Friday, March 13, 2020

ரஜினி கட்சி அறிவிப்பு கொள்கையே இன்னும் வெளியிடவில்லை கால அவகாசம் பத்தாது.

2021 தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் ஜுரம் என்பது தமிழகத்தில் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்புதான் ஆரம்பிக்கும்.
2011 தேர்தலுக்காக ஆறு மாதங்களுக்கு முன்பு தான் கோவையிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா ஆரம்பித்தார்.
இன்னும் 14 மாதங்கள் இருக்கும்போது எந்த தலைவரும் தேர்தல் பிரசாரம் என்று தன்னுடைய நேரத்தை எனர்ஜியை வேஸ்ட் பண்ண மாட்டார்.
தமிழகத்தில் சரியாக ஆறு மாதம் முன்பு தேர்தல் வேலைகளை ஆரம்பித்து மக்களிடம் கொண்டு சென்றால் போதும் என்று அனைத்து அரசியல்வாதிகளும் தெரிந்து வைத்துள்ளனர்.
இப்போது ரஜினிகாந்த் மட்டும் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்ப்பது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கும் தெரியும் ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் என்று.
அதுவரையில் மாவட்ட செயலர்கள் கூட்டம் மற்ற முன்னாள் IAS அதிகாரிகள் கூட்டம் என்று சில வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.
கண்டிப்பாக தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் வெளியேவந்து சில வேலைகளை செய்வார். அது பெரிய அளவி்ல் அதிர்வுகளை உண்டாக்கும். அப்போது தெரியும் இந்த ரஜினிகாந்த் யாரென்று.
அதுவரை அவரது சில நடவடிக்கைகளை நாம் விமர்சனம் செய்து கொண்டேதான் இருக்கப் போகிறோம்.
அவரும் லைம்லைட்டில் இருக்கத்தான் போகிறார்.
பொறுத்திருந்து பாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...