Tuesday, December 6, 2022

இந்தியாவில் டீஸல் கார்களுக்கு வேட்டு வெச்ச மோடி அரசு!??

 சமீபத்தில் யாராவது டீஸல் கார் வாங்க நினைத்தால், அது குதிரை கொம்பாக மாறிவிட்டது என்பதை உணர்வார்கள். ஆம் முன்பு கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் Diesel Variant என்பது கண்டிப்பாக இருந்தது, இல்லை என்றால் அபூர்வம். ஏனெனில் டீஸல் கார்களுக்கு டிமாண்ட் எக்கச்சக்கமாக அதிகரித்தது. காரணம் என்ன? அதை மோடி அரசு எப்படி மாற்றியது?

குறிப்பு: 16+ ஆண்டுகளாக நான் டீஸல் கார்களை பயன்படுத்துகிறேன். அது மட்டுமல்ல, அதன் சேமிப்பை நன்கு உணர்ந்தவன் என்ற வகையில் என்னால் குறைந்தது 10 பேராவது பெட்ரோல் கார் வாங்க நினைத்தவர்கள், டீஸல் கார் வாங்கினார்கள்.
🐶 இந்தியாவில் போக்குவரத்துக்காக டீஸல் எஞ்சின்கள் பெருமளவில் வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக Goods & Public Transport வாகனங்கள் டீஸல் எஞ்சினை மட்டுமே பயன்படுத்தியது. அதனால் டீஸல் விலை ஏற்றம் என்பது விலைவாசி உயர்வுக்கு காரணமாகி பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய காரணி. அதனால் டீஸல் விலையை குறைவாகவே வைத்திருப்பது அரசுகளின் யுக்தியாக இருந்தது.
இந்த யுக்தியை நன்கு உணர்ந்தவர்கள் பலர் பெருமளவில் டீஸல் கார்களை பயன்படுத்த தொடங்கினர். காரணம் அதன் மூலம் எரிபொருள் செலவு பெருமளவில் அவர்களால் சேமிக்க முடிந்தது. என்னுடைய கார் டீஸல் எஞ்சின், அது ஒரு லிட்டருக்கு 20 கிமீ கொடுக்கிறது, பெட்ரோல் கார் என்றால் 16 கிமீ தான் கிடைக்கும். இப்போது சென்னையில் பெட்ரோல் விலை: ₹102.63 டீஸல்:₹94.24. வித்தியாசம் ₹8.39. முன்பெல்லம் வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது.
அப்படியெனில் டீஸல் கார் ஒரு லிட்டருக்கு ஆகும் எரிபொருள் செலவு ₹92.24÷20கிமீ =₹4.71 ஒரு கிமீ செலவாகும். ஆனால் பெட்ரோல் காருக்கு ஆகும் செலவு ₹102.63÷16=₹6.41. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் : ₹1.70. நீங்கள் 2000 கிமீ ஒரு மாதத்திற்கு ஓட்டுகிறீர்கள் என்றால் மாதம் ₹3408.75 சேமிப்பீர்கள். அதுவே 5000 கிமீ ஓட்டுகிறீர்கள் என்றால் ₹8500 சேமிப்பீர்கள். இந்த பெட்ரோல், டீஸல் கார்களுக்கு ஒரு சமயத்தில் 1 லட்சம் ₹ வித்தியாசம் என்றால், 60,000 கிமீ ஓட்டி முடித்துவிட்டால் அந்த விலை வித்தியாத்தை Return on Investment என எடுத்திருப்பீர்கள். அப்புறம் வருவதெல்லாம் லாபமே. மேலும் முன்பு போல பெட்ரொல், டீஸல் கார்களுக்கு இருந்த சர்வீஸ் செலவு வித்தியாசம் குறைந்துவிட்டது என்பதால் அதிலும் பிரச்சினை இல்லை.
எனவே ஒரு காலத்தில் தனியார் வாகனங்கள் மிக குறைந்த அளவில் டீஸல் எஞ்சின் பயன்படுத்திய நிலை மாறியது. அதனால் டீஸல் கார்கள் பயன்பாடு அதிகரிக்க, பெட்ரோல், மற்றும் டீஸல் கார்களுக்கு விலையில் உள்ள வித்தியாத்தை கார் கம்பெனிகள் வெகுவாக குறைத்தது. அதனால் டீஸல் விலை குறைப்பு என்பது கார்களுக்கு, குறிப்பாக லக்ஸரி கார்களுக்கும் போவதை தடுக்க முடியாத சூழல் அரசுக்கு ஏற்பட்டது.
