Tuesday, December 6, 2022

யார் இறைவன்? : நமக்கும் மேலான ஒரு சக்தி நமக்கு உதவி செய்தால் அந்த சக்தியே இறைவன்.

 உயிர் : எது நம் உடலில் இருந்தால் அனைத்து கருவிகளும் இயங்குமோ, அதே சமயம் எது நம் உடலில் இல்லா விட்டால் அனைத்து கருவிகளும் செயலிழந்து விடுமோ, அதுவே உயிர் எனப்படும் !!! இதையே ஞானிகள் ஆத்மா அல்லது ஆன்மா என வர்ணிக்கின்றார்கள்.

உயிரே இறைவன் : இதயம், நுரையீரல் ரத்தஓட்டம், உடல் வளர்ச்சி ஆகியவற்றை நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாத காரணத்தால், இவை யாவும் நமக்கு மேலான சக்தியாக கருதப்படுகிறது !!! சகா காலமும் நமக்கு உதவி செய்து கொண்டிருப்பதால் இந்த உயிர் சக்தியை நான் இறைவன் என்று கூறுகிறோம் !!! எனவே,
"உயிர் = இறைவன்=ஆத்மா=ஆன்மா."
இறைவன் எங்கு இருக்கிறார்? நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் உயிரே முதன்மையான இறைவன் என்பதால், அந்த இறை சக்தி நம் உடலுக்குள்ளேயே இருக்கிறது !!!
இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் : அந்த உயிர் எனப்படும் இறைவன், இத்தனை ஆண்டுகளாக நம் உடலை கெட்டுப் போகாமலும், உடலுக்கு சீரான வளர்ச்சியை கொடுத்துக் கொண்டும், உடலை இயக்கிக் கொண்டும், சதா காலமும் நமக்கு உதவி செய்து கொண்டும் இருக்கின்றார் !!
இறைவனை உணர முடியுமா : இதயத்துடிப்பு, நாடி துடிப்பு, மூச்சுக்காற்று, கண் காது மூக்கு, வாய், தோல் ஆகியவற்றின் இயக்கம், மூலம் இறைவனை நாம் உணரலாம் !!!
மற்ற இறை சக்திகள் : சிவன் விஷ்ணு, முருகன், விநாயகர், அம்மன், இயேசு அல்லாஹ் இவை யாவும் இறைவனின் ரூபங்களே !!! நாம் ஒவ்வொருவரும், அவரவர் விருப்பப்படி, இறைவனை வழிபட்டுக் கொள்ளலாம் !!! ஒருவர் வழிபடுகின்ற இறை தன்மையை மற்றவர் மதித்து நடந்து கொள்ள வேண்டுமே தவிர இழிவாகவோ தரக் குறைவாகவோ பேசக்கூடாது.
உண்மையான பக்தி : நம்மை காட்டிலும் மேலானவர்கள் மீது நாம் செலுத்துகின்ற அன்பு தான் பக்தி எனப்படுகிறது !!! நற்குணங்களிலிருந்து பிறப்பது தான் உண்மையான பக்தி !!! துற்குணவாதிகளின் போலி பக்தியை இறைவன் ஏற்பதில்லை என்றாலும் அவர்கள் பக்தியையும் நாம் இழிவாக பேசக்கூடாது !!!
ஆன்மீகம்: உண்மையான பக்தியின் வெளிப்பாடு தான் ஆன்மீகம் !!! நம் மனம் உண்மையான பக்தியால் நிறைந்திருக்கும் பொழுது நாம் செய்கின்ற அத்தனை செயல்களும் ஆன்மிகம் எனப்படுகிறது.
இருவகை ஆன்மீகம் : மனிதன் விரும்புவதை இறைவனுக்கு செய்தல் முதல் வகை ஆன்மீகம் எனப்படுகிறது !!! இறைவன் விரும்புவதை, மனிதன் இறைவனுக்கு செய்வது இரண்டாம் வகை ஆன்மீகம் எனப்படுகிறது !!!
உதாரணமாக, கோவிலில் காணப்படும் ஆன்மீகம் அங்க பிரதட்சணம், நேர்த்திக்கடன் செலுத்துதல், உண்டியல் காணிக்கை, முடி காணிக்கை, இறையலங்காரம், இறைவனை புகழ்ந்து பாடுதல், தேர் இழுத்தல், பஜனை, பூஜை புணஸ்க்காரங்கள் இவை அத்தனையும், மனிதன், விரும்புவதை இறைவனுக்கு செல்வது. இவை முதல் வகை ஆன்மீகம் எனப்படுகிறது !!! இதில் இறைவனை அனுபவிக்கலாம் ; ஆனால் அடைய முடியாது !!!
