சமைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அரிசியையும் பருப்பையும் ஊற வைத்து விடுங்கள். சீக்கிரம் வேகும், சமையல் எரிவாயுவும் மிச்சமாகும்.
மொச்சை, சுண்டல், பட்டாணி, கொள்ளு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து வேகவிடவும். இதனால் இரண்டு விசிலிலே வெந்து விடும்.
பிரஷர் குக்கரைப் பயன்படுத்த இயன்ற போது அதற்கெல்லாம் குக்கரைப் பயன்படுத்துங்கள்.
பாத்திரத்தை மூடியிட்டு வேகவைக்கவும், இதனால் உணவுப்பொருள்கள் சீக்கிரம் வேகும்.
அளவான தண்ணீர் ஊற்றி உணவுப்பொருட்களை வேகவிடவும்.
புளி, வெல்லம் இரண்டையும் முதலிலே சேர்க்க கூடாது. உணவுப்பொருட்கள் வேக தாமதாமாகும்.
பொரிக்க வேண்டிய உணவுகளை, மசாலாவில் நன்கு ஊற வைத்துப் பொரித்தால், உடனடியாக வேகும்.
வதக்கும்போதே பாதி வெந்துவிடுகிற காய்கறிகளை, மூடிப் போட்டு வேக வைத்தால் அந்த ஆவியிலேயே முழுதாக வெந்துவிடும். எ.கா: புடலங்காய்.
பாத்திரங்களில் துளிகூட ஈரமில்லாமல் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு அடுப்பில் ஏற்றினால், சட்டென்று சூடாகும்.
சமைப்பதற்கு முன்னால் தாளிக்கும் சாமானிலிருந்து நறுக்கிய காய்கறிகள்வரை பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு சமையுங்கள்.
சமைக்கிற பொருளின் அளவுக்கு ஏற்றபடி, பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள்.
உலை தண்ணீரை அளவாக வைத்து மூடி விடுங்கள். சீக்கிரம் உலை கொதித்து, அரிசியும் சீக்கிரம் வேகும்.
பால் காய்ச்ச, குடிக்க தண்ணீர் கேஸ் ஸ்டவுக்குப் பதில் கெட்டிலைப் பயன்படுத்தலாம்.
சமைத்ததை மறுபடியும் சூடு செய்ய கேஸ் ஸ்டவ்வைப் பயன்படுத்துவதைவிட, இன்டக்ஷன், மைக்ரோவேவ் பயன்படுத்தினால் சமையல் கேஸை மிச்சம் பிடிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களை சமைக்கும் நேரத்துக்கு முன்னரே வெளியில் எடுத்து வைத்துவிட்டால், சமைப்பதற்கு அதிகமாக கேஸ் செலவழியாது.
No comments:
Post a Comment