Thursday, July 7, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடல் 12-ந்தேதி கோர்ட்டில் தாக்கல்; சி.பி.ஐ. அறிவிப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீரா ராடியாவின் டேப் உரையாடலை 12-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்வதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடல் 12-ந்தேதி கோர்ட்டில் தாக்கல்; சி.பி.ஐ. அறிவிப்பு
 
இந்த வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் உரையாடல் அடங்கிய டேப் சி.பி.ஐ. வசம் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுத்தர நீரா ராடியா பல்வேறு அரசியல் பிரமுகர்களுடனும் தொழில் அதிபர்களுடனும் பேசி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
 
இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஏ.கே. சிங். கூறுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நீரா ராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப் விவரங்களை வருகிற 12-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம் என்றார். அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் தாக்கல் செய்வோம் என்றும் வக்கீல் கூறினார்.
 
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் நீதிபதி சைனியிடம் நீரா ராடியாவின் உரையாடல் டேப் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே. சிங் பதில் அளிக்கையில் மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார். நேற்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. வைத்திருக்கும் அனைத்து தஸ்தாவேஜூ களையும் தங்களுக்கு தர வேண்டும். அப்போதுதான் தங்களால் பதில் அளிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...