என்னதான் பிரச்சினை என்றாலும், நாட்டின் நலன் மட்டும் குறிக்கோளாக இருந்தால் ஒரு அரசு எப்படியாவது அதை செய்து முடிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சி. ஆம் தற்போது மோடி அரசு அதை எப்படி சத்தமில்லாமல் சாதித்துள்ளது?
கார்களின் டீஸல் எஞ்சின்களுக்கு Emission Standard என்பதை Bharath Stage 4 லிருந்து 6 ஆக உயர்த்தியது. அது மட்டுமல்ல, வாகனங்கள் சோதனை அடிப்படையில் இல்லாமல், அதன் ரோட் டெஸ்ட் கன்டிஷனில் அது இருக்க வேண்டும் என்று மாற்றியது (Volkswagen இந்த Emisaion Test ஐ ஏமாற்றியது நியாபகம் வருகிறதா?). ஆனால் உலகில் இருக்கும் பல கார்கள் அதற்கான தரத்தில் இல்லாததால், அதை செய்ய வேண்டுமெனில் Research & Development க்கு நிதி ஒதுக்கி, அதை Implement செய்தால் பெட்ரோல், டீஸல் கார்களுக்கு இடையே விலை வித்தியாசம் பெரியதாகிவிடும் என்பதால் அதை செய்ய முடியாது சூழல்.
எனவே கிட்டத்தட்ட எல்லா முக்கிய கார் நிறுவனங்களும் டீஸல் கார்களை இந்தியாவில் குறைத்துவிட்டது அல்லது நிறுத்திவிட்டது. அப்படியே அதை கொண்டு வந்தாலும் அதனால் மிக அதிகமாக பயன்படுத்துபவர்கள், உதாரணமாக மாதம் 10,000+ கிமீ வண்டி ஓட்டுபவர்களுக்கு அது இன்னும் நல்ல சேமிப்பை கொடுக்கும். இல்லாவிட்டால் அது நஷ்டமே. எனவே கார் போனியாகாது என்பதாலும், அடுத்து எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக சந்தையில் நுழைவதால், அது டீஸல் கார்களை விட சிறந்த சேமிப்பை தரும் என்பதாலும் டீஸல் கார்கள் உற்பத்தியை பல கார் நிறுவனங்கள் நிறுத்திவிட்டது.
எனவே மோடி அரசு எந்த சத்தமும் இல்லாமல் சமார்த்தியமாக இந்த விஷயத்தை கையாண்டது என்பது புரியும். ஆம் இதே போன்ற முறைகளை முன்பு வீட்டு Domestic Cylinders எனும் Subsidary விலைக்கு கொடுத்த கேஸில் ஒரு வகை வாசனையை சேர்த்து கலப்பு செய்து மாற்றியது, அதன் மூலம் கார்களுக்கு பயன்படுத்துவது குறைந்தது. கெரோஸின் எனும் சீமஎண்ணெயில் நீல நிறம் சேர்த்து Black Sales ஐ தடுத்தது. தொழிற்சாலைகளில் திருட்டு தனமாக பயன்படுத்திய யூரியாவால் விவசாயிகளுக்கு உர தட்டுப்பாடு ஏற்பட்டதை வேப்ப எண்ணெயை உரத்தில் கலக்கியதால், அதை தொழிற்சாலைகள் பயன்படுத்த முடியாமல் போனது. எனவே விவசாயிகளுக்கு உர தட்டுப்பாடு இல்லாமல் போனது. அந்த வகையில் இப்போது இந்த டீஸல் எஞ்சினும் சேர்ந்து விட்டது.
இதனால்தான் டீஸல் கார்கள் சந்தையில் கிடைக்காத ஒரு சூழல். எனவே இருக்கும் பழைய டீஸல் கார்களுக்கு டிமாண்ட் Second Hand மார்க்கெட்டில் அதிகரிப்பதால், விலை வெகுவாக கூடிவிட்டது. என்னிடம் இருக்கும் Honda Mobilio Diesel, 2014 ல் வாங்கியபோது 12+ லட்சங்கள். அதன் பழைய கார் மதிப்பில் ஒரு மூன்று லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த டீஸல் காருக்கு டிமாண்ட் இப்போது அதிகமானதால், டாக்ஸி, டூரிஸ்ட் வாகனங்கள் ஓட்டுபவருக்கு தேவை மிக அதிகரித்துள்ளது. அதனால் அதன் விலை இரட்டிப்பாகி உள்ளது என்பது ஆச்சரியமே!
எனவே எதற்கும் மனம் இருந்தால் மார்க்கமுண்டு! மோடி அரசுக்கு மனமும் இருந்தது, மார்க்கமும் கிடைத்தது!
🐶

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...