Wednesday, October 9, 2019

இதுபோன்ற மனிதர்கள் அதற்கும் வக்கற்று போகிறார்கள்.

ஒவ்வொரு திருமண வீடுகளும் ஒரு கொண்டாட்டமான நிலை. பெரும்பாலானோர் முகங்களில், ஆடைகளில் ஆனந்தமும் சந்தோஷமும் நிரம்பி வழியும். ஆனால் அங்கே அறம் நிரம்பி வழிகிறதா எனில் யோசிக்க வேண்டியதாய் உள்ளது. ஒரு சமூகம் இக்கட்டான சூழ்நிலையிலும், கொண்டாட்டமான சூழ்நிலையிலும் என்ன செய்கிறது என்பதை பொறுத்தே அதன் சமூக அக்கறை தீர்மானிக்கப்படும்.
நான் எல்லா திருமண வீடுகளிலும் காணும் காட்சி உணவு விரயம் ? ஒவ்வொரு பந்தி முடிந்த பிறகும் குவிந்து கிடக்கும் இட்லிகளும், பூரிகளும், வெண்மையான சாதங்களும் பெரும் வலியை உண்டு செய்யும். இது புறமெனில்... இன்னொரு பக்கம் தனக்கு என்ன தேவை என்பதை கூட தெரியாமல், எவ்வளவு சாப்பிட முடியும் என்பதை கூட புரிந்துகொள்ளாமல் வாங்கி குப்பைக்கு அனுப்பும் மக்கள் ? காபி தேநீர் என குடித்த குவளைளை வீசி யெறியும் மக்கள் என எனக்கு அவர்கள் எரிச்சலையே உண்டு செய்கிறார்கள்.

Image may contain: one or more people
ஹோட்டலில் என்ற தங்கள் குழந்தைக்கு தனி இலை வேண்டாமென ஊட்டிவிடும் பெண்கள், திருமண வீட்டில் தனி இலை போட சொல்கிறார்கள். ஒரு இட்லியில் பாதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியெல்லாம் குப்பைக்கு அனுப்பி விடுகிறது அந்த குழந்தை. ஒரு உணவு கிச்சனில் இருந்தா வருகிறது ? நிலத்தில் இருந்து அல்லவா ? எத்தனை மனிதர்களின் உழைப்பை அது விழுங்கி இருக்கிறது ?
கை கழுவும் இடத்தில் அப்படியே பேப்பர்க் கப்கள வீசீயெறியும் அந்த அறிவாளித்தனம் எங்கிருந்து வாய்க்கப்பெற்றார்கள் ? குப்பை அள்ளுபவர்கள் மனிதர்கள் இல்லையா ? உங்கள் எச்சில் டம்ளர்களை அவர்கள் கைகொண்டு அள்ளவேண்டுமா ? அதுவும் நீங்கள் வாய் கொப்புளித்து உங்களை சுத்தம் செய்த இடத்தில் இருந்து ? இது ஒருபக்கமெனில்... பரிமாறும் அந்த மனிதர்கள்... ஒட்டுமொத்த ஒரு வேளை விருந்தே 2 மணி நேரம் தான் நடக்கும், அதில் அவர்கள் கேட்டு சிரித்து பறிமாரமுடியாதா ? அவருக்கு அது வேண்டுமா வேண்டாமா என்ற கவலையெல்லாம் இல்லை.. இலையில் கொட்டிவிட்டு செல்கிறார்கள்... அல்லது கேட்டாலும் கிடைக்காதபடி செய்கிறார்கள்.
உணவை குப்பைக்கு அனுப்பும் சமூகம் குப்பையிலும் கீழானது. ஏனெனில் குப்பை மறுசுழற்சிக்கும் வரும். இதுபோன்ற மனிதர்கள் அதற்கும் வக்கற்று போகிறார்கள். உணவு உண்பதே ஒரு சமூக தேடலாக பலருக்கு இருக்க, கிடைக்கும் உணவை வீசியெறியும் இவர்கள் சமூக கேடுகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...