ஓர் எச்சரிக்கைப் பதிவு – செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்தனையா? உஷார்! உஷார்!
‘மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பி ருக்கிறது’ என்றபடி காவல்துறையைக் குவித்தது … ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட் டியது… எல்லாம் அந் தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற் றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும்
கொள்ளையடிக்க முடியு ம்… பற்பல குற்றங்களை அரங்கேற்ற முடியும் என் பது இந்தக் காலம். எல் லாம், ‘டெக்னாலஜி பகவா ன்’ கடைக்கண் பார்வை யால் ஏற்பட்டிருக்கும் ‘வள ர்ச்சியே!’
‘நீங்கள், ஒரு ஷாப்பிங் மால் அல்லது திருவிழா கூட்டத்தில் நிற்கும்போது, உங்களுக்கு த் தெரியாமலேயே உங்களுடைய மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற் றில் இருக்கும் தகவல்கள் மொத் தத்தையும் திருடி, அதை வைத்தே ஒட்டு மொத் தமாக நொடி களில் உங்களை மொட்டையடிக்க முடி யும்’ என்று சொன்னால், அதிர்ச் சியாவீர்கள்தானே! ஆனால், இது தான் உண்மை!
”ஆம்… இவன்தான் குற்றவா ளி என்று அறிந்துகொள்ளக் கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊ ரிலோ, வேறு நாட்டிலோ உலா வும் இந்த ‘டெக் குற்றவாளிகள்’, மிகவும் சிக் கலானவர்கள். இவ ர்களை நெருங்குவது கூட பெரு ம்பாலும் கடினமே! ஆக, தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய வேலைகளை மட்டும் சுலபமாக்க வில்லை.. திருடர் களின் வேலையையும்தான்! ஆக, மிகுந்த கவனத் துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதே, அவ ர்களிடமிருந்து நம்மையும், நம் பணம் மற்றும் பொரு ட்களையும் தற்காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி” என்கிறார், சென்னையைச் சேர்ந்த ‘சைபர் செக்யூரிட்டி’ அமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி.
செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெ டிட் கார்டு, இன்டர்நெட் போன்றவ ற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றிவிரி வாகவே பேசினார், ராமமூர்த்தி.
செல்போன் இணைப்பு… மக்கள் தொகையைவிட அதிகம்!
”இந்தியாவின் மக்கள்தொகை இன்று 120 கோடிக்கு மேல். இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைவிட அதிக மாகக்கூடும் என்கிறது ஒரு தகவல். அந்தளவுக்கு இன்று அலை பேசி இணைப்புகள் மிகச் சுலபமாகக் கிடைக்கின் றன. ஆக, 110 ரூபாய் முதலீட் டில் ஒருசிம் வாங்கிவிட்டால் போதும்… ஏன், இலவச சிம் கார்டு களும்கூட வந்துவிட்ட ன. இ வற்றைப் பயன்படுத்தி செய்யவேண்டிய குற்றப் பணி களைச் செய்துவிட்டு, அந்த எண்ணைத் தூக்கி எறிந்து வி டலாம். சரியான தகவல்கள் பெறாமல் வாடிக்கையாளர்க ளின் எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இணைப்புகளை வழ ங்கும் அலைபேசி நிறுவனங்க ளால், இத்தகைய குற்றவாளிக ளைக் கண்டறிவது சாத்தியமில் லாம ல் போகிறது. இதுவே சில வெ ளிநாடுகளில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, வாடிக் கையாளர்கள் பற்றிய தகவல்க ளை உறுதி படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
ஏமாற்று வேலைகள் பலவிதம்!
நம்மில் பலரும், ‘நாங்க டுபாக்கூர் டெல் நெட்வொர்க்ல இருந்து பேசு றோம். உங்க அட்ரஸ், நேம் கன்ஃபர்ம் பண்ணணும்… ப்ளீஸ் சொல்லுங்க’ எ ன்கிற ரீதியில் வரும் அலைபேசி அ ழைப்புகளைக் கடந்திருப்போம். உண் மையில் அலைபேசி நிறுவனங்களிடம் நம்மைப் பற்றியதக வல்கள் ஏற்கெனவே இருக்கும் என்ப தால், அவர்கள் நம்மிடம் கேட்க மாட் டார்கள். நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, ‘சரியா?’ என்றுதா ன் கேட்பார்கள். எனவே, உங்களைப் ப ற்றிய தகவல்கள் சொல்லுங் கள் என்று அழைப்புவந்தால், துண்டித்துவிடுங்கள் . உங்கள் பெயர், முகவரியைப் பெற்று, மோசடி வேலையில் இறங்கக் கூடும்.
