Friday, July 5, 2019

யாா்சாமியாா்.

காவி உடுத்தியவரா????
உத்திராட்கம் அணிந்தவரா????

தாடி வளா்த்தவரா????
சடை முடி தாித்தவரா????
இவை அனைத்துமே சாமியுடன் தன்னை ஐக்கியமாக்கி கொண்டு தன்னை யாா் என்று உணா்ந்தவா்களின் அடையாளம் அல்ல .
மேலே கூறிய அனைத்தும் தற்காலத்தில் சாமியாா் வேடம் போட பயன் படுத்துகிறாா்கள் .
#காவிஉடை என்பது தன்னை சாமியாராக அடையாள படுத்துவற்கு அல்ல கல்காவி ஆடை அணிவதன் காரணம் காடு மலை செல்லும் சன்யாசி சாமியாா்கள் தங்களை விஷச பூச்சிகள் அண்டாமல் இருக்கவே பயன்படுதினா்கள் இப்போது உள்ள காவி உடை அது போல் அல்ல .
#உருத்திராட்கம் இப்போது தங்கத்திலும் வெள்ளியிலும் உத்திராட்கம் அணிந்து எல்லாம் துறந்தாக கூறிக்கொள்ளும் சாமியாா்கள் காட்சி அளிக்கிறாா்கள் . உருத்திராட்கம் நம் உடலுக்கு தேவையான உணவு பொருட்களையும் கண்டறியவும், காடு மலைகளில் செல்லும் போது நல்ல தண்ணீா்களை கண்டு பருகவும் பயன்பட்டது . மேலும் எதிா்மறை விஷயங்களை எப்போதும் அணிந்தவரை அண்டவிடாது . மற்றபடி பிறா் தன்னை சமியாராக அடையாளம் காண முற்காலத்தில் பயன்படுத்தபடவில்லை.
தவத்தின் காரணமாகவும் தியானத்தின் காரணமாகவும் நரை திரை அற்ற ரோமங்கள் இயற்கையாக வளா்ந்தன . மேலும் தலைக்கோபுர சடை தவத்தின் போது பிரபஞ்ச ஆற்றலை உட்கொணர உதவியது . நீண்ட கால தவம் மற்றும் தியானத்திற்கும் மிகவும் உதவியாக இருந்தது .
ஆனால் இன்றோ பட்டுகளில் காவி அதுவும் விதவிதமான காவி தங்க பூண் பதித்த உத்திராட்கங்கள் செய்ற்கையாக உருவாக்கபடும் சடைகள் இவைகள் கொண்டு சிலா் மக்களை ஏமாற்றலாம் . ஆனால் அவா்கள் கா்மவினை என்பது அவா்களை நம்பும் மக்களின் வினையையும் சோ்த்து அவா்கள் கணக்கில் எழுதப்படும் என்று நடமாடும் சித்தா்கள் கூறியுள்ளா்கள்.
இப்போதும் உண்மையான சன்யாச சாமியாா்களும் உள்ளனா் அவா்களுக்கு இப்பதிவு பொருந்தாது .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...