Friday, December 3, 2021

_தினம் ஒரு திருத்தலம் : சிவனுக்கு எதிரில் பைரவர்.. ஒரே சன்னதியில் இரண்டு அம்பிகைகள்..!!_

 *அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்..!!*

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் சுமார் 12 கி.மீ தூரத்தில் விராலிப்பட்டி உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தூரம் மினி பஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். இக்கோயிலுக்கு ஆட்டோ வசதியும் உண்டு.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரிய ஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.
மக நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது.
சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்கிரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர்.
வேறென்ன சிறப்பு?
அகத்தியர் முதல் பலாயிரம் சித்தர்கள், மகரிஷிகள் மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம்.
ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம் இது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
மக நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம்.
நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.
வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்த குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
May be an image of outdoors and text that says "அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்..!! Kevin"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...