Friday, July 19, 2019

" எண்ணங்கள் "

உயர்ந்த எண்ணங்கள்
*என்றும் உயர்வை தரும்*
தாழ்ந்த எண்ணங்கள்
*என்றும் தாழ்வை தரும்*
எண்ணங்கள் உயர உயர
*வாழ்க்கை உயரும் என்பதை நினைவில் கொள்*
ஜெயித்துக் கொண்டே இரு.
நீ வளரும் வரை அல்ல.
*உன்னை வெறுத்தவர்கள் உன்னை பார்த்து வியந்து வாழ்த்தும் வரை*
நன்மையோ தீமையோ அவரவர் செய்யும் செயல்களுக்கு உண்டான பலனை
*இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்*
உன்னால் ஒருவர் மனமுடைந்து அதை இறைவனிடம் முறையிட்டு அழம் நிலைக்கு கொண்டு செல்லாதே.
*ஏனெனில் உடைக்கப்பட்ட மனங்களின் வேண்டுதல்கள் இறைவனிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவை. உன்னை விரட்டி விரட்டி தண்டிக்கக் கூடியவை*
ஒருவனுக்கு ஆன்மீக பாதையில் நாட்டம் ஏற்படவில்லை என்றால்.
*அவன் அதிக பாவம் செய்துள்ளான் என்று பொருள்*
மெதுவாய் பேசு
*அது உன் ரகசியகளைப் பாதுகாக்கும்*
நல்ல எண்ணத்தோடு இரு
*அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்*
எத்தனை முறை நீ ஏமாற்றப்பட்டாலும்.
*ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக்கோள்ளாதே*
அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்.
*நேர்மைக்கு என்றுமே மரணமில்லை*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...