இவ்வகை ஆன்மீகத்தில் இருப்பவர்கள், உண்மையான பக்தியோடும், பிறருக்கு உதவும் நற்குணவாதிகளாகவும், இருந்தாலும் இவர்கள் செய்த புண்ணியங்களை கழிப்பதற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வரும் !!! மனித பிறவியில் ஏற்படவிருக்கும் மரணத்திற்காகவே மனிதன் அஞ்சும் போது, 21 லட்சம் வகையான விலங்கு தாவர பிரிவுகளில் பிறந்து பிறந்து நம் ஆத்மா மரணிக்க நேரிடும் போது அது எத்தனை சரீர துன்பங்களை அனுபவிக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் !!!
எனவே பிறவாவரம் பெறுவதே மனித பிறவியின் பிறவிப் பயனாகும் !!! இதற்காகவே நாம் ஆன்மீகத்தில் மேலும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் !!!
இரண்டாம் வகை ஆன்மீகம் : "எவர் ஒருவர், எப்போதும் எந்த கவலையும் என்று தன்னுள் தானே சந்தோஷமாக இருக்கின்றாரோ அவரே எனக்கு மிகவும் பிரியமானவர்", என்று இறைவன் கீதையில் கூறுகிறான் !!! மனிதன் அனுபவிக்கும் அத்தனை வகையான கவலைகளையும் நீக்கி, தனக்குள் தானே சந்தோசமாக வாழ்வதற்கு, "நான் ஆத்மா" என்கிற இரு சொல் மந்திரத்தையும், இறைவன் கீதையில் தருகின்றார் !!!
ஆத்ம ஞானத்தின் உட்பொருட்கள்:
1. நான் உடல் அல்ல
2. நான் மனம் அல்ல.
3. நான் ஆத்மாவாக இருக்கிறேன்
4. ஆத்மாவின் மேன்மையான ஞானங்களை தன் ஞானங்களாக உணர்ந்து மனிதன் கவலைகளிலிருந்து விடுபடுதல் !!!
700 கோடி உலக மக்களும் மொத்தமாக அனுபவிக்கும் 95 லட்சம் கோடி கவலைகளும், இரு வகைகளாக பிரிக்கலாம் !!! குற்ற உணர்ச்சி தரும் கவலைகள், இழப்புணர்ச்சி கவலைகள்.
குற்ற உணர்ச்சி கவலைகள் : அதை அவ்வாறு செய்ததால், நான் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்", என்கிற உணர்வை தருகின்ற கவலைகள் யாவும் குற்ற உணர்ச்சி தரும் கவலைகள். இது இறந்த காலத்தைப் பற்றிய நிகழ்கால கவலையாகும்!!!
இழப்புணர்ச்சி கவலைகள் : மதிப்புமிக்க பொருளை நெருங்கிய உறவினரை இழப்பதால் ஏற்படும் கவலைகள் எனப்படுகிறது !!! இறந்துவிட்ட அப்பொருளை இழந்து எதிர்காலத்தை நாம் எவ்வாறு சந்திக்க இருக்கிறோமோ என்ற பயத்தினால் உருவாகும் கவலையே இவ்வகை கவலைகள் !!! இது எதிர்காலத்தைப் பற்றிய நிகழ்கால கவலையாகும் !!!
குற்றவுணர்ச்சி கவலைகளை தீர்க்கும் ஆத்ம ஞானம் : ஆத்ம ஞானியானவன் தனது இறந்த காலத்தில் செய்த குற்றங்கள் யாவும், அவனுடைய மனமும் உடலும் தான் செய்தது !!! எனவே அவனது உடலும் மனமும் தான் குற்றவாளிகள் !!! செயலற்ற ஆத்மாவானது எக்குற்றமும் செய்யாத காரணத்தால், அவன் குற்றவாளி அல்ல !!! எனவே ஆத்ம ஞானியாளவன் குற்ற உணர்ச்சி கவலைகளில் இருந்து விடுதலை அடைகிறான் !!!
இழப்புணர்ச்சி கவலைகளை தீர்க்கும் ஆத்ம ஞானம் : ஆத்மாவுக்கு எதுவும் சொந்தமில்லை என்பதால், "நான் ஆத்மா" என்கிற ஆத்ம ஞானி எந்த உடமைகளும் இல்லாதவன் ஆவான் !!! ஏதும் இல்லாதவன் எதையும் இழக்க முடியாதவன் என்பதால், ஆத்ம ஞானி எதையும் இழக்க இழக்காதவன் ஆவான் ஏதும் இழக்காதவன் எதற்காகவும் கவலைப்பட தேவையில்லை !!!
மனிதனின் செயல்களில் ஏற்படும் கவலைகளை தீர்த்தல் : நாம் அன்றாடம் செய்கின்ற செயல்கள் யாவும் மனிதனுக்கு கவலையைத் தருகின்றன !!! இத்தகைய கவலைகளை நான் கர்மயோகம் மூலம் நீக்கி விடலாம் !!!
