Monday, September 13, 2021

கரியகோயில் அணை.

 சேலம் மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்திலுள்ள கரியகோயில் அணை நீரின்றி வறண்டது. இதனால் பருவமழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலையில் இருந்து வழிந்தோடி வரும் கரியகோயில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியகோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. அணை பாசனம் பெறும் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு என அழைக்கப்படுகிறது.
கரியகோயில் ஆற்றின் குறுக்கே பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசனத் தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் கிராமங்களில் ஏரிகளும் அமைந்துள்ளன. ஆறு மற்றும் ஏரிகளில் இருந்து பாசனம் பெறும் விளைநிலங்கள் பழைய ஆயக்கட்டு என அழைக்கப்படுகிறது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வராயன் மலைப்பகுதியில் ஜனவரி 15-ஆம் தேதி கரியகோயில் அணை நிரம்பியது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்ததால் அணை மற்றும் ஆறு, ஏரிப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மட்டுமின்றி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
பாசனத்துக்காக அணையில் இருந்து பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அணை வாய்க்கால், ஆறு மற்றும் ஏரிப்பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அணையில் எஞ்சியிருந்த தண்ணீரும் படிப்படியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து போனது.
அவ்வப்போது பெய்யும் மழையால் கரியகோயில் அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அணையில் தேக்கி வைக்கப்படாமல் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்த தண்ணீா் முழுவதும் காலியானதால் ஆகஸ்ட் 25-ஆம் தேதியில் இருந்து அணை வடு காணப்படுகிறது.
எனவே, பருவமழையை எதிா்பாா்த்து, கரியகோயில் அணை, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம மக்களும் காத்திருக்கின்றனா். பருவமழையால் அணைக்கு நீா்வரத்து தொடங்கினாலும், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல், முதல்கட்டமாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கான தடுப்பணைகள், ஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுமென்தால், இந்தாண்டு இறுதிவரை அணை நிரம்புவதற்கு வாய்ப்பில்லையென அணைப்பாசன விவசாயிகள் தெரிவித்தனா்.
May be an image of body of water and nature

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...