தமிழகத்தில், செங்கல்பட்டு மற்றும் தென்காசிக்கு மாவட்ட அந்தஸ்து கிடைக்க உள்ளது.விரைவில், கும்பகோணத்தையும் புதிய மாவட்டமாக அறிவிக்க, வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்புகளை, சட்டசபையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று வெளியிட்டார். பேரவை விதி, 110ன் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:
மக்கள் கோரிக்கைகளை ஏற்று, நிர்வாக வசதிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, தென்காசி தலைமையில், புதிய மாவட்டம் உருவாக்கப்படும். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, செங்கல்பட்டை தலைமை யிடமாக வைத்து, புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்.
தனி அதிகாரி
இவ்விரு மாவட்டங்களுக் கும், தலா, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.இந்த மாவட்டங்களில், எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்பது, பின் அறிவிக்கப் படும். மாவட்ட எல்லை வரையறை பணிகளை, தனி அதிகாரி மேற்கொள்வார். பொது மக்களின் கருத்து அடிப்படையில், மாவட்ட வரையறை செய்யப்படும்.
சட்டசபையில், இந்த அறிவிப்புக்காக, முதல்வருக்கு, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் நன்றி தெரிவித்தார்.
அப்போது, ''கும்பகோணம் மாவட்டம் ஏற்படுத்தும் திட்டமும், பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.தென்காசி மாவட்டம் அறிவித்த முதல்வருக்கு, தென்காசி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வ மோகன் தாஸ் பாண்டியன், கடையநல்லுார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபூபக்கர் நன்றி தெரிவித்தனர்.
அமைச்சர் நன்றி
காஞ்சிபுரம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் யாரும், நன்றி தெரிவிக்க வில்லை. அமைச்சர் பெஞ்சமின், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
சிறப்பு குறை தீர்வு கூட்டம்
சட்டசபையில், நேற்று புதிய அறிவிப்பு ஒன்றையும், முதல்வர் வெளியிட்டார்.அதன் விபரம்:மக்கள் குறைகளைத் தீர்க்க, சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தின் வழியே, நகர வார்டுகளிலும், கிராமங்களிலும் நேரடியாக சென்று, மனுக்களை பெற்று, தீர்வு காண, முதல்வரின் சிறப்பு குறை தீர்வு கூட்டம் என்ற பெயரில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் வழியே, அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும், உரிய விளம்பரத்திற்கு பின், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அலுவலர்கள் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று, மனுக்களைப் பெறும்.இம்மனுக்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு, ஒரு வாரத்திற்குள் அனுப்பப்படும். இம்மனுக்கள் மீதான தீர்வுக்கு பின், செப்டம்பர் மாதத்தில், அமைச்சர்கள் தலைமையில், வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும்.
பல்வேறு நலத்திட்ட பயன்களை, விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைதேவைகளுக்கு, தீர்வு காணப்படும். இந்த சிறப்பு திட்டத்தை, செம்மையாக நடைமுறைப்படுத்த, தாலுகாவிற்கு, 25 ஆயிரம் வீதம், 76.25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய, ஆர்.டி.ஓ., அலுவலகம்
*திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி; மதுரை மாவட்டம், திருமங்கலம் கோட்டங்களுக்கு, 6.26 கோடி ரூபாய் செலவில், புதிய கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும்
குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்படும்.
*நாமக்கல் - மோகனுார்; திருநெல்வேலி - திசையன்விளை; மதுரை - கள்ளிக்குடி; துாத்துக்குடி - ஏரல்; ராமநாதபுரம் - ஆர்.எஸ்.மங்கலம்; கோவை - ஆனைமலை; கிருஷ்ணகிரி - அஞ்செட்டி; கன்னியாகுமரி - திருவட்டாறு, கிள்ளியூர்; திண்டுக்கல் - குஜிலியம்பாறை; திருவள்ளூர் - ஆர்.கே.பேட்டை; விருதுநகர் - வத்திராயிருப்பு; கரூர் - புகளூர் ஆகிய, 13 தாலுகா அலுவலகங்களுக்கு, அலுவலக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள், 60.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
* 'கஜா' புயலில் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில், மீனவஇளைஞர்களுக்கு, நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்த, 31.15 கோடி ரூபாய் செலவில் வழிவகை செய்யப்படும்.
* மேம்படுத்தப்பட்ட, 29 நகரங்களில், மறு நில அளவைப் பணிகள், 30.29 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, மூன்று தொகுதிகளாக, மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.
அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்!
காவிரி பாசன பாதுகாப்பு விவசாய சங்க செயலர், சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
கும்பகோணம், 1866ம் ஆண்டு முதல், நகராட்சி அந்தஸ்து பெற்று, சிறப்பு நகராட்சியாக செயல்படுகிறது. கும்பகோணத்தில், மாவட்டத் தலைநகரங்களில் இருப்பது போல, தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி உள்ளன.
மேலும், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, அரசு போக்குவரத்து கழக கோட்டமும் செயல்படுகிறது. மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவை உள்ளன.தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, கால் நுாற்றாண்டாக, பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தோம். ஆனால், அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
35 மாவட்டம்
தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்தன. ஜனவரியில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது புதிதாக, தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப் படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் மாவட்டங்கள் எண்ணிக்கை, 35 ஆக உயர உள்ளது.

No comments:
Post a Comment