மனிதன் வாழ்வில் தினமும் வெளியில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் பல உண்டு, ஆனால் இந்த தரித்திரம் அப்படி அல்ல. எப்பேற்பட்ட செல்வந்தரையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடக் கூடிய சக்திக்கு தான் தரித்திரம் என்று பெயர். தரித்திரம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே பலரும் தயங்குவார்கள். இந்த தரித்திரம் யாரோ ஒருவர் எங்கிருந்தோ நமக்கு கொண்டு வந்து கொடுத்து விடுவதில்லை. நாம் செய்யும் செயலால் நமக்கே வருவது தான். அந்த வகையில் வரவே கூடாத தரித்திரத்தை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தரித்திரம் வந்தால் அவ்வளவு தான் என்று முடிவு செய்து விட கூடியது என்றால் அது படுக்கை தரித்திரம் தான். உடல் முடியாமல் வயதானவர்கள் படுத்து ஓய்வெடுப்பது என்பது வேறு. ஆனால் நல்ல ஆரோக்கியமானவர்கள், இளம் வயது உடையவர்கள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கும் வீட்டில் இந்த தரித்திரம் கட்டாயமாக வரும். நம் முன்னோர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை, வாழும் வீட்டில் எப்பொழுதும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. இரவு நேரம் தவிர பகலில் தூங்கினால் குடும்பத்திற்க்கு ஆகாது. இப்படி பகலில்தூங்க கூடாது என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். ஏனென்றால் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருப்பவர்களின் வீட்டில் இந்த படுக்கை தரித்திரம் நிரந்தரமாக அமர்ந்து விடும்.படுக்கை தரித்திரம் வந்து விட்டால் அங்கு மூதேவி தான் ஆட்சி செய்வாள். இதனால் நமக்கு ஒரு நல்ல சிந்தனையோ, நல்ல செயலோ, எதுவுமே நடக்காது. இந்த தரித்திரம் வர இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நாம் எந்நேரமும் உறங்கி கொண்டு இருப்பதால் வருவது. மற்றோரு காரணம் நம் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் வரும். நாம் பயன்படுத்தும் பாய், தலையனை போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,எக்காரணத்தை கொண்டும் நாற்றம் வீசக் கூடாது. இப்படி இருந்தால் அங்கும் இந்த படுக்கை தரித்திரத்திற்கான தேவதை வந்து அமர்ந்து விடுவார். நன்றாக யோசித்துப் பாருங்கள் ஒரு மனிதன் எதை பற்றியும் யோசிக்காமல், சிந்திக்காமல் உறங்கிக் கொண்டே இருந்தால் அந்த மனிதனின் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும். இந்த விஷயத்தை நாம் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரே வார்த்தையில் கடந்து விடுவோம். ஆனால் அதன் பின்னணியில் அந்த குடும்பமே முன்னுக்கு வராமல் போய் விடும் என்ற உண்மை ஒளிந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த படுக்கை தரித்திரம் நம் இல்லத்தில் வராமல் இருக்க நாம் செய்ய வேண்டியது, முடிந்த அளவிற்கு இரவு நேரம் தவிர மற்ற நேரங்களில் உறங்குவதை தவிர்க்க வேண்டும் . நாம் பயன்படுத்தும் தலையணை உறை, படுக்கை விரிப்புகள், பாய் போன்றவற்றை பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து பளிச்சென்று வைத்து இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி இந்த பொருட்களில் எப்போதும் வாசனையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதை வைத்திருக்கும் இடம் மற்றும் அதை உபயோகப்படுத்தும் போதும் அந்தப் பொருட்கள் வாசமாக இருக்க கொஞ்சம் வாசனை திரவியங்களை அதற்கும் போட்டு வைத்து விடுங்கள். இப்படி படுக்கை அறை சுத்தமாகவும் நறுமணத்துடன் இருந்தால் மனதுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைப்பதோடு, தரித்திரமும் நீங்கி, நீங்களும் சுறுசுறுப்பாக உழைத்து உங்கள் குடும்பமும் நல்ல நிலைக்கு வந்து விடும். அது மட்டும் இல்லாமல் இப்படி நல்ல வாசனை இருக்கும் இடத்தில் மகா லஷ்மி தாயாரின் அருளும் கிடைக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment