அவர் இறந்துவிட்டார் மரியாதையாக அனுப்பியாயிற்று என்று விட்டார்களா என்றால் இல்லை, பேராசியர் தெரியுமா? அவரின் புகழ் தெரியுமா? அனுபவம் தெரியுமா என்றெல்லாம் கடும் ஆரவாரம்
சரி அவ்வளவு பெரும் ஆற்றலும் அறிவும் புகழும் வாய்ந்தவருக்கு என்ன பெரும் பதவி கொடுத்தார்கள் என்றால் , கே.என் நேருவும் , துரைமுருகனும் , அன்பில் குடும்பமும் அன்பழகனை விட கடும் செல்வாக்காக இருந்தார்கள்
திமுகவில் முதலியார்கள் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் அதே நேரம் முதலியார் இல்லாமலும் இருக்க கூடாது என்பதற்கு கருணாநிதிக்கு கிடைத்த பொம்மை அன்பழகன்
கட்சியில் ஈ. வி. கே சம்பத் தாக்கி விரட்டபட்டபொழுது "உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு கட்சியினை விட்டால் என்ன இருக்கு? "என அவர் கேட்டது நிஜம்
ஆனால் கட்சியில் கருணாநிதி மீறி சம்பாதிக்கமுடியாமல் அவர் திணறியதும் நிஜம்
அண்ணா மறைந்த பின் "என்னை விட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக நான் ஏற்பது?" என தன் பதவி ஆசையினை சொன்னதும் நிஜம், அதே நேரம் திமுகவின் பூமாலையில் ராம்சந்தர் ரோஜாப்பூ என்றதும் நிஜம்
கருணாநிதியை தலைவராக ஏற்றால் என் மனைவியே என்னை மதிக்கமாட்டாள் என வாய்விட்டு கூறியவர் அன்பழகன், ஆனால் கடைசிவரை அவர் பொம்மையாக இருந்தபொழுதும் மனைவி கூடவேதான் இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கருணாநிதியே தஞ்சம் என அடைக்கலமானார், ஒருவேளை நெடுஞ்செழியனுக்கு ஏற்பட்ட கதி தனக்கும் ஏற்படலாம் என அஞ்சியிருக்கலாம்
ராம்சந்தர் கணக்கு கேட்டபொழுது அன்பழகனின் பண்பு இப்படித்தான் வெளிபட்டது..
"என்ன கணக்கு? என் பொண்டாட்டி கூட என்னிடம் கணக்கு கேட்டதில்லை. நீ என்ன கேட்பது?
இனி வேட்டிய அவுத்து தான் காட்டணும்"
1972ல் கட்சி தொடங்கிய ராம்சந்தர் , எதிர்கட்சியாக சில கேள்விகளை கேட்டபொழுது அன்பழகன் இப்படி கண்ணியமாக பதில் சொன்னார்
இனி வேட்டிய அவுத்து தான் காட்டணும்"
1972ல் கட்சி தொடங்கிய ராம்சந்தர் , எதிர்கட்சியாக சில கேள்விகளை கேட்டபொழுது அன்பழகன் இப்படி கண்ணியமாக பதில் சொன்னார்
" இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி, துப்பாக்கி வெடிக்கவில்லை. இதில் என்ன புரட்சி?.."
ஜெயலலிதா கூட அன்பழகனை சீண்டினார் "பேராசியர் என்பதல்ல இவர் பணி, டியூட்டர் என்றுதான் அதை சொல்வார்கள்" என்றார்
"நான் ஆதிகாலத்தில் செய்ததை நான் ஒப்புகொள்கின்றேன், அம்மையார் என்ன செய்தார் என்பதை தோண்டி பார்க்கலாமா.." என பதிலுக்கு கேட்டார் அன்பழகன்
ஆம் அவ்வளவு பண்பும் நாகரீகமும் அவரிடம் குடிகொண்டிருந்தன.
உண்மையில் அன்பழகனுக்கு அண்ணாவுக்கு அடுத்த இடம் வரும் ஆசை இருந்தது, ஆனால் ராம்சந்தரின் அழிச்சாட்டியத்தில் கருணாநிதியிடம் கட்சி சிக்கியது
நிச்சயம் நெடுஞ்செழியனோ இல்லை இன்னொருவரோ இருந்திருந்தால் அன்பழகன் ஆடி பார்த்திருப்பார், ஆனால் கருணாநிதியிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லை அடங்கிவிட்டார்
மந்தையில் அடம் செய்யும் ஆட்டை அடக்க இன்னொரு ஆட்டை போட்டு சாத்துவார்களாம், அதில் மற்ற ஆடுகள் அப்படியே அடங்கிவிடுமாம்
அப்படி நாவலர் நெடுஞ்செழியனை கழகங்கள் படுத்தியபாட்டை கண்டு அஞ்சி ஒடுங்கி அப்படியே இருந்துவிட்டு சென்றவர் அன்பழகன் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை
ஆம் நெடுஞ்செழியனுக்கு திமுகவினர் வைத்திருந்த பெயர் "ஆடு" என்பதும் கூடுதல் தகவல்.
No comments:
Post a Comment