மாரிதாஸ் கைதின் போது பாஜகவும் அண்ணாமலையும் உடன் நின்று அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.
கிஷோர் கே சாமி கைதின் போதும் சட்ட ரீதியான உதவிகள் செய்து ஆதரவளித்தார்கள்.
ராணுவ வீரரை அச்சுறுத்திய போதும் அவர் குடும்பத்திற்கு பாஜக தலைமை முதல் தொண்டர்கள் வரை பக்க பலமாக நின்றார்கள்.
இதெல்லாம் எதற்காக எங்கிறீர்களா?
பாஜக அவர்கள் தயவை எதிர்பார்க்கிறது என்று நினைத்தால் தவறான கணிப்பு.
அவர்களுக்கு உதவி செய்து கரையேற்றி விட்டபின் அவர்கள் பக்கம் பாஜகவோ தலைவர் அண்ணாமலையோ திரும்பி கூட பார்ப்பதில்லை. அவர்களும் நன்றி தெரிவித்து மரியாதை நிமித்தம் கூட சந்திப்பதில்லை,அது வேறு கதை.
ஆனால் இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகிறது. ஒன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தவறுகளை சுட்டி காட்டுவதால் அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளானால் அது யாராக இருந்தாலும் மதம், ஜாதி, கட்சி பாகுபாடின்றி அவர்களுக்கு ஆதரவாக பாஜக முன் நிற்கும்.
இரண்டாவது அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களிடம் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. அதாவது தமிழக பாஜக யாரையும் நம்பி இல்லை. பொது மக்களை நம்பி மட்டுமே அரசியல் செய்கிறது என்பது சூசகம்.
எனவே இது போன்ற நடவடிக்கைகள் திமுகவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் மட்டுமே, கட்சியை வளர்க்கும் முயற்சி அல்ல.
ஒருவன் இக்கட்டில் இருக்கும் போது உதவி செய்து தன் பக்கம் சேர்க்கும் அளவிற்கு கீழ்த்தரமான வேளைகளில் பாஜக இறங்குவதில்லை.
எனவே அவன் மோசக்காரன், இவன் ஏமாற்றுக்காரன், அவனுக்கு உதவ வேண்டாம் அவனை நம்ப வேண்டாம் இவன் கட்சியில் சேரமாட்டான், முதுகில் குத்துவான் என்றெல்லாம் யாரும் வருந்த வேண்டாம்.
அண்ணாமலை முன்னெடுப்பது ப்ராக்டிகல் பாலிடிக்ஸ் . நாம் எதிர்பார்ப்பது எமோஷனல் பாலிட்டிக்ஸ்...
யதார்த்தமே சரியான வழி. அவர் சரியான வழியில் தான் பயணிக்கிறார், விட்டுவிடுங்கள் அவர் வழியில் ...

No comments:
Post a Comment