Saturday, March 14, 2020

நேற்று வரை ரஜினிகாந்தை கிண்டல் செய்துகொண்டிருந்த ....

ரஜினி அவர்களின் பேட்டி முழுதும் பார்த்தேன்.
அண்ணா துரை கருணாநிதி குறிப்புகளைத்தவிர மற்ற எல்லா விசயமும் மிகவும் பாராட்டுக்குரியவை.
அவர் நோக்கம் நிறைவேற வேண்டும் இல்லாவிட்டால் இழப்பு மக்களுக்குத்தான்.
அவருக்கு பணம் பரபரப்புதான் முக்கியம் என்றால் பேருக்கு ஒரு கட்சி ஆரம்பித்து ஊருக்கு நாலு அள்ளக்கைகளை நியமித்து கோடிகளில் கட்சி நிதி திரட்டி ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க கோசத்தைக் கேட்டு ஜம்பமாக வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம். அவருக்கு அந்த அமைப்பு மிகப் பிரகாசமாக இருந்துள்ளது
அதை முற்றிலும் விரும்பவில்லை என்பது அவர் பேட்டியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் வருகிறேன் என்றுதான் சொல்கிறார். சும்மா எம்புருசனும் கச்சேரிக்கு போறான் னு ஒரு கட்சியை நடத்தி அதில் அவரை நம்பி வருபவர்களின் நேரத்தைப் பணத்தை வீண்டித்து அதில் குளிர் காய விரும்பவில்லை. உயிரிழப்புகளையும் விரும்பவில்லை
அவர் விரும்பும் மாற்றம் மிகவும் வரவேற்கத்தக்கது. அது அவர் காலகட்டத்தில் உறுதியாக சாத்தியம் இல்லை என்பதை மிகவும் நன்றாக கணித்து உணர்ந்திருக்கிறார். அதனால் தான் இது வீண் வேலை நான் ஒதுங்கி க் கொள்கிறேன், நான் கூறும் மாற்றத்தில் விருப்புமுள்ளவர்கள் சமூக நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று வழி நடத்தி செல்ல லாம் என பொறுப்பை ஒப்படைத்திக்கிறார். வேணும்னா கூப்புடுங்க வரன் இல்ல நீங்களே முன்னெடுத்து செல்லுங்கள் என்றுதான் கூறுகிறார். உங்களுக்கு உண்மையில் ்அக்கரை இருந்தால் அவரை விமரிப்பதை நிறுத்தி விட்டு அவருக்கு நம்பிக்கை குடுப்பது தான் நாகரீகம்
ரஜினியைப்போல இவ்வளவு செல்வாக்கு உள்ளவர்கள் பதவி போதையை உதறிவிட்டு இந்த முடிவுக்கு வருவது அவ்வளவு சுலபமில்லை.
அந்த முடிவை ரஜினி எடுத்திருப்பதே மிகவும் தைரியமான செயலாகும். யாரும் என்னால் என் பின்னால் சும்மா வந்து துன்ப ப் படக்கூடாது என்ற அவரின் நல்ல உள்ளம் அவரைத் தீவிரமாக விமர்சித்த என்னையே கண்கலங்கச் செய்திருக்கிறது.
என்னைவிட அவரைக் கடுமையாக விமர்சித்தவர் வெகு சிலரே இருக்க முடியும்.
சரியான புரிதல் இல்லாமல் செய்த அந்த விமர்சனங்களுக்கு மனதார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லவர்களை அடையாளம் கண்டால் அவர்களை ஆதரிப்போம் என்ற என் வாழ்நாள் கருத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்கப் போவதில்லை
ரஜினி அவர்களின் இந்த நல்ல உள்ளத்திற்கு அவர் இன்னும் நீடூழி வாழ அவர் கருத்து வெற்றி பெற வணங்கி வாழ்த்துகிறேன்
இது நான் அவர் பேட்டியை கண்டு என் முழுசுயநினைவுடன் எழுதிய பதிவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...