Monday, October 14, 2019

*"உனக்கு தெரியுமா ராகுல்?"

1950 இல் நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து கொள்ள கேட்டு கடிதம் எழுதினார் நேபாளத்தின் மன்னர்.
அந்த காலகட்டத்தில் திபேத் தனி நாடாக இருந்தது.
நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்திருந்தால்...
நேபாளத்திற்கும் சைனாவுக்கும் நடுவில் இருந்த Buffer state திபேத் காப்பாற்ற பட்டிருக்கலாம்.
ஆனால், எவருடனும் கலந்தாலோசிக்காமல்...
நேபாள மன்னரின் கோரிக்கையை 'முடியாது' எ‌ன்று தன்னிச்சையாக (autocratic) முடிவு எடுத்தது...
உன் முப்பாட்டன் நேரு.
இது உனக்கு தெரியுமா ராகுல்?
1962 இல் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி...
இந்தியா அணு ஆயுத சோதனை (Detonation of Nuclear device) செய்ய முன்வந்தார்.
அன்று அதை செய்திருந்தால்...
அன்றே ஆசியாவில் சைனாவுக்கும் முன்பே முதல் அணு ஆயுத நாடாக இந்தியா மாறி இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால் நாம் அணு ஆயுத நாடுகள் குழுவின் (Nuclear Supply Group - NSG) ஸ்தாபன மெம்பர் ஆகியிருப்போம்.
1962ல் சைனாவும்...
1965ல் பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டி இருக்காது.
யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அமெரிக்காவின் உதவியை மறுத்தவர் உன் முப்பாட்டன் நேரு.
இதுவு‌ம் உனக்கு தெரியுமா ராகுல்?
யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள் ராகுல்.
07/07/1974...
தமிழ் நாட்டின் மானம் கப்பலேறிய நாள்.
அன்று தான் இந்திரா காந்தி *கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.*
இந்த இமாலய தவறால்...
இன்று வரை தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப் படுகின்றனர்.
கச்சத்தீவு இராமநாதபுரம் அரசை சேர்ந்தது.
இந்து மகா சமுத்தித்தில் மூலோபாயமானது.
(strategic)
தமிழ்நாட்டை கேட்காமல்...
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல்...
ஒரு ஒப்பந்தம் மூலம்...
(இது நீதிமன்றத்தில் இன்றும் செல்லாது)
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியவர் உன் பாட்டி இந்திரா காந்தி.
(அன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது திமுக.)
இதுவாவது தெரியுமா ராகுல்?
யாரிடம் கேட்க முடியுமோ கேட்டு தெரிந்து கொள் ராகுல்.
ஜூன் 25, 1975...
ஆம்,
உன் பாட்டி இந்திரா தன் பிரதமர் பதவியை சட்ட விரோதமாக தக்க வைத்துக் கொள்ள...
அரசியல் சட்ட Article 352 இன் கீழ் உள்நாட்டு அவசரநிலை (Internal emergency) அறிவித்த நாள்.
அன்று, திமுக உட்பட்ட எதிர் கட்சிகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தினம்.
அப்போது, இந்திராவின் மந்திரி சபையில் நிதி ராஜ்ய மந்திரி பிரணாப் முகர்ஜி என்ன கூறியுள்ளார் தெரியுமா?
அவரது புத்கம்
"The Dramatic Decade"
அத்தியாயம் "Midnight Drama"ல்...
"அரசியல் சட்டத்தில் உள்நாட்டு எமர்ஜென்சி அறிவிக்க வழி உண்டு என்பது இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஃபக்ருதீன் அகமதுக்கும் தெரியாது.
அதை அவர்களுக்கு கூறியவர் வங்காள காங்கிரஸ் முதலமைச்சர் சித்தார்த் சங்கர் ரே."
"இந்திராவும் சித்தார்த் ரே வும் 20 நிமிடங்களில், ஆமாம் வெறும் 20 நிமிடங்களில் ஜனாதிபதியை அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட வைத்தார்கள்."
இதற்கு 'மந்திரி சபை ஒப்புதல் எங்கே?' என்று கேட்ட ஜனாதிபதிக்கு இந்திரா கடிதத்தில் என்ன சொன்னார் தெரியுமா ராகுல்?
