Friday, July 5, 2019

தேச துரோக பேச்சுக்கு, 'ஆப்பு' வைகோவுக்கு 'கம்பி'.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில், அவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம், நேற்று தீர்ப்பு வழங்கியது.
vaiko,தேச துரோக பேச்சு,ஆப்பு,வைகோ,கம்பி

வழக்கு:

சென்னை, ராணி சீதை மன்றத்தில், 2009 ஜூனில், 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற, புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக, வைகோ மீது, சென்னை, ஆயிரம்விளக்கு போலீசார், தேச துரோகம் மற்றும் மக்கள் மனதில் வன்முறையை துாண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், எட்டு ஆண்டுகளாக, எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், தானே சரணடைவதாக, 2017 ஏப்ரல், 4ல், நீதிமன்றத்தில் ஆஜரானார், வைகோ. அதன் பின், 52 நாட்கள், புழல் சிறையில் இருந்தார்; மே, 25ல், ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 2018 ஆக., 2ல், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பின், அதே ஆண்டு செப்டம்பரில், எம்.பி., - எம்.எல்.ஏ.,-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி, ஜெ.சாந்தி முன், விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி வாதாடினார். வைகோ தரப்பில், மூத்த வழக்கறிஞர் தேவதாஸ் வாதாடினார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, ஜூன், 19ல், நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதி, ஜெ.சாந்தி, நேற்று தீர்ப்பு வழங்கினார்.
வன்முறை துாண்டல்:

தீர்ப்பு விபரம்: விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்த, இரண்டு மாதத்தில், புத்தக வெளியீட்டு விழா நடந்துள்ளது. அந்த நேரத்தில், மத்திய - மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தது. இது போன்ற சூழ்நிலையில், வைகோ பேசியது, பொது மக்கள் மனதில் கடும் தாக்கத்தையும், விளைவுகளையும் ஏற்படுத்தும் விதமாக இருப்பது தெரிகிறது.

பொது மக்கள் மனதில், வன்முறையை துாண்டும் வகையில், குற்றவாளியின் பேச்சு இருந்ததால், இந்திய தண்டனை சட்டப்படி, அவருக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வைகோ ஆவேசம்!
தீர்ப்பு நகலை படித்து பார்த்த வைகோ, ''குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு, நான் கேட்கவில்லை. நான் கூறாத வார்த்தைகள், தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன. எனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குங்கள். ஆயுள் சிறை தண்டனையாக இருந்தாலும், அதை ஏற்க தயாராக வந்துள்ளேன்,'' என, ஆவேசமாக தெரிவித்தார்.

தண்டனை நிறுத்தம்!
தீர்ப்பு வழங்கியதும், மேல்முறையீடு செய்வதற்காக, தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, வைகோ தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதி, வைகோவுக்கு விதித்த சிறை தண்டனையை, ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...