ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் பிரபல வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் தி.மு.க., சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்.அதேபோல மீதமுள்ள ஓரிடத்திற்கு ஏற்கனவே திமுக மற்றும் மதிமுக விற்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அக்கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது,'' என்று தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள ஆறு இடங்களில், தி.மு.க., சார்பில் 3, அதிமுக சார்பில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளன. இந்த எண்ணிக்கையை தாண்டி வேட்பாளர்கள் போட்டியிடும் பட்சத்தில் வரும் ஜூலை 18 ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும்.
திமுக வேட்பாளர்கள் இருவரும் வரும் ஜூலை 4ல் வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர்.

No comments:
Post a Comment