Wednesday, October 9, 2019

'பச்சோந்தி' படத்துடன் ஈஸ்வரன் 'மாஜி' அமைச்சரின் கணவர் கிண்டல்.

விழா ஒன்றில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பிரமுகர்களுடன், கொ.ம.தே.க., பொதுச் செயலர் ஈஸ்வரன் அமர்ந்திருக்கும் படத்துடன், பச்சோந்தி படத்தையும் இணைத்து, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், சமூகவலைதளத்தில் வெளியிட்டது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணியில், கொ.ம.தே.க., இடம் பெற்றது.கடந்த, 29ல், ஈரோடு மாவட்டம், எழுமாத்துார் அருகே, முன்னாள், எம்.எல்.ஏ., சின்னசாமி நுாற்றாண்டு விழா நடந்தது. அதில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடனும், ஈஸ்வரன் நெருக்கமாக அமர்ந்து பேசி, சிரித்து மகிழ்ந்தார். தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்களுடன், ஈஸ்வரன் பங்கேற்ற படங்களை, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமியின் ஜெகதீசன், சமூகவலைதளமான, 'பேஸ்புக்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'என்ன உறவோ, என்ன பிரிவோ... அரசியல் நாடக மேடையில்' என, 'கமென்ட்' செய்ததுடன், தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சிறுவன், பச்சோந்தி மற்றும் கோவணத்துடன் சிறுவர்கள் ஆடும் கேலியான படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும், கொ.ம.தே.க., கட்சியினருக்கு மனகசப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...