யோவ்.... எத்தனை யுனிவர்சிட்டி திறந்து வச்சீரு... அதுல ஏதாவது ஒண்ணுல டாக்டர் பட்டம் வாங்குனீராயா? இல்லைல? அப்புறம் எதுக்கு உம்மை 'கல்விக்கண் திறந்தவர்'ன்னு சொல்றாய்ங்க?
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை ரிசார்ட்களுக்கு கடத்திட்டு போயி 'எல்லாம்' கொடுத்து ஒரு நாள் வச்சிருக்க தெரியுமாய்யா? அட்லீஸ்ட் ஓட்டுக்கு ரூபாயாச்சும் கொடுத்துருக்கீரா நீர்? இல்லைல? அப்புறம் எதுக்கு உம்மை 'கிங் மேக்கர்'ன்னு சொல்றாய்ங்க?
'நான் ஏழைத்தாயின் மவன்'ன்னு சொல்லி என்னைக்காவது ஓட்டு பிச்சை கேட்டுருக்கீரா? பத்து லட்ச ரூபாய் கோட்டை கண்ணால பாத்துருக்கீரா? இல்லைல? அப்புறம் என்னத்துக்கு உம்மை 'ஏழைகளின் பங்காளன்'ன்னு சொல்றாய்ங்க?
சும்மா அணைகள் கட்டுனேன், ஆலைகள் கட்டுனேன்னு சொல்றீரே, ஒரு டாஸ்மாக் கடை ஓபன் பண்ணிருப்பீரா? இல்ல கட்ட டெண்டர் விட்டதுல 30% கமிஷனாவது கரெக்ட் பண்ணிருப்பீரா? இல்லைல? அப்புறம் எதுக்கு உம்மை 'கர்மவீரர்'ன்னு சொல்றாய்ங்க...
மூணு தடவை முதலமைச்சர் ஆக்குனோம்ல? சொந்தமா ஒரு வீடு கட்டுனீரா? கண்டெயினர் கண்டெயினரா சேர்க்காட்டாலும் ஒரு தள்ளுவண்டில தூக்கிட்டு போற அளவுக்கு பணம் சேர்த்தீராய்யா? அட்லீஸ்ட் ஒரு பினாமியாச்சும் இருக்காய்யா? இல்லைல? அப்புறம் என்னத்துக்கு உம்மை 'தன்னலம் இல்லா உத்தமன்'ன்னு சொல்றானுங்க?
கட்டுன பொண்டாட்டிய 'திராட்'ல விட்டுருக்கீரா? இல்ல மனைவி, துணைவி, இணைவின்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வச்சிக்க தில் இருக்கா? பெத்த புள்ளைய அது என் புள்ளையே இல்லன்னு சொல்லிருக்கீரா? இல்ல புள்ள திராட்சை தோட்டத்துல இருக்கு, நாலு கடல் தாண்டி இருக்குன்னு பேச வச்சிருக்கீரா? இல்ல இரண்டாவது காமராஜர், மூன்றாவது கர்மவீரர்ன்னு யாராச்சும் பெத்து போட்டுருக்கீரா? அப்புறம் என்னத்துக்கு உம்மை 'பெருந்தலைவர்'ன்னு சொல்றானுங்க?
சாதி அரசியல் பண்ண தெரியாது... மத அரசியல் வரவே வராது... உணர்ச்சி அரசியல்ன்னா என்னனு கேப்பீரு... சமூகநீதி, மறுமலர்ச்சின்னு வாய்ச்சவடாலும் தெரியாது... கல்வியும், உழைப்பும் தான் முக்கியம்ன்னு தூக்கி பிடிச்சிட்டு இருப்பீரு... அப்புறம் என்னத்துக்கு உம்மை 'கருப்பு காந்தி'ன்னு சொல்றானுங்க?
நாங்க வாழுற காலத்துல நீர்லாம் வாழ தகுதியே இல்லைய்யா... திரும்பி பொறந்து கிறந்து தொலச்சிடாதீரும்... எங்களுக்கு நல்லது பண்ணி எங்கள முன்னேத்தி தொலஞ்சிட போறீரு...
No comments:
Post a Comment