டெல்லி மெட்ரோ முனிசிபாலிட்டி தேர்தலில் பாஜக போதுமான இடங்களில் வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது 'பெரும் மகிழ்ச்சியை' தருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில் ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகிறது. அது மட்டுமல்ல காங்கிரஸின் வாக்குகளை மொத்தமாகவும் கபளீகரம் செய்து வருகிறது.
ஆம் ஆத்மியின் வெற்றிக்கு சிறுபான்மை மக்கள் மற்றும் இடதுசாரியினர் முழு ஆதரவு தருகின்றனர்.
அதேபோல் பண பலம் கொண்ட, மத்திய அரசின் வரி சீரமைப்பை எதிர்க்கும் இரண்டாம் நிலை பணக்காரர்களும், பாஜகவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்களின் ஆதிக்கத்தை விரும்பாத உயர் ஜாதி அறிவு ஜீவிகளில் பலரும், தொண்டு மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும், பெரும்பாலான அரசு ஊழியர்களும் முழுமையாக ஆம் ஆத்மியை ஆதரிக்கின்றனர்.
டெல்லியில் இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், ஜைனர், பௌத்தர்களின் மொத்த வாக்குகள் இருபது சதவீதத்திற்கும் மேல்.
இவர்களில் எழுபது சதவீதத்திற்கும் மேல் ஆம் ஆத்மி ஆதரவாளர்கள்
மற்றும்
தொன்னூறு சதவீதத்திற்கும் மேல் பாஜக எதிர்ப்பாளர்கள்.
அதோடு கெஜ்ரிவாலின் ஹனுமன் சாலிசா, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படம், இலவசங்கள் என மிகச் சாதாரணமாக என்பது சதவீத இந்துக்களில் குறைந்தது இருபது சதவீத வாக்குகளை பெற்று தந்து விடும்.
அதோடு நாற்பது சதவீத இந்துக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை.
மிகவும் எளிமையான கணக்கு ஆம் ஆத்மியின் வெற்றி
ஆனால் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது என்று சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அதனால் என்ன பிரயோஜனம்?
சட்டமன்ற தேர்தல்களில் டெல்லியில் பாஜக பெறும். வாக்குகள் சராசரியாக 33 சதவீதம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல்களில் 40 சதவீதத்திற்கும் மேல் பெறுகிறது.
காங்கிரஸ், பாஜக என்ற நிலை இருந்த போது முப்பத்து ஐந்து சதவீதத்திற்கும் மேலாக இருந்த காங்கிரஸின் வாக்குகள் டெல்லி மெட்ரோ தேர்தலில் ஐந்து சதவீதத்திற்குள் குறைந்துவிட்டது.
கடந்த காலங்களில் பிரதான கட்சிகளை தவிர்த்து மற்றவர்கள் கிட்டத்தட்ட 12 சதவீத ஓட்டுக்களை பெற்று வந்தனர். தற்போது அது மூன்று சதவீதமாக குறைந்துவிட்டது.
குறைந்துவிட்டது என்றால் அந்த வாக்குகள் அனைத்தும் பாஜக எதிர்ப்பு வாக்குகள், அவை இப்போது ஆம் ஆத்மிக்கு ஆதரவாக திரும்பி விட்டது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் செயல்பாடுகள் சதவீதத்தில்
பாஜக
2013 - 33.1
2015 - 32.3
2020 - 38.4
ஆம் ஆத்மி
2013 - 29.5
2015 - 54.5
2020 - 53.7
காங்கிரஸ் (வாக்கு இழப்பினை கவனியுங்கள்)
2013 - 24.6
2015 - 9.1
2020 - 4.28
மற்றவர்கள்
2013 - 8
2015 - 3.8
2020 - 3.6
அடுத்தடுத்து ஆம் ஆத்மி பலம் பெறும் போதே என்னை போன்ற சாதாரண அரசியல் பார்வையாளர்களுக்கு நடந்து வரும் மாற்றங்கள், அது பாஜகவிற்கு ஏற்படுத்த போகும் பாதிப்புகள் என்னென்ன என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.
"ஆனால் பாஜக மத்திய தலைமை இந்த விஷயத்தில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது தான் நிதர்சனம்."
முதலில் டெல்லி மாநில அரசியலுக்குக என்று சரியான தலைமை இன்று வரை கிடையாது.
மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி, மாநிலத்திலும் பலம் வாய்ந்த கட்சி, மாநகராட்சி அளவிலும் பலம் வாய்ந்த கட்சி என்ற மிதப்பில் தான் உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் இருந்திருக்கிறது.
