திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு அருகில்மை ந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில்.இக்கோயில் காண்போரை பிரமிக்க வைக்கும்.நந்த வனங்கள்,கிணறு இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின் சில பகுதி குடைந்து தூண்கள் மற்றும் இரு அறைகள் காண்ப்படுகின்றன.
#கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:
திராவிடக் கட்டிடக்கலை
திருவெள்ளறை என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது. இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். தொகு
அமைந்துள்ள இடம்
கட்டடக்கலை வடிவமைப்பு:
திராவிடக் கட்டிடக்கலை
திருவெள்ளறை என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது. இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார். தொகு
அமைந்துள்ள இடம்
தொகு
மூலவர் தொகு
புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
மூலவர் தொகு
புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார் தொகு
செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
#பெயர்க்காரணம் தொகு
இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது.[1] திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.
#தீர்த்தம் தொகு
திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.
#விமானம் தொகு
#விமலாக்ருதி விமானம்.
#சிறப்பம்சம் தொகு
எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
சுவாமி கரத்தில் பிரயோக சக்கரம்.. சுவாமியின் #திருமுகம்_பார்த்த வண்ணம் #சக்கரம் இருப்பது #விசேஷம். இது மூன்று ஸ்தலங்களில் உள்ளது. மற்ற இரண்டு.. #ஸ்ரீரங்கத்தில் ஒரு பெருமாள் சந்நிதி... மற்றும் #திருக்கண்ணபுரம் ....
சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் பெயர் வந்தது.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை. இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’. தாயாருக்கு சிறப்பம்சம் உள்ள இவ்விடத்தில் அவரை வணங்கிய பின்னே இறைவன் சந்நதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடு ஆகும்பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, மூலவர் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின்தொடர்வார்.
மங்களாசாசனம் தொகு
பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். மொத்தம் 24 பாசுரங்கள்.
திருவெள்ளறை அழகன் (பெரியாழ்வார் பாசுரம் 192 - காப்பிடல்)
இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார், சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறைj நின்றாய், அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்

No comments:
Post a Comment