நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பெற்றோர்களையும் பெரிதாக பலரும் கண்டிக்காதது ஏனென்று தெரியவில்லை.
இப்படி குறுக்கு வழியில் சேர்ந்து நியாயமாக சீட் கிடைக்க வேண்டிய தகுதியான மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுத்தவர்கள்.. படித்து முடித்ததும் நேர்மையான மருத்துவர்களாகவா உருவாகப் போகிறார்கள்? அவர்களால் சமுதாயத்திற்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இருக்கப் போவதில்லை.
கிட்டத்தட்ட பத்து பேர் என்கிறார்கள். இந்த பூதம் இன்னும் எவ்வளவு பெரிதாகக் கிளம்பப் போகிறதென்று தெரியவில்லை.
தங்கள் குழந்தைகளுக்காக லட்சம் லட்சமாக செலவு செய்து மோசடிக்குத் துணை போன அந்தப் பெற்றோர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும்!

No comments:
Post a Comment