Sunday, July 7, 2019

தமிழை வளர்க்க துடிக்கும் மூதேவிகள். 37ம் தமிழின் அவமானம்.

மக்களவையில்  ருசிகரம் ,,
பேந்த பேந்த முழித்த கனிமொழி தயாநிதி
மக்களவையில் நிர்மலா சீதாராமன் சொன்ன புறநானுறு பாடல்
" காய் நெல் அறுத்து கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும் பல் நாள்கள் ஆகும் ,, நுறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும், அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியா கல்லென் சுற்றமொடு, பிரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போல, தானும் உன்னால் உலகமும் கெடுமே "
இதற்க்கு அர்த்தம் எந்த எம்பிக்காவது தெரியுமா என்றார், யாருக்கும் தெரியவில்லை ,
தயாநிதி கனிமொழி பேந்த பேந்த முழித்த காட்சியை பாக்கணுமே,, கண் கொள்ளா காட்சி
மற்றும் தமிழக எம்பிக்கள் அனைவரும் தலையை குனிந்தே கொண்டார்கள்,,
புறநானுறு பாடலை நிர்மலா ஹிந்தி, இங்கிலிஷ் மொழியில் சொல்லவில்லை தமிழில் தான் சொன்னார்
,, இவங்க எதோ தமிழை கரைத்து குடித்து போல பேசுவார்கள் ,,,இவங்க தான் தமிழை வளப்பங்களாம்
உடனே இதற்கு அர்த்தத்தையும் நிர்மலா சீதாராமனே சொன்னார்
" மிக சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து யானைக்கு கொடுத்தால் அதனை யானை பல நாள்கள் உண்ணும் ,, ஆனால் யானை தானே புகுந்து உன்ன ஆரம்பித்தால் அது தின்பதை விட அந்த யானையின் கால்களால் மிதி பட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்,, அது போல ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடம் இருந்து வரி திரட்டினால் நாடு கோடிக்கணக்கில் பொருள்களை பெற்று தழைக்கும் "
தமிழு, தமிழு என்று மூச்சுக்கு முந்நூறு முறை கத்தி நாடகம் போடும் இந்த அரசியல்வாதிகளுக்கு சரியான செருப்படி
பேந்த பேந்த விழித்தவர்களில் சில பேர் தமிழ் நாட்டில் பேராசியர் என்று சொல்லி கொண்டு அலைபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...