Sunday, October 13, 2019

அது ஒரு சீனப் பழமொழி 😊👍

" என்னிடம் காலணிகள் இல்லையென்று
நான் கவலைப்பட்டேன்,
கால்களே இல்லாத ஒரு மனிதனை
நான் தெருவில் சந்திக்கும்வரை ! "
இப்படி ஒரு வாசகத்தை எழுதி முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைத்து தினமும் படித்துப் பார்ப்பாராம் ஓர் மனிதர் .
அந்த வாசகத்தை எப்போது பார்த்தாலும் எந்த கவலையாக இருந்தாலும் மறந்து புத்துணர்ச்சி பெற செய்து விடுமாம் அவருக்கு .
இன்று நாம் கவலைப்படும் பல விஷயங்களை பற்றி நாம் ஆராய்ந்து பார்த்தோம் என்றால் நம்மிடமே நாம் கேட்டுக் கொண்டால் எல்லா விஷயங்களும் முக்கியமற்றதாகவும் , அற்பமானதாகவும் இருப்பதை காணலாம் .
நம் வாழ்வில் 90% விஷயங்கள் சரியானதாக இருக்கும் .
10% விஷயங்கள் தவறானவையாக இருக்கும் .
மகிழ்ச்சியாக இருக்க நாம் விரும்பினால் 90% விஷயங்களில் நாம் நம் கவனத்தை திருப்ப வேண்டும் .ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருப்போம் ?
வெறும் 10% விஷயங்களை மட்டுமே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்போம் .
இதனால் நம் மனம் கெடுவதோடு உடலும் சேர்ந்து கெடும் .
" வாழ்வில் நாம் அடைய வேண்டிய இலக்கு இரண்டு மட்டுமே : முதலில் , நீங்கள் விரும்புவதைப் பெறுவது ;
பிறகு , அதை அனுபவிப்பது .
அறிவார்ந்த மனிதர்கள் மட்டுமே அந்த இரண்டாவது விஷயத்தை அடைகின்றனர் ",
அறிஞர்கள் பலர் நமக்கு சொல்வதெல்லாம்
உங்கள் ஆசீர்வாதங்களைக் கணக்கிடுங்கள் , உங்கள் பிரச்சனைகளை அல்ல !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...