிடும்" சரியா,என்றார். சரி என்று அந்த நான்கு நபர்களும் முனிவரோட சேர்ந்து புஷ்பக விமானத்தில் ஏறினார்கள்.
கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு இடத்தில், ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்தது. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும், பசிக்கு இறை தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பித்தது. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்தது. மானைப் பார்த்த, அந்தப் புலி சட் என்று, அதன் மேல் பாய்ந்து, அதைக் கொன்று, தானும் சாப்பிட்டு விட்டு, தன்னோட குட்டிகளுக்கும் குடுத்தது. அதை சாப்பிட்ட குட்டிகளுக்கு மிகவும் சந்தோஷம். அந்தப் பக்கத்தில், தன் அம்மாவை பறிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சியை அந்த நான்கு நபர்களுக்கு காட்டிய முனிவர், இதைப்பற்றிய உங்கள் அருத்து என்ன? என்று கேட்டார்.
அதற்கு அந்த நான்கு பேரில் ஒருவர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னார்”. உடனே அவரை, அந்த விமானம் கழே தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளைப்பார்த்து முனிவர் கேட்டார்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருவர் கீழே விழுந்ததைப் பார்த்ததினால் அடுத்த நபர் , " இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இறையாகத் தானே மான்கள் இருக்குது ,என்று சொன்னார். உடனே அவரையும் விமானம் கீழே தள்ளி விட்டது . இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, அடுத்த ஆளு, ரொம்பவும் கவனமாக சொல்வதாக நினைத்துக் கொண்டு,, “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு" சொன்னார். உடனே அவரையும் அந்த விமானம் கீழே தள்ளி விட்டது. கடைசியாக விமானத்தில இருந்தவரைப் பார்த்து, முனிவர்
கேட்டார்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதற்கு அவர் ,"தெரியலயே சாமின்னு", சொன்னார். இந்த தடவை அவரை, அந்த விமானம் கீழே தள்ளவில்லை. ஆகவே முனிவரையும் தப்பித்த கடைசி நபரையும் சுமந்து கொண்டு விமானம் பயணம் செய்ய ஆரம்பித்தது.
இந்தக் கதையில் கிடைக்கும் நீதி என்னவென்று தெரிகிறதா? நம் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும். தேவையில்லாத விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்வது தேவையற்றது, அனாவசியம், ஆபத்து. அதைப் போல நமக்கு தெரியாத விஷயங்கள் குறித்து, நமக்கு தெரிந்த மாதிரி பேசுவதும் அனாவசியம். தெரியாத விஷயங்களை தெரியாது என்று ஒத்துக்கொள்வது தான் உத்தமம்.
நட்புடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏v🙏🙏🙏🙏v🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...