Thursday, July 7, 2011

"நிதியமைச்சக ஆலோசனை:தயாநிதி நிராகரித்தார்'

:"2ஜி' ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் குழு கூறிய ஆலோசனையை தயாநிதி ஏற்கவில்லை என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம் நிதியமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு நேற்று தனது விசாரணையை துவக்கியது. இந்த குழுவின் முன் ஆஜரான பொருளாதார விவகாரத்துறை செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிடுகையில், "கடந்த 2006ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கட்டணம் நிர்ணயிப்பது குறித்து, அமைச்சர்கள் குழுவில் கூடிப்பேசி எடுத்த முடிவை, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு விலை நிர்ணயிக்கக்கூடிய தன்னாட்சி அதிகாரம் தனக்கு உள்ளதாக அவர் நினைத்தார். எனவே அவர், அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையை ஏற்கவில்லை. இவ்விஷயத்தில் நிதியமைச்சகத்தின் ஆலோசனையை அவர் நிராகரித்து விட்டார்' என்றார்.தயாநிதியின் இந்த முடிவு, தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக சாக்கோ, நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...