சோளக்கொல்லைப் பொம்மைக்கு சொக்காய் போட்டாற்போல்உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் ஓட் டைகளை வைத்துக்கொண்டு உலக அரங்கில் ஒழுக்க சீலனாக நடக்க முயற்சிக்கிறது நம் தேசம்
எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க வே ண்டும் – இது சோஷலிசம் இன்று இந்த தேசத்தில் இது கிடைக்கிறதா? மலம் கழிக்க மறை விடமில்லாத நாடுகளின் பட்டியலில் நாம்தான்முத லிடமாம் . . . அடச்சே!
சட்டத்தின்முன் அனைவரும் சமம் – இது சரிதானா? ஜனநாயகத் தில் நாம் எல்லோரும் மன்னர் – நாம் மன்ன ராக முடியுமா? இருப் பவரிடம் பெற்று இல் லாதவருக்குத் தரவேண்டும். – இது பொதுவு டைமை. ஆனால் நம் தேசத்திலோ இல்லாத வரை வதைத்து, இருப்பவன் கொழுப்பது தான் அதிகமாய் இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை – நமது பலம் என் கிறார்கள். உண்மைதான்! சம்பள உயர்வு – சலுகைகள் கேட்பதில் அணன்னா ஹசாரேவை அசிங்கப்படுத்துவ தில், தேர்தல் ஆணையத்தைக் கட்டிப்போட நினைப்பதில், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவதில், போப்பால் சட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவதில், குதிரை பேர அரசியல் நடத்துவ தில் கட்சி ஜாதி, மத வேறுபாட்டைக் கலைந்து எல்லா அரசியல் வாதிகளும் ஓரணியில் இருப்பது வேற்றுமையில் ஒற்றுமைதா னே!
கருணை மனு போடுவதற்காகவே, தூக்கு தண்டனையை வைத்து ள்ள நாடு ஒரே நாடு இந்தியா தான். குற்ற வாளிகள் தப்பிப்பதற்காகவே ஒரே நாடு இந்தியாதான், குற்றவாளிகள் தப்பிப்பதற்காகவே சி.ப•ஐ. என்றொ ரு அமைப்பிருப்பதும் இங்கேதான்.
இவையெல்லாம் போகட்டும் நம் நாட்டு ராணுவத்தில் என்னதான் நடக் கிறது? ராணுவ தளபதி, வி.கே. சிங் பிரதமருக்கு எழுதிய ரகசியக் கடிதம் எப்படி ஊடகங்களுக்கு வெளி யானது? டட்ரா டிரக்குகள்வாங்க தனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர முன் வந் ததாக தலைமை ராணுவ தளபதி யே சொன்ன பிறகும், ராணுவ அமைச்சரும், பிரத மரும் அப்படியா? என்று ஆச் சர்யமாய் மௌனம் சாதிப்ப து என்ன அநியாயம்?
தவறு செய்தவர்களை கண்டி ப்பதை விட … தவறை செய் யக் காரணமாக இருந்தவர்களை தண்டிப்பதுதானே நியாயம். அப்ப டியானால். . . இந்த தேசத்தை சேதமாக்கி வருபவர்களை யார் தண்டிப்பது? எப்படி தண்டிப்பது? எல்லோரும் உரத்து சிந்தித்து, ஒற்றுமையாய் செயல்பட்டால் நம் தேசம் புதிய தேசமாகும்.
No comments:
Post a Comment