உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு நீதிபதிகளுக்கே உள்ளது. அதை இந்திய தலைமை நீதிபதி அல்லது CJI மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுதான் உச்ச நீதிமன்றத்திற்கான நியமனங்களை முடிவு செய்கிறது. அந்த குழுவை கொலீஜியம் என்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் 124ன் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகே குடியரசுத் தலைவரால் செய்யப்பட வேண்டும். CJI அவரது நியமனம் தவிர அனைத்து நியமனங்களிலும் ஆலோசனை பெற வேண்டும். அதாவது ஜனாதிபதி அரசின் (சட்ட அமைச்சரின்) ஆலோசனைய கோரி பெறுவார். அப்போது அரசு, பரிந்துறைக்கப்பட்ட நீத்பதிகளின் பின்புலத்தை IB மூலம் ஆராயும். பொதுவாக கடந்த காலங்கள் முதல், உள்நாட்டு, வெளி நாட்டு தொடர்புகள்வரை ஆராய்ந்து அதன் பின்னரே அதை அங்கீகரிக்கும்
சமீபத்தில் 20 நீதிபதிக்களுக்கான பரிந்துரையை இந்த கொலீஜியம் செய்தது. அதில் 9 பேரின் பிண்ணனி சரி இல்லை என்று மத்திய அரசு திருபபி அனுப்பியது. ஏனெனில் அந்த 9 பேரின் பின்புலத்தை இண்டலிஜென்ஸ் பீரோ உள்ளிட்டவற்றைக் கொண்டு அரசு ஆராய்கிறது. ஐ.பி அறிக்கையில் குறைபாடுகள் இருந்ததால் அரசு நிராகரிக்கிறது. அதாவது 11 பேரை ஏற்றுக்கொண்டது என்பது அர்த்தம். அப்படியெனில் கொலீஜியம் அதற்கு மாற்று பெயர்களை பரிசீலிக்க கொடுக்க வேண்டும்.
ஆனால் அந்த கொலீஜியம் அதே 20 பெ கொண்ட பட்டியலை மீண்டும் திருப்பி அனுப்பினால் அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மரபு, ஆனால் சட்டம் அல்ல. அப்படி அதே 20 பேரை கொலீஜியம் திருப்பி அனுப்பியது அதை மத்திய அரசு, அதாவது ஜனதிபதி ஏற்கவில்லை. உங்களுக்கு இப்போது தமிழக அரசு கவர்னருக்கு நீட் சட்டம் திருப்பி அனுப்பியது நியாபகத்தில் வரும் அதுவும் மரபுதான். இதனால் கொலீஜியத்திற்கும், அரசுக்கும் மோதல் முற்றுகிறது. இது போன்ற பிரச்சினை காங்கிரஸ் அரசிலும் சில முறை நடந்தது. ஆனால் நீதி மன்றமே வென்றது.
இப்போது இருக்கும் வலுவான மத்திய அரசு அதற்கு அடி பணிய மறுக்கிறது. நீதிபதிகளை நியமிப்பதில் உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான், நீதிபதிகளை நீதிபதிகள் மட்டுமே நியமிப்பார்கள், அரசாங்கத்தின் தலையீட்டை நியமனத்தில் ஏற்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். நீதிபதிகள் சிலர் இடது சாரி சிந்தனையோடு பேசுவதை நாம் கேட்க முடியும். இதில் அரசின் குற்றச்சாட்டு என்பது நீதிபதிகள் தங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள், நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறது. மேலும் அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை என்ற புகார் இருந்தும் அதையே திரும்ப திரும்ப கொலீஜியம் மூலம் செய்கிறார்கள்.
அதே சமயம் ஐ.பி அறிக்கையை அரசு கொலீஜியத்திடம் பகிர்வதில்லை, அவர்களுக்கு அது தேவையில்லை என்பதால். அதே போல கொலீஜியமும் எந்த குறிப்பிட்ட முறையில் நீதிபதிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுத்தோம் என்ற சூத்திரத்தை பகிர்வதில்லை.
மேலும் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் தவறு செய்தால் இந்த கொலீஜியம் அவர் மீது தகுதிநீக்கம் (Impeachment) கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. அப்போது அவரை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் 2/3 மெஜாரிட்டி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் என்ன செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி ஒருவர் செய்தது நியாபத்தில் வரும்.
இதற்கு இன்னொரு காரணம், மோடி அரசு 2014 ஆண்டு நீதிபதிகள் நியமன ஆணயம் (NJAC) என்ற சட்டத்தை பாராளுமன்ற ஒப்புதலுடன் கொண்டு வந்தது. அதில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி, கொலீஜியம், ஜனாதிபதி, சட்ட அமைச்சர் ஆகியவர்களுக்கு அதில் பங்கு இருக்கும். அதை உச்ச நீதி மன்ற பெஞ்ச் சட்டத்திற்கு புறம்பானது என்று தூக்கி எறிந்தது.
உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழும், பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தின் படியே நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டும், அப்போது எப்படி நீதி மன்றம் அதை மறுக்க முடியும்?
அதாவது, புதிய சட்டங்கள், ஏற்கனவே இருக்கும் சட்டங்களின் அடிப்படையிலேயே அமைய பேண்டும். அதில் அடிப்படை உரிமை போன்ற முக்கிய சட்டங்களில் அது முரண்பட்டால், அந்த சட்டத்தை காட்டி இதை நிராகரிக்கலாம் என்பதே சட்டம்.
அதனால் இது ஒரு தொடர் கதையாக போனாலும், வழக்குகால் தாமதம் ஆனால், அதை துரிதப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அரசு விட்டுக்கொடுத்து போகும். எனவே இந்த பிடிவாதத்தால், உச்ச நீதிமன்ற நியமனம் மட்டுமல்ல, நீதித்துறையே கேள்விக்குரியதாகி, ஊசலாடுகிறது.
உங்கள் பார்வை என்ன?




No comments:
Post a Comment