"அவசரநிலை முடிவு நான் தனி ஒருவராக எடுத்த முடிவு.
எனவே இதற்கு தேவையான மந்திரி சபை தீர்மானம் என்னிடம் இல்லை.
மந்திரி சபையிடம் கேட்கவில்லை.
நாளை காலை அவர்களிடம் சொல்வேன்" என்றார்.
அதாவது உன் பாட்டி (ஜனநாயகத்தை) உடைத்தால் அது மண்குடம் இல்லையா ராகுல்?
இதையும் தெரிந்து கொள் ராகுல்.
முப்பாட்டன், பாட்டி கதைக்கு பிறகு...
உன் அப்பன் ராஜீவ் காந்தி கதை சொல்கிறேன் கேள்.
இந்திய அமைதி காப்பு சேனையை (Indian Peace Keeping Force- IPKF) இலங்கைக்கு உன் அப்பா எப்படி அனுப்பினார் தெரியுமா?
எதிர் கட்சிகளை விடு...
அவங்களை கலந்து ஆலோசனை செய்வது உங்க பரம்பரைக்கே கிடையாதே.
மந்திரி சபை,
வெளிவிகார துறை மந்திரி, நரசிம்ம ராவ்,
வெளி விவகார மந்திராலய செக்ரட்டரி...
ம்ஹூம்..
யாரையைம் கேட்கவில்லை.
ஏன்? என்று கேட்டதற்கு உன் அப்பா என்ன சொன்னார் தெரியுமா?
"நான் ஏற்கனவே ஒரு டிவிஷன் படைகளை (23000 வீரர்கள்) இலங்கை செல்ல ஆணை (order) செய்து விட்டேன்" என்று.
இதனை வெளிவிவகார துறை ராஜ்ய மந்திரி, நட்வர் சிங் அவரோட புத்தகம்
"One Life is Not Enough" இல் வண்டவாளம் ஏற்றியுள்ளார்.
உன் அப்பா அன்று எடுத்த தவறான முடிவின் விலை என்ன தெரியுமா ராகுல்?
*1200 இந்திய ராணுவ வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்.*
தற்போது, மோதி அவர்கள் ராணுவ தியாகிகள் மெமோரியல் (Martyrs Memorial) திறந்தது...
'அரசியல்' என்று வாய் கூசாமல் பேசிய உனக்கு...
அன்று 'உயிர்தியாகம் செய்த 1200 IPKF வீரர்களுக்கு ஒரு மெமோரியல்கூட கட்டி அஞ்சலி செலுத்தவில்லை' என்பதாவது தெரியுமா அதிமேதாவி ராகுலே?
இதைவிட கேவலம்...
1989 ஆம் ஆண்டு IPKF இலங்கையிலிருந்து திருப்பியபோது...
தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சி.
அந்த IPKF வீரர்களை வரவேற்க கருணாநிதி ஒரு அரசு அதிகாரியை கூட அனுப்பவில்லை.
அனாதைகள், அகதிகள் போல் தனித்து நின்றனர் நம் ராணுவ வீரர்கள்.
இப்படிப்பட்ட பாரம்பர்யம் உன்னோடது...
(முப்பாட்டன், பாட்டி, அப்பன்)
இத்தனையும் உனக்கு தெரியுமா? தெரியாதா ராகுல்?
இவ்வளவு அவலத்தை உன் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு...
மோதியை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை உள்ளது ராகுல் தம்பி?
முதலில் உன் வீட்டு சரித்திரத்தை படிச்சிட்டு...
நீயாவது திருந்த முயற்சி செய் ராகுல் தம்பி.
"உன்னை சொல்லி குற்றமில்லை...
உன் தாயை சொல்லி குற்றமில்லை...
உன் பரம்பரை ஒழுக்கம் செய்துள்ள குற்றமடா..."
இதற்கு மேலும், மோடியை கை நீட்டி நீ குற்றம் சொன்னால்...
உனது பெயரை கல்வெட்டில் பொறிக்க வேண்டும்...
*'ரவுல் வின்சி - பொய்யர்களின் தலைவன்'*என்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...