என்னென்ன குற்றங்கள்?
சரி, நம்முடைய அலைபேசி எண் மற்றும் நம்மைப் பற்றிய விவரங்களை வைத்துக்கொ ண்டு என்ன செய்ய முடியு ம்?
ஒருவர் 10 ஆயிரம் தொ லைபேசி எண்கள், சம்பந் தப்பட்டவர்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு அனைத்து விவரங்களை யும் பல குறுக்கு வழிகள் மூலமாகச் சேமித்து வைத்திருக்கிறார் என்றால், அவற்றை க்ரைம் மூளைகொண்ட ஒரு குழுவு க்கு விற்பனை செய்யலாம். அந்தக் குழு, பணக் கொள்ளையில் இருந்து குழந்தைகள் கடத்த ல் வரை அந்த விவரங்களை வைத்தே திட்டங்க ளைத் தீட்டலாம். அல்லது, நம்மு டைய பெயர் மற்றும் முகவரியில் ஒரு குற்றவாளி தனக்குத் தேவை யான அலைபேசி எண் வாங்கவோ, வங்கிக் கணக்கு தொடங்கவோ முடியும்.
விளம்பர ‘எஸ்.எம்.எஸ்’கள் அனுப்பும் ஏஜென்ஸிகளுக்கு, நம்பெயரும் அலைபேசி எண்க ளும் தரப்பட, அவர்களின் தொல்லை நம்மை துரத்திக் கொண்டே இருக்கும். ‘வீட்டி லிருந்தே சம்பாதிக்கும் வே லை’ என்று வரும் ஒரு விளம் பர ‘எஸ்.எம்.எஸ்’ஸை நம்பி அவர்கள் செல்லும் முகவரிக் குச் செல்லும் நபர்களிடம் ‘ முன் பணமா 1,000 கட்டுங்க’ என்று வசூலித்துக்கொண்டு, கம்பி நீட்டுவதில் தொடங்கி, நம் எண்ணுக்கு வரும் மோசடி ‘ எஸ் . எம்.எஸ்’கள் பல ரகம்.
‘பரிசு விழுந்திருக்கு!’
‘உங்களுக்கு இலவசமாக 10 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் கிடைத்திருக்கிறது’, ‘உ ங்கள் அலைபேசி எண் 2,500 டாலர் பரிசுத் தொகையைப் பெற்றுள் ளது’, ‘நான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தி ல் அனைவரும் ஒரு விபத்தில் இறந் துவிட்டார்கள். அதனால், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் ( சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) மதிப்புள்ள எங்களது சொத்தை உடனடியாக வேறொருவர் வங்கிக் கணக்குக்கு மாற்றவேண்டு ம். இல்லையென்றால், அது யாருக்கும் கிடைக்காமல் போய்விடு ம். அதனால் உடனடியா க உங்களது வங்கிக் க ணக்குக்கு மாற்றுகிறே ன். இப்பணத்தை வை த்து, பொதுச்சேவையா ற்றலாம். இதற்கான சே வைக் கட்டணமாக 500 டாலர் (30 ஆயிரம் ரூபா ய்) மட்டும் நீங்கள் அனு ப்பி வைத்தால் போதும். வருகிற மொத்தப் பணத் தில் பாதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசையைத்தூண்டும் அழைப்புகளும், ‘எஸ்.எம். எஸ்’களும் இப்போது அதிகம் உலாவுகி ன்றன! இவற்றைஎல்லாம் புறக்கணியு ங்கள். இல்லாவிட்டால், உங்கள் வங்கி க் கணக்கு எண் வரை கே ட்டு வாங்கி, உங்களை மொட்டை அடித்துவிடுவார் கள்.
தகவல் கொள்ளை!