பள்ளிகள், சுகாதார நிலையங்கள், மெட்ரோ ரயில், பெண்களுக்கு இலவச பஸ், இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் 1000, சிறுபான்மை ஆதரவு நிலைப்பாடு, விவசாயிகள் ஆதரவு நாடகம் என பல்வேறு பரிமாணங்களை ஆம் ஆத்மி செயல்படுத்துவதையும், பாஜக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக ஆம் ஆத்மியை நோக்கி நகர்வதும், நாற்பது சதவீத மக்கள் வாக்களிக்க மறுப்பதையும் முழு ஈடுபாட்டுடன் பாஜக தலைமை கவனித்து அணுகாததின் விளைவுகளை இப்போது அறுவடை செய்கிறது.
டெல்லி மெட்ரோ வெற்றிக்கு பிறகு பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் சொன்னது
'நாளை குஜராத் தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு இதேபோல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரும்'.
நூறாண்டு காங்கிரஸினை வெற்றி கொள்ள ஒவ்வொரு நொடியும் பாடம் படித்து, செயல்படுத்தி வந்த பாஜக இப்போது இல்லை.
பிரதமர் மோடியின் உழைப்பின் கீழ், சோம்பேறியாகிவிட்ட, அதிகார மிதப்பில் இருக்கும் நிர்வாகிகளை கொண்ட பாஜக.
அதனால் தான் ஆம் ஆத்மி கற்று தரும் பாடங்களை சரியாக கவனித்து, தங்களை இன்னும் மாற்றி திருத்தி கொள்ளாமல் அசால்டாக நடந்து கொள்கிறது.
அரசியல் பாடங்களை அனு தினமும் கவனிக்காமல் அதிகாரத்தில் கவனம் செலுத்தினால், இறுதியில் முசோலினி அடைந்த தோல்வியையே பெற நேரிடும்.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.
ஆனால்
டெல்லி, பஞ்சாப், குஜராத், கோவா, இமாச்சல பிரதேசம் என சாம்ராஜ்ய விருத்தி செய்து வரும் ஆம் ஆத்மிக்கு எதிராக முற்றிலும் புதிய சிந்தனை கொண்டு, மாறுபட்ட அணுகுமுறைகளை பற்றி ஆராய்ந்து செயல்படுத்த வேண்டிய நேரம் இது.
இல்லை என்றால்,
அடுத்த பத்தாண்டுகளில் இப்போது காங்கிரஸ் சந்தித்து வரும் வீழ்ச்சியை பாஜக சந்திக்க நேரிடும்.
"தேர்தல் நேர செயல்பாடுகள், வியூகங்கள் பலனளிக்க வேண்டும் என்றால் கள அளவிலான செயல்பாடுகள் நேர்த்தியாக இருக்க வேண்டும்."
ஒவ்வொரு முறையும் பதிவாகாமல் போகின்ற நாற்பது சதவீத வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவின் ஆதரவு வாக்குகள். இவர்களை வாக்கு சாவடிக்கு வர வைப்பதில் தான், எதிர்கால பாஜகவின் தலையெழுத்து நிர்ணயம் செய்யப்படும்.
இப்போதைய உடனடி தேவை
"பாஜக, அடி முதல் நுணி வரை தன்னை முழு பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ள வேண்டும்."
குறைந்தபட்சம் இந்த பதிவு சுமக்கும் உண்மைகளை தமிழக பாஜக நிர்வாகிகள் புரிந்து களத்தில் செயல்பட வேண்டும். அங்கே ஆம் ஆத்மி இங்கே திமுக அவ்வளவு தான். ஆனால் கள அளவிலான செயல்பாடே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
டெல்லியை போல் அல்ல. இங்கே தமிழ்நாட்டில் அண்ணாமலை எனும் ஆளுமை தலைமை வகித்து பாஜகவை வழிநடத்துகிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நேரடியாக மக்களிடம் செல்லும் களப்பணி மட்டுமே.
முனைப்புடன் இலக்கினை நோக்கி பயணித்தால் நாற்பதும் நமது, தமிழகமே நமதாகும்.
நாம் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
"கடந்து வந்த பாதையையும், களமாடிய காரணங்களையும் திரும்பி பாருங்கள். நமது இலக்கு மீண்டும் ஞாபகத்தில் வரும். இலக்கு தெளிவானால் எதிர்காலமும் வசப்படும்."
டெல்லி மெட்ரோ தேர்தல் முடிவுகள் பாஜக தலைமைக்கு ஓர் எச்சரிக்கை மணி.
தோல்வியும் நல்லது தான்.
No comments:
Post a Comment