Thursday, July 18, 2019

" ஞானி "

 தத்துவத்தை தெரிந்து கொண்டால் மட்டும் ஒருவர் ஞானி அல்ல
எந்த சூழலையும் வெறுப்பின்றி அதை அப்படியே ஏற்றுக் கொண்டும்
யாருக்கும் பாதகமில்லாமலும் வழி நடத்தி செல்பவரே உண்மையான ஞானி
சாக்ரடீஸ் இல்லற வாழ்வில்
ஒருமுறை தன் மனைவியின் கோவத்தை கண்டு கொள்ளாமல்
அவர் அமைதியாக இருந்த போது
மனைவியின் கோவம் உச்சத்தை அடைந்து
சாக்ரடீஸ் தலையில் ஒரு வாலி தண்ணீரை கொட்டியதற்கு.......
ஞானியின் பதில் ; இவ்வளவு நேரம் பலத்த இடி இடித்து கொண்டு இருந்தது.....
இப்போது மழை பெய்து விட்டதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.....
இடி இடித்தால் மழை வரும் என்பது இயற்கை விதி தானே".......
என்று அதற்கும் எதிர்வினையைக் காட்டாமல்
தம் ஞானத் தன்மையையே வெளிப் படுத்தி இருக்கிறார்
இவரல்லவோ இல்லற ஞானி
இன்றைய காலகட்டத்திலும்
எத்தனையோ இல்லற ஞானிகள் இருக்கிறார்கள்
என்பதை வெளியில் சொல்லாமல் அவரவரே தீர்வு செய்து கொள்ளலாம்
இடியும் மழையும் இல்லறத்தை மட்டுமல்லாது....
உலகையும் வளம் பெறச் செய்யட்டும்
ஏற்றுக்கொள்தலே ஞானம் அன்றோ 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...