நம் செல்போன்களில் உள்ள தகவல்க ளை நாம் அறியாமலேயே ஸ்கேன்செய்யும் வசதிகொண்ட ‘ஸ் கேனர்’கள் இன்றைக்கு வந்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் விலையிலேயே இ வை கிடைக்கின்றன. ஷா ப்பிங் மால், திரையரங்க ம், விழாக்கள் என மக்கள் கூடும் இடங்களில் சதிகா ரர்கள் நம் அருகில் நின்று, அந்த ஸ்கேனர் மூலமாக நம் செல்போன் களில் உள் ள தகவல்களை ஸ்கேன் செய்துவிடுவார்கள். சிலர் அலைபேசி யில் வங்கிக் கணக்கு எண், ஏ.டி .எம் பின் நம்பர் முதற்கொண்டு சே மித்து வைத்திருப்பார்கள். இவை யெல்லாம் சதிகாரர்களுக்கு கிடை த்தால்… அவர்களுக்கு கொண்டா ட்டம்தானே! செல்போனில் இருக் கும் தகவல்கள், புகைப்படங்களை த் திருடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். வங்கிக் கணக்கு தகவல்களை வைத்து, பணத்தைக் கொள்ளையடிப்பார் கள். எனவே, ஷாப்பிங் செ ல்லும்போது எடுத்துச் செ ல்லும் ஏ. டி.எம். கார்டுக்கு ரிய வங்கிக் கணக்கில் தே வையான அளவு பணத்தை மட்டுமே வைத்திருப்பது தா ன் பாதுகாப்பு.
எந்தவொரு சதிகாரருக்கு ம் நிச்சயம் உதவி செய்யக்கூடிய மறைமுக சதிகாரர்கள் இரு ப்பார்கள். அப்படித்தான் நம் பண விவரங்க ள் முதல் ஏ.டி.எம் பின் நம்பர் வரை குற்றவாளிகளின் கைக்குக் கிடைக்க, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பணியா ளர்களே சமயங்களில் காரணமா கிறார்கள். ஒருவேளை அத்தகைய பணியாளரை வங்கி மேலதிகாரி கண்டுபிடித்துவிட்டாலும், அதிகப ட்சமாக வேலையை விட்டு நீக்கு வார்கள். ஏனென்றால், அவர்செய்த தவறு வெளியில் தெரிந்துவிட்டால், வங்கியின் பெயர் கெட்டு வி டும். வாடிக்கையாளர்கள் குறைந்து விடுவார்கள் என்பது தான். பணியா ளரும் வேலை பறிபோனதை ஒரு பொருட்டாகக்கொள்ளாமல், தன் சதி வேலையை வேறொரு வங்கியில் சென்று தொட ர்வார்.
இதற்கெல்லாம் என்னதான் முடிவு?!
இதுபோன்று தொழில்நுட்பக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்க ளில் 99.9 சதவிகிதம்பே ர் புகார்கொடுப்பதில் லை. அப்படியே புகார் கொடுக்கச் செல்லும் 0.1 சதவிகிதம் பேரின் புகார் களை அவ்வளவு சீக்கிர த்தில் காவல் நிலையங் களும் ஏற்பதில்லை. அப் படியே ஏற்றாலும் பெரு ம்பாலும் நடவடிக்கைக ள் இருப்பதில் லை. காரணம், டெக் குற்றங்களை கண்டறிவதற் கான போதிய வசதிகள் இல்லாமை. இதுவே குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற ங்கள் செய்ய தூண்டு கோலாக இருக்கிறது என்று சொல்லலாம்” என்று தெள்ளத்தெளிவாக எடுத்து வைத்த ராமமூர்த்தி, ”இது குறி த்தெல்லாம் எங்கள் அமைப்பு மூலமாக அரசாங்கத்திடம் பல முறைவலியுறுத்தியிருக்கி றோம். இதுவரையில் எந்தவி த முன்னேற்றமும் இல்லை. அலைபேசி எண் முதல் வங்கி க் கணக்கு வரை ஒருவரின் விவரங்கள் திருடப் படுவதைத் தடு க்கும் ‘டேட்டா பிரைவசி ஆக்ட்’ என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் நடைமுறைப் படுத்தியி ருக்கின்றன. அதனால் அங்கே அவ்வளவாக இதுபோன்ற குற் றங்கள் நடப்பதில்லை. இதை நம் நாட்டிலு ம் நடைமுறைப்படுத்தி னால், டெக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்குள் நாம் கொள்ளை போகாமலி ருப்பது… நம் கைகளில்தான் இருக்கிறது” என்று அக்கறையுடன் சொன்னார்.
