இந்த காலக்கட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
வீடுகளில் பெண்கள் தனியாக இருக்கும் நேரத்தை பார்த்து வைத்துக் கொண்டுதான் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. நகைக்கு பாலீஸ் போடுவது, கத்தி சானை பிடிப்பது, எலக்ட்ரீஷியன் வேலை என ஏதேனும் காரணத்தைச் சொல்லி வரும் நபர்கள் பெண்களை ஏமாற்றி பணம், நகை மற்றும் மற்ற பொருட்களைத் திருடி செல்கின்றனர்.
அதிகரித்து வரும் இந்த மாதிரியான செயல்களைத் தடுக்க பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
முன், பின் தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். எலக்ட்ரீஷியன் வேலை போன்ற வீட்டிற்குள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு, வேலை செய்ய வரும் நபர் மீது எவ்வித சந்தேகமும் இல்லாத பட்சத்தில் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கலாம்.
அதிகாலை மற்றும் இருள் சூழ்ந்த மாலைப் பொழுதுகளில் தனியாக நடைப்பயிற்சி செல்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
வீட்டின் வாசற்கதவில் ஐ ஹோல் (நுலந ர்ழடந) பொருத்தவேண்டியது அவசியம். தனி வீடுகளில் இருக்கும் பெண்கள் கட்டாயம் காலிங் பெல் அடிக்கும் நபர் யார் என்பதை, ஐ ஹோல் வழியே பார்த்துவிட்டு பழகிய நபராக இருந்தால் மட்டுமே திறக்க வேண்டும்.
அருகில் வீடுகள் இல்லாதவர்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள எமர்ஜென்சி அலாரம் செட் செய்து வைப்பது நல்லது.
இதனால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தங்களுக்கு மட்டுமே தெரிந்த கருவிகளை இயக்கி, அலாரம் ஒலிக்கச் செய்யலாம்.
வீட்டைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தால், அப்பகுதிகளில் கேமராவினைப் பொருத்தி முகம் தெரியாத நபர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு உள் வேலைகளுக்கு பெண் வேலையாட்களையும், வீட்டின் வெளி வேலைகளுக்கு ஆண் வேலையாட்களையும் நியமித்துக்கொள்வது சிறந்தது. பவர் பாக்ஸையும் பூட்டி வைப்பது சிறந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தங்களை யாரேனும் பார்க்க வந்தால், உடனே எங்களுக்கு போன் செய்து கேட்டுவிட்டும், பின்னர் வரும் நபரின் விபரங்களை பெற்றுவிட்டும்தான் அனுப்பவேண்டும் என குடியிருப்பின் செக்யூரிட்டியிடம் சொல்லி வைக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளே, மேற்கண்ட பாதுகாப்பு ஆலோசனைகளை கடைபிடித்து உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment