கர்நாடகா சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் வஜுபாய் வாலா, இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தும், முதல்வர் குமாரசாமி மதிக்கவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. சபை, வரும், 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், 16 பேர் ராஜினாமா செய்திருப்பதால், அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. முதல்வர், குமாரசாமி, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, நேற்று முன்தினம், சட்டசபையில் கொண்டு வந்தார்.
ஒத்திவைப்பு
இது குறித்த விவாதத்தில், முதல்வர் பேச ஆரம்பித்த உடனேயே, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா குறுக்கிட்டார். அப்போது, 'ராஜினாமா செய்த, எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு வரும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தீர்வு கிடைக்கும் வரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது' என்றார்.
இதனால், நேற்று முன்தினம் விவாதம் மட்டுமே நடந்தது; ஓட்டெடுப்பு நடத்தப்பட வில்லை. விவாதத்திற்குப் பின்,சட்டசபை கூட்டம், நேற்று முன்தினம் ஒத்தி வைக்கப்பட்டது.இதை கண்டித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை வளாகத்திலேயே துாங்கி, உள்ளிருப்பு போராட்டம்
நடத்தினர்.இதற்கிடையில், நேற்று மதியம், 1:30 மணிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்று முன்தினம் இரவு கெடுவிதித்தார்.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. முதல்வர் குமாரசாமி, தன் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது, நேற்றும் பேச துவங்கினார்.
கவர்னர் அளித்த கெடு, மதியம், 1:30 மணிக்கு முடிந்தும், ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.
இது பற்றி சபாநாயகர் விளக்கம் அளிக்கையில், ''விவாதம் நடத்தாமல், ஓட்டெடுப்பு நடத்த முடியாது; இதற்கு முதல்வர் தான் பொறுப்பு,'' என்றார்.
மவுனம்
ஆனால், முதல்வர் எந்த பதிலும் கூறவில்லை. காங்கிரஸ் தரப்பில், 'நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதம் நடந்து வருவதால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர் இடையூறு செய்ய முடியாது' என்றனர்.மதிய உணவு இடைவேளைக்கு பின், சட்டசபை மீண்டும் கூடியதும், 'மாநிலத்தில், 'குதிரை பேரம்' நடப்பதாக தகவல் வந்துள்ளதால், மாலை, 6:00 மணிக்
குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள்' என, கவர்னரிடமிருந்து இரண்டாவது உத்தரவு வந்தது.
இதையடுத்து, முதல்வர் குமாரசாமி, ''பெரும்பான்மையை நிரூபிக்க நான்தயார். சபாநாயகர் உத்தர விட்டால், உடனடியாக ஓட்டெடுப்புக்கு முன் வருகிறேன்,'' என்றார். ஆனால், சபாநாயகர் எதுவும் கூறவில்லை. பா.ஜ., தரப்பில், 'உடனடியாக ஓட்டெடுப்பு நடத்தி, கவர்னர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை நிலை நாட்டுங்கள்' என, வலியுறுத்தப்பட்டது.
இந்த வேளையில் குறுக்கிட்ட ஆளுங் கட்சியினர், 'அரசின் சாதனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைக்கு காரணம் பற்றி, உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டியுள்ளதால், செவ்வாய்க்கிழமை ஓட்டெடுப்பு நடத்தலாம்' என, கோரினர்.இதை ஏற்க மறுத்த சபாநாயகர், ரமேஷ்குமார், ''ஒரு விஷயத்தை இழுத்து கொண்டே செல்ல முடியாது. விரைவில் முடிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை வரை நேரம் வழங்க முடியாது,'' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.
உடனே குமாரசாமி, ''சில உறுப்பினர்கள் முக்கியமான விஷயம் பேசவுள்ளனர். இதனால், வரும், திங்கிட்கிழமை ஓட்டெடுப்பு நடத்துகிறோம் என உறுதியளிக்கிறேன்,'' என்றார்.இதற்கு சபாநாயகர், ''உறுதியா, உறுதியா?'' என இரு முறை கேட்டார்.
இறுதியில் காங்கிரஸ் தரப்பில், சித்தராமையா பேசுகையில், ''எங்கள் உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிமை இருப்பதால், அவர்களை பேச அனுமதியளியுங்கள். திங்கிட்கிழமை எந்நேரமானாலும்ஓட்டெடுப்பு நடத்தலாம்,'' என்றார்.இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், எடியூரப்பா, ''இரவு, 11 மணி அல்லது 12 மணியானாலும் ஓட்டெடுப்பு நடத்தியே தீர வேண்டும்,'' என்றார். இறுதியில், கவர்னர், இரண்டு கடிதங்கள் அனுப்பியும், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. ஓட்டெடுப்பு நடத்துவதில், தொடர்ந்து, தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சட்டசபை திங்கட்கிழமை காலை, 11 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
கொறடா உரிமையை பறிப்பதா?சுப்ரீம் கோர்ட்டில் காங்., மனு
கர்நாடக மாநில, காங்கிரஸ் தலைவர், தினேஷ் குண்டு ராவ், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கர்நாடகாவில், ஆளும் கூட்டணி கட்சிகளின் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபைகூட்டத்தில் பங்கேற்கும்படி, சம்பந்தப்பட்ட கட்சி மேலிடங்கள், கட்டாயப்படுத்தக் கூடாது' என, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும், யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க, சம்பந்தப்பட்ட கட்சிகளின் கொறடாக்களுக்கு,
சட்டப்பூர்வமான உரிமை உள்ளது.இந்த சட்ட உரிமையை மீறும் வகையிலும், பறிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. கொறடா உத்தரவு தொடர்பான விஷயங்களில், நீதிமன்றம் தலையிடக் கூடாது.
அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும்போது, அதில், காங்கிரஸ் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும். இந்த வழக்கில், காங்கிரசையும், ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment