Sunday, September 5, 2021

'பார்வைகள்'.

 இணை பிரியா இரு தத்துவ ஞானிகள்.

ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக் கொள்வதில் அதி வல்லவர்கள்.
ஒரு நாள், ஆற்றில் கைகோர்த்தபடி நடக்கலாயினர்.
அந்தப் பொன் மாலைப் பொழுதில் பொன்னிற மீன்கள் துள்ளின.
ஒருவர் சொன்னார்:
'ஆற்று மீன்கள் எவ்வளவு ஆனந்தமாய்த்
துள்ளிக் குதித்தாடுகின்றன பார்த்தீரா?
அடுத்தவர் முறைத்தார்:
'ஆற்று மீன்கள் ஆனந்தமாய்க் குதித்தாடுகின்றன என்று சொல்ல நீ என்ன ஆற்று மீனா? உனக்கெப்படி தெரியும் ?"
அவரும் பதிலுக்கு முறைத்தார்:
'எனக்குத் தெரியும், தெரியாது என்று சொல்ல நீ என்ன நானா?
கழுதை அசிங்கமாய் இருக்கிறது என்று சொல்ல நீ என்ன கழுதையா?
ஒரு தேவாங்குக்கு இன்னொரு தேவாங்கு தேவதையே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...