Wednesday, December 7, 2022

சரி இருக்கட்டும்..

 முன்பெல்லாம் கார்த்திகை தீபத்திற்கு லீவு உண்டு ..

கார்த்திகை பந்தம் செய்து சிறுவர்கள் நாங்கள் மகிழ்வோம்...
எல்லா விளக்குகளையும் பரணில் இருந்து இறக்கி..
துடைத்து.. துலக்கி... எண்ணெயில் பஞ்சு திரியை ஊறவைத்து ... இந்த வேலைகளை எல்லாம் வீட்டில் விடுமுறையில் இருக்கும் சிறுவர்கள் நாங்கள் தான் செய்வோம்..
இப்பொழுதெல்லாம் குழந்தைகள் இதையெல்லாம் செய்கிறார்களா..??
இப்பல்லாம் தமிழனின் ஹிந்து பண்டிகை கார்த்திகை தீபத்திற்கு லீவு கிடையாது ...
ஓணத்திற்கு லீவு உண்டு.. தெலுங்கு வருட பிறப்புக்கு லீவு உண்டு...
சரி இருக்கட்டும்..
நாங்கள் படித்த போது அரையாண்டு விடுமுறை... பொங்கலுக்கு தான் லீவு உண்டு..
இது எப்பொழுது... இந்த திராவிட அரசால் மாற்றப்பட்டது என்று தெரியாமலேயே நிகழ்ந்திருக்கிறது ... ஒரு கலாச்சார சீர்கேடு..
கிறிஸ்துமஸ் லீவு...
இதேபோல் இந்து பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விடாமல்...
மற்றவர்களை பார்த்து..
// சிலர் மத அரசியல் செய்கிறார்கள் //
என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது இந்த திராவிட திருடன் களுக்கு...??
கிறிஸ்தவ இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகின்ற ...ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறாத... மதவெறி அரசியல் செய்கின்ற.. இவர்கள் முதல்வர் பதவியில் உட்காருவதற்கே தகுதி இல்லாதவர்கள்...
தீபாவளிக்கும் அதே போல் முன்பெல்லாம் இரண்டு நாட்கள் விடுமுறை உண்டு ...
இதனால் குடும்பத்தோடு குழந்தைகள் இருந்து ... நமது பாரம்பரியம் ... பண்பாடு இவற்றை கற்றுக்கொண்டோம்..
மாணவர்கள் வெறும் கிறிஸ்தவ மெக்காலே கல்வியை மட்டுமே கற்றுக் கொண்டால் போதும் என்கிற மாதிரி ஒரு மாயை உண்டாக்கி ஹிந்து பண்பாட்டை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறது திராவிட ஆட்சி..
நான் ஒரு முறை தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு நோன்பு என்று விடுமுறை கேட்டதற்காக எனக்கு மெமோவெல்லாம் கொடுத்த கிறிஸ்தவ அதிகாரிகள் உண்டு...
இவர்களுக்கு இந்து பண்டிகை என்றால் போதும் ... அப்படி ஒரு ஆங்காரம் வந்துவிடும்...
வருடத்திற்கு செய்கின்ற வேலை நாட்கள் இதனால் குறைவுபட போவதில்லை ...
தேவையில்லாமல் கிறிஸ்துமஸுக்கு லீவு விடாமல்...
தமிழனின் பொங்கல் பண்டிகையை மையப்படுத்தி அரையாண்டு விடுமுறை விடட்டும்...
தமிழ் மொழியை வைத்து... சிறுபான்மை மதத்தை வைத்து..
மத அரசியல் செய்கின்ற டி'ஸ்டாக்ஸ் ஆட்சியாளர்களுக்கு...
இதையெல்லாம் செய்ய துப்பு இருக்கிறதா...??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...