*கர்மம் & கர்மயோகம் என செயலை இரு வகைகளாக பிரிக்கலாம்.*
*கர்மம் என்பது மனதை அதன்போக்கில் அனுமதித்து செயலாற்றுவது.*
*கர்மயோகம் என்பது, *1. செயலுக்கு முன்னும், 2. செயலின் போதும், 3. செயலுக்குப் பின்னும், நம்மனதில் இருக்க வேண்டிய எண்ணம், அல்லது நோக்கம், அல்லது மனோபாவனை, இவற்றை முன்னிறுத்தி செயலாற்றுவது
ஆக, *இவ்விதமான மனோ -பாவனைகளோடு*, நாம் செயலை செய்தால், அச் செயலே கர்மயோகம். மற்றவை யாவும் *கர்மமே !!!*
கர்ம யோகம் :
*1. செயலுக்கு முன்,*
*(a). எண்ணம் பொது நல நோக்கத்தோடு இருத்தல்,*
*(b). எண்ணமும், சொல்லும், செயலும், ஒன்றாக இருத்தல்*
*(c). செயலை பற்றிய திட்டமிடுதல்*
*(d). பலன் நோக்கு இன்றி இருத்தல், அதாவது, தோள்வி பயமின்றியும், வெற்றிமோகம் இன்றியும் செயல்படுதல்.*
*2. செயலின்போது*
*(a) பலன் நோக்கு இன்றி இருத்தல்*
*(b). முழு முயற்சியுடனும் ஈடுபாட்டோடும், கவனமுடன் செயல்படுதல்.*
*3. செயலுக்குப் பின்*
(a). *விளைவுகளில் விறுப்பு வெறுப்பு ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளுதல் !!! *பக்தியைப்* பயன்படுத்தி விறுப்பு *வெறுப்பை தவிர்க்கலாம் !!!* அதாவது, வெற்றி அல்லது தோள்வி ஆகிய விளைவுகள் எதுவாயினும், அதை *இறைவனின் பிரசாதமாக* விருப்பமுடன் ஏற்றுக் கொள்ளுதல்.
இவ்வாறான மனோ-பாவனை அல்லது *நோக்கங்களோடு,* அதாவது, இவ்வாறான மன-எண்ணங்களை நம் *மனதில் முன்நிறுத்தி,* செயல்களை செய்வதே, கர்மயோகம். இவ்வகை கருமையாக தான் சித்த சுத்தி ஏற்படும் கவலைகள் குறையும் !!!
பணக்கவலை : இன்றைய நடைமுறை வாழ்க்கையில், எல்லோருக்குமே இருக்கின்ற பொதுவான ஒரு கவலை என்று சொன்னால் அது பணக்கவலை தான் !!! பணத்திற்கும், பொருளுக்கும், வீடு, பங்களா, கார், சொத்து, இவை யாவற்றிற்கும் உயிர் இல்லை என்பதால், இவ்வகை பண கவலைகளுக்கு அவை காரணமாக இருக்க முடியாது !!!
நமது வருமானத்தைக் காட்டிலும், இரண்டு மடங்கு வருமானம் பெறுபவனை போல, நாம் எல்லோருமே, செலவு செய்ய விரும்புகின்றோம் !!!
இதுவே மனிதன் பணக்கவலைக ளுக்கு காரணம் !!! நமது வருமானத்தில் 5% தானம் செய்வதற்கும், 45% சேமிப்புக்கும், மீதமுள்ள 50% வருமானத்தில் செலவுகளை திட்டமிடுதலும், அதன்படி கடன் வாங்காமல் வாழ்வதும், மனிதனின் மன கவலைகளை குறைக்கும் !!!
தேவைகளை குறைத்துக் கொள்வதே பணக் கஷ்டத்தில் இருந்து, விடுதலை பெறுவதற்கு உகந்த வழியாகும். கொரனா சுனாமி போன்ற பேரிடர் சூழ்நிலைகளிலும் கடன் வாங்காமல் வாழ்வதற்கு, இந்த சேமிப்பு உங்களுக்கு உதவலாம் !!!
மனிதன் எப்போதும் எந்த ஒரு கவலையும் இல்லாமல், வாழ்வது ஆன்மிகத்தின் நிறை நிலையாகும் !!! இதன் மூலம் மனிதன் மரணத்தையும் வெல்லலாம் !!! இப்போதே, பிறவாவரம் பெற்று, வாழ்வின் இறுதியில், பிரம்மத்தில் ஐக்கியம் ஆகலாம் !!!
கவலைகளை நீக்கும் ஆத்ம ஞானம் : ஆத்மாவே நான் என்ற எண்ணத்தில் நிலைத்திருக்கும் ஆத்ம ஞானியானவன், உருவமற்றவன், நிறமற்றவன், பெயரற்றவன், செயலற்றவன், குணமற்றவன், பிறப்பற்றவன், மரணமற்றவன், பிரிக்க முடியாதவன், அழிக்க முடியாதவன், எரிக்க முடியாதவன், புதைக்க முடியாதவன், என்றும் நித்தியமானவன் !!!
இந்த ஆத்ம ஞான மனதில் நிலைக்க வேண்டுமானால், நித்திய அனுப்பிய வேறுபாடுகளை, ஆத்ம ஞானியானவன் மனதில் நிலை நிறுத்த வேண்டும் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...