நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்' என கூறினார்.
இதன்மூலம் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
No comments:
Post a Comment