Thursday, July 18, 2019

கல்வி பயில தேவையான அனைத்துமே கிட்டத்தட்ட இலவசம்!

📚📚📚📚📚
* அரசு பள்ளிகளில்
மாணவர் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இருந்ததை விட 
இந்த ஆண்டு
2 லட்சத்து 47 ஆயிரத்து
6 நூற்று 29 குறைந்து விட்டது!
*அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மாணவர் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இருந்ததை விட
இந்த ஆண்டு
ஒரு லட்சத்து 67 ஆயிரத்து
தொள்ளாயிரத்து 29
குறைந்து விட்டது!
*அரசு பள்ளிகள் மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மொத்தத்தில்
4 லட்சத்து 15 ஆயிரத்து
ஐநூற்று 58 குறைந்து விட்டது!
* அதே சமயம் ,
தனியார் பள்ளிகளில்
மாணவர் எண்ணிக்கை
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
12 லட்சத்து 10 ஆயிரத்து 55
அதிகரித்து இருக்கிறது!
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் குறைந்தது - 4, 15, 558.
தனியார் பள்ளிகளில்
அதிகரித்து ------------------------- 12, 10,055
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளின் இழப்போடு
ஒப்பிடும்போது
தனியார் பள்ளிகளின்
மாணவர் எண்ணிக்கை
நான்கு மடங்கு (கொஞ்சம் குறைவு )
அதிகரித்து இருக்கிறது!
* கட்டணம் எதுவும் இல்லாத
இலவச கல்வி.
இலவச சீருடை
மதிய உணவு
இலவச பாட நூல்கள்
இலவச கல்வி உபகரணங்கள்
இலவச மடிக்கணினி
கல்வி பயில தேவையான
அனைத்துமே கிட்டத்தட்ட இலவசம்!
ஆனால் ,
இந்த வாய்ப்பை துறந்து
தங்களது குழந்தைகளின்
கல்விக்கான இத்தனை செலவுகளையும்
சுமக்க விரும்பும் பெற்றார் எண்ணிக்கை
பல மடங்காக அதிகரித்து வருகிறது
என்பதையே இது காட்டுகிறது!
சமுதாய அளவில்
குழந்தைகளின் கல்வியானது
வாழ்வின் முக்கிய அம்சமாக
மாறிவிட்டது என்பதன் ஒரு வகை
குறியீடாக இதை கொள்ள வேண்டுமா
என்று தெரியவில்லை!
கீழ் தட்டு மற்றும்
கீழ் நடுத்தரப் பிரிவு மக்களின்
எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது
என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது
என்று கொள்ள வேண்டுமா
என்றும் தெரியவில்லை!
அதேசமயம் ,
எல்லா தனியார் பள்ளிகளும்
அரசு அல்லது அரசு உதவிபெறும்
பள்ளிகளை விட தரமான கல்வியை
தருகின்றன என்று சொல்லிவிட முடியாது!
மக்கள் தனியார் பள்ளிகளை
தேடிச் செல்ல
அரசு பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் தான் காரணம் என்ற
ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் , 85 முதல் 90 சதவீத
ஆசிரியர்கள் சிறப்பாக
செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை!
எனவே ஆசிரியர்கள் மீது
சுமத்தப்படும் குற்றச்சாட்டு
மிகைப்படுத்தப்பட்ட ஒன்று தான்!
தனியார் பள்ளிகளின் பெருக்கத்தை
மாநில அரசே ஊக்குவிக்கிறதோ
என்று தோன்றுகிறது!?
காரணம் ,
மக்கள் தொகை அதிகமாக உள்ள
நகரங்களில் பள்ளிக் கல்வியின்
தேவையை அரசே நிறைவு
செய்துவிட முடியாது என்பதால்
தனியார் பள்ளிகளுக்கான
அங்கீகாரத்தை அளிப்பதில் தவறு இல்லை.
ஆனால் , சமீப காலங்களில்
சின்னஞ் சிறிய நகரங்கள்
சிற்றூர்கள் - கிராமங்கள் என்று
தனியார் பள்ளிகள் இல்லாத
இடமேயில்லை என்ற நிலை
உண்டாகி இருக்கிறது.
* ஆசிரியர்களின் சம்பளம்
பலமடங்காக உயர்ந்த பிறகு
மாநிலங்களின் கல்வித் துறைக்கான
ஒதுக்கீட்டில் பெரும்பகுதி
சம்பளத்திற்கு சென்றுவிடுகிறது!
* கல்வித்துறைக்கான செலவு
மனித வள மேம்பாட்டிற்கான முதலீடு
என்ற எண்ணம் இப்போது இருக்கும்
அரசியல்வாதிகளிடம் இல்லை!!
மாறாக கல்வித் துறை செலவு
லாபம் தரும்முதலீடு அல்ல என்ற மனப்பான்மையும் இதற்கு காரணம்.
* மத்தியில் மன்மோகன் சிங்கின்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட
கல்வி உரிமை சட்டம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத
இடங்களை ஏழை மாணவர்களுக்கு
ஒதுக்க வேண்டும் -- அவர்களுக்கான
கட்டணங்களை மாநில அரசு
செலுத்த வேண்டும் என்றது!
வளர்ந்து விட்ட தனியார் பள்ளிகளுக்கு
இந்த சட்டம் கசப்பானது என்றாலும்
புதிய தனியார் பள்ளிகளுக்கு
25 சதவீத இடங்கள் நிச்சயிக்கப்பட்ட
வருமான வாய்ப்பாக அமைந்து இருக்கிறது!
* இந்த பின்னணியில்
துவக்கப்பட்ட தனியார் பள்ளிகள் எத்தனை;
அரசியல்வாதிகளால் அல்லது
அவர்களுக்கு நெருக்கமானவர்களால்
துவக்கப்பட்ட தனியார் பள்ளிகள்
எத்தனை என்று நமக்கு தெரியாது!
 தேசிய கல்விக் கொள்கைக்கும்
இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!
📚📚📚📚📚

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...