நம்மாளு ஒருத்தருக்கு ரொம்ப நாளா ஒரு குறை. தனக்கு குழந்தையில்லையேன்னு.
அதுக்காக நம்மாளு போகாத கோவில் இல்லே.
வேண்டாத தெய்வம் இல்லே.
சபரிமலைக்கு மாலை போட்டுட்டு போவாரு.
வியாழக்கிழமை ஆனா மெட்றாஸ்லே இருக்கற ஒரு சாயிபாபா கோயிலையும் வுட்டு வக்கறதில்லே.
தேடிப் போயி தரிசனம் பண்ணிடுவாரு.
செவ்வாக்கிழமை அசோக் நகரு ஆஞ்சநேயரு கோயில்லேருந்து நங்கநல்லூரு ஆஞ்சநேயர் கோயிலுக்கு நடந்தே போவாரு.
இப்படி என்னனென்னவோ பண்ணிப் பாத்தாரு.
ஒண்ணும் வேலைக்கு ஆகலே.
கட்டக்கடோசியா, முடிவு பண்ணி, தண்ணிகூட குடிக்காம உபவாசம் இருக்க ஆரம்பிச்சாரு.
மூணாவது நாளே அவருக்கு முன்னால கடவுளு தோன்றி அவரோட வழக்கமான டயலாக் ஆன "பக்தா உன் தவத்துக்கு மெச்சினேன். என்ன வரம் வேண்டும், கேள்"ன்னு கேட்க சொல்லோ,
நம்மாளு தனக்கு பிள்ளையில்லாத குறையை சொன்னாரு.
கடவுள் சொன்னாரு
"அதுக்கு முதல்லே கல்யாணம் பண்ணிக்கோடா, மடப்பய மவனே" !!!
No comments:
Post a Comment