சென்ற வாரம் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் சர்ச்சைப் பேச்சுதான் இதற்குக் காரணம்.
'கட்சிக்காக உழைப்பவர்களுக்குப்
பதவி கிடைப்பதில்லை' என்பது ஆர் எஸ் பாரதியின் குற்றச்சாட்டு. இது வலைதளத்தில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூரில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசும் பொழுது, முதல்வர்
"கட்சிக்காக உழைப்பவர்களுக்கே திமுகவில் உரிய வாய்ப்பு கொடுக்கப்படும்" என்று ஆர் எஸ் பாரதியை மேடையில் வைத்துக்கொண்டே பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்துக்களையும் இந்துப் பெண்களையும் அடிக்கடிச் சீண்டும்
ஆ. ராஜாவுக்கும் முடிவாக ஆப்பு வைக்க முதல்வர் முடிவு செய்துவிட்டார் என்று தோன்றுகிறது.
சென்ற வாரம் அரியலூரில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது "சிவசங்கருக்கு ஆ. ராஜா உறுதுணையாக நிற்பார்" என்றார்.
அரியலூர் பெரம்பலூர் பகுதிகளில் ராஜாவுக்கும் சிவசங்கருக்கும் இடையே கடும் போட்டி இருப்பது அனைவருக்கும் தெரியும். கட்சி அமைப்பில் கூட சிவசங்கரை விட ஆ ராஜா தான் சீனியர். அப்படி இருக்கையில் இந்த பேச்சு ஆ. ராஜாவை மட்டம் தட்டுவது போல இருக்கிறது.
முதல்வரின் அடுத்த டார்கெட் தர்மபுரி எம்பி செந்தில் குமார் தானாம்!
வாய் திறக்கும் போதெல்லாம் இந்துக்களுக்கு மட்டுமே எதிராகப் பேசும் இவரால் முதல்வருக்கு இரவில் தூக்கமே வருவதில்லையாம்.
2024 தேர்தலில் தர்மபுரி செந்தில்குமாருக்குக் கிடைக்காதாம்.
ஆனால், தற்பொழுது திமுகவுக்கு
damage control mode மட்டுமே போதாது. Image build-up
mode- உம் உடனடி தேவைதான்.

No comments:
Post a Comment