Monday, March 9, 2020

கோடை வெயிலுக்கு இயற்கையின் கொடைகள்:-

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை ஆகியவை உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத்தர வல்லவை.
பாதாம் பிசினை இரண்டு நகக்கண் அளவு எடுத்து ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல மாறிவிடும் (இது ஜிகர்தண்டா செய்ய பயன்படுத்தப்படுகிறது). இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு, சர்பத்துடனோ கலந்து நீங்கள் அருந்தலாம்.

அதைப்போன்று கடுகு போல தோற்றமளிக்கும் சப்ஜா விதைகளை (பலூடா செய்ய இது பயன்படுத்தப்படுகிறது) சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அவை உப்பி நாம் அருந்தும் சர்பத் அல்லது பழச்சாறுகளில் கலக்கவோ தயாராகிவிடும்.
மொத்தம் 50-100 ரூபாய்க்கு இவற்றை வாங்கிக்கொண்டால் ஒரு நபருக்கு இந்த கோடைகாலம் முழுவதுக்கும் போதுமானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...