இளமை சீக்கிரம் போய்விடும், முதுமை சீக்கிரம் போகாது, ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது. சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.
கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை வரக்கூடாது. யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.
கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க நமக்கு வேண்டாம்.
இளமையில் சாப்பிட்ட அத்தனையும் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை. அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்கவேண்டும் இறுதிகாலத்தில்.
சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும், சிவபெருமான் திருவடிக்கு.
சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றாள், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.

No comments:
Post a Comment