ஆம், நம் பாதுகாப்பு, நம் கைகளி ல் என்பதுதானே எக்காலத்தி லும் உண்மை!
பாடம் சொல்லும் குறும்படம்!
தொழில்நுட்ப வசதிகளைப் பயன் படுத்தி எப்படியெல்லாம் ஏமாற் று வேலைகளை செய்யலாம் என் பதை சொல்லக்கூடிய குறும் பட ம், ‘நான்காவது குற்றத் தருணம்’. ராபி இயக்கியுள்ள இப்படம், 14 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில்நண்பர்கள் இருவர் ‘ஏ.டி. எம்’மில் இருந்து பணம் எடுத்து வெளி யே வரும் நபரிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடுவதை தொழிலா க வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், ‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. எங்கயாவது ரூமுக்குள் ளயே உட்கார்ந்துட்டு திருடுற மா திரி ஐடியா இருந்தா சொல்லு’ என்று ஒரு நண்பன் கேட்க, ‘நான் ஒரு பொய்யான வெப்சைட் உருவாக்கியிருக்கேன். அதுல பல எம்.என்.சி கம்பெ னிகளோட லோகோ டீடெய்ல்ஸ் எல்லா மே போட்டிருக்கேன். வே லை வேணும்னு இன்டர்நெ ட்ல தேடுறவங்க நம்ம பக்கத் துக்கு வர்ற மாதிரியும், ரிஜி ஸ்டர் பண்றதுக்கு ஒருத்தரு க்கு 200 ரூபாயும் நம்ம அக் கவுன்ட்ல கிரெடிட் ஆகுற மாதிரி புரோகிராம் பண்ணி ருக்கேன்’ என்கிறான் மற் றொரு நண்பன். தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி எப்படிஎல்லாம் கொள்ளையடிக்க லாம் என்பதை எச்சரிக்கும்விதமாகச் சொல்லியிருக்கும்
லக்கி டிரா… உஷார்!
மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பி னால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவரு க்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்து விடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட் டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரி ன் ‘ஐ.டி’யும் சென்று சேரும். இது தேவைய ற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.
அலைபேசியில் உள்ள ‘ப்ளூ டூத்’ வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காம ல் ‘ஆஃப்’ செய்துவிட வேண்டு ம். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலை பேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.
டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றி ன் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெ ட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினா லும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கை யோடு திரும்பப் பெ றுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக் கின்றன.
தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொ ண்டு, ‘லக்கி டிரா… உங்கள் மொபைல் எண், இ-மெ யில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டு சிலர் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவ னங்களின் சார்பில் இதைச் செ ய்து கொண்டிருப்பார்கள். என் றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்த வருக்குச் செல்லாது என்பதற் கு எந்த உத்தரவாதமும் இல் லை.
வலைதளத்தை யார் வேண்டு மானாலும் உருவாக்கமுடியும் என் பது போலிகளுக்கு வசதி யாக இருக்கிறது. ‘வேலை வாங்கித் தரு கிறோம்… கடன் தருகி றோம்… தொழில்கற்றுத் தருகிறோம்…’ என்று எப்படி வேண்டு மானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடு பட முடியும். உஷார்… உஷார்.
ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதள ம் போலவே போலியான வ லைதளத்தை உருவாக்கி, நம் முடைய வங்கிக் கணக்கு உள் ளிட்ட விவரங்களை திருடும் ‘ஃபிஷிங்’ வேலைகளும் அதிகரித் துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்க ள் சென்றது மே… முகவரி இருக்கும் பகுதி யில் பூட்டு வடிவம் ஒன்று தோ ன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியி ன் பின்புலமானது பச்சை நிறத் துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.
டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!
இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ள ன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங் கியின் பெயரில் இருக்கு ம். அவற்றில் டெ பிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி .எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரு ம், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடு த்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒரு வித ‘ஸ்கேனர்’ மூலம் சதிகாரர்கள் ஸ்கே ன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கி விடு வார்கள்.
நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள் ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, கா ஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்த கைய ஏ.டி.எம் அமைக்கப் பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment