Thursday, March 14, 2019

இறை நம்பிக்கைக்கும் நம்பிக்கையிமைக்கும் இடையில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை.

கருவுற்றிருந்த ஒரு தாயின் வயிற்றில் இரண்டு சிசுக்கள்.அதில் ஒன்று மற்றொன்றைக் கேட்டது,” நாம் பிரசவிக்கப் பட்டவுடன் அதன் பின் வாழ்க்கை என்று ஒன்று இருக்குமா?”
மற்றொன்று பதிலளித்தது, “நிச்சயமாக இருக்கும். முடிந்த பின்னால் வேறு ஒரு வாழ்க்கை நிச்சயம்.இங்கு இப்போது நாம் நம்மை அதற்காகத்தான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம்.டெலிவரிக்குப் பின் லைஃப் இருக்கும்”
“முட்டாள்தனமான நம்பிக்கை.டெலிவரிக்குப் பின் வாழ்க்கையாவது. அப்படி இருக்குமானால் அது எப்படிப் பட்டதாக இருக்கும்”
இரண்டாவது சிசு சொன்னது, “ அது தெரியவில்லை.ஆனால் மிகவும் ஒளி மிகுந்த பிரகாசமான சூழ்நிலை இருக்கும்.நாம் நம் காலகளால் நடப்போம்.வாய் மூலம் உணவு உட்கொள்வோம்.இப்போது நாம் உணர முடியாத பல உணர்வுகள் இருக்கலாம்”
முதலாவது சொன்னது, ‘நான்சென்ஸ்..காலால் நடப்பது, வாயால் உண்பது எல்லாம் அதீத கற்பனை.நமக்கு வேண்டிய போஷாக்கான உணவு தொப்புள் கொடி வழியாக நமக்கு கிடைக்கிறது.அது நீளம் குறைந்தது. அதன்பின் எங்கிருந்து உணவு வரும்?டெலிவரிக்குப் பிறகு வாழ்க்கை என்பதில் லாஜிக்கே இல்லை”
இரண்டாவது: “எனக்கு என்னவோ நிச்சயம் வேறு ஏதோ இருக்கும் என்று தோன்றுகிறது. எல்லாமே புதிதாக இருக்கலாம்.யார் கண்டது..தொப்புள் கொடியே தேவையில்லாமல் போகலாம்”
முதலாவது: “உன் வாதம் சரி என்றே எடுத்துக் கொண்டாலும், வாழ்க்கை என்ற ஒன்று உண்மையானால் அங்கிருந்து ஏன் இங்கு எவருமே திரும்பி வருவதில்ல.?” பிரசவம் என்பது நம் வாழ்வின் முடிவு.அதன் பிறகு ஒரே இருட்டும், நிசப்தமும் முடிவில்லா சூனியமும்தான் இருக்க வாய்ப்பு”
இரண்டாவது: “சரிப்பா..எனக்குத் தெரியலே…ஆனா ஒன்று. நிச்சயம் நம்மை உருவாக்கின தாயை நாம் சந்திப்போம்.அவள் அதற்குமேல் நம்மை காப்பாள்”
முதலாவது: ஹஹஹஹா..தாயா?? இதையெல்லாமா நம்புகிறாய்? சிரிப்புதான் வருது. தாய் இருப்பது உண்மையானால் அவள் இங்கு எங்கு இருக்கிறாள்? எங்கே போனாள்?”
இரண்டாவது சொன்னது, “ அவள் நம்மை சுற்றி எங்கும் இருக்கிறாள். நாம் எல்லோரும் அவளால் சூழப் பட்டுள்ளோம்.அவளுக்குள்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவளன்றி நம் உலகில்லை..நாமும் இல்லை”
முதல்: ”என் கண்களுக்கு அவள் தெரியவில்லை. இதெல்லாம் கட்டுக் கதை நம்மவே முடியாத கதை”
இரண்டாவது: “ சில நேரங்களில், அமைதியான சூழ்நிலையில் உன்னிப்பாகக் கேட்டால் அவள் இருப்பதை உணரலாம். மேலிருந்து அவளின் அன்பான குரலைக் கேட்கலாம்”
கடவுள் மற்றும் வாழ்க்கை பற்றிய லாஜிக் இதுவே
parable is from "Your Sacred Self" by Dr. Wayne Dyer. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...