திருமணம் பற்றி நபிகளார்:
يَامَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَآءَةَ فَلْيَتَزَوَّجْ فَاِنَّهُ اَغَضُّ لِلْبَصَرِ وَاَحْصَنُ لِلْفَرْجِ . وَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَاِنَّهُ لَهُ وِجَآءٌ.
‘வாலிபர்களே! உங்களில் வசதி வாய்ப்பினைப் பெற்றவர், திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் திருமணமாகிறது (பிற பெண்களை சிற்றின்ப நோக்கோடு பார்ப்பதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடி யதாகவும், மர்மஸ்தானத்தை (விபச்சாரத்தை விட்டும்) பாதுகாக் கக் கூடியதாகவும் இருக்கிறது. வசதி வாய்ப்பினைப் பெறாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும். ஏனெனில் நோன்பு சிற்றின்ப வேட்கையைத் தணிக்கக் கூடியதாக இருக்கிறது.’
وَمَنْ نَكَحَ فَقَدْ اَدّٰى ثُلُثَيْ دِيْنِهٖ . فَلْيَتَّقِ اللهَ فِيْ بَاقِيْهِ
‘திருமணம் செய்தவன் மார்க்கத்தில் மூன்றிலிரண்டு பங்குகளை நிறை வேற்றி விட்டவனாவான். மீதியில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளவும்’; என்றும்,
تَنَاكَحُوْا وَتَوَالَدُوْا وَتَكَاثَرُوْا فَاِنِّيْ اُبَاهِيْ بِكُمُ الْاُمَمَ يَوْمَ الْقِيَامَةِ وَلَوْ بِالسِّقْطِ.
‘திருமணம ;செய்து குழந்தைகளை அதிகம் பெற்று எண்ணிக்கையில் பல்கிப் பெருகிக் கொள்ளுங்கள். ஒரு விழுகட்டியாக இருந்தாலும் சரி, நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு கியாமத் நாளில் மற்ற உம்ம த்தினரிடம் பெருமை பாராட்டுவேன்’என்றும், ‘அதிகமாக நிகாஹ் செய்த வர்கள் நபிமார்கள்’ என்றும்,
حُبِّبَ اِلَيَّ مِنْ دُنْيَاكُمْ ثَلٰثٌ اَلنِّسَآءُ وَالطِّيْبُ وَقُرَّةُ عَيْنِيْ فِي الصَّلٰوةِ.
‘உங்களுடைய இவ்வுலகில் எனக்கு ஹலாலான மனைவியர், நறும ணம். தொழுகையில் என் கண் குளிர்ச்சியடைவது ஆகிய மூன்றும் பிரியமாக்கப்பட்டுள்ளன’ என்றும்,
اَلنِّكَاحُ مِنْ سُنَّتِيْ وَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِيْ فَلَيْسَ مِنِّيْ .
‘திருமணம் என் சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல’ என்றும்,
مَنْ تَرَكَ التَّزَوُّجَ مَخَافَةَ الْعَيْلَةِ فَلَيْسِ مَنَّا .
‘வறுமையைப் பயந்து திருமணத்தை விட்டவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல’ என்றும்,
مَنْ كَانَ ذَاطَوْلٍ فَلْيَتَزَوَّجْ .
‘வசதி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும்’ என்றும்,
تَزَوَّجُوْا فَلَيْسَ فِي الْجَنَّةِ اَعْزَبُ .
‘திருமணம் செய்து கொள்ளுங்கள். சொர்க்கத்தில் திருமணமில்லாதவர் கிடையாது’ என்றும்,
وَلَا تَكُوْنُوْا كَرُهْبَانِ النَّصَارٰى
‘கிறித்துவ பாதிரிகளைப் போன்று (பிரமச்சாரிகளாக) இருந்து விடாதீர் கள்’ என்றும் பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் திருமணத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள்.
உடலுறவு கொள்வதற்கு தேவை ஏற்பட்டு மஹரும், உணவு, உடை ஆகியவையும் கொடுக்க வசதி பெற்றவன் திருமணம்செய்வது சுன்னத் தாகும். சுன்னத் என்பது அவனது உணர்ச்சியை அடக்கிக் கொள்ள சக்தி பெற்றவனுக்காகும்.
அவ்வாறு அடக்க முடியாதவனுக்கு திருமணம் செய்வது வாஜிபாகும். உடலுறவு கொள்ள இயலாதவனுக்கு மக்ரூஹ் ஆகும்.
ஷாபியீ மத்ஹபில் சில இமாம்களிடத்திலும் மற்ற மூன்று மத்ஹபுக ளிலும் வாழ்க்கைச் செலவினங்களுக்குக் கொடுக்கச் சக்தி பெற்றவன் உடலுறவு கொள்வதில் ஆசை கொண்டவனாக இருந்தால் திருமணம் செய்வது வாஜிபாகும். ஆனால் அவன் ஜினாவை பயந்தால் எல்லோரி டத்திலுமே வாஜிபாகும்.
திருணம நாளில் வாழ்த்துக் கூறும் முறையில் நகரா அடிப்பதும், தம்பூ ரா வாசிப்பதும், மத்தளம், தஃப் அடிப்பதும் கூடும்.
பெண்ணை பார்ப்பது:
திருமணம் செய்ய நல்லெண்ணங்கொண்டு முடிவுசெய்தபிறகு மாப்பி ள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது சுன்ன த்தாகும். அதாவது தொழுகையில் மறைக்கப்பட வேண்டிய உறுப்புக ளைத் தவிர மற்றதைப் பார்த்துக் கொள்வது சுன்னத். எனினும் பெண் ணுக்கு மஹ்ரமான ஒருவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர திருமணம் முடியும் முன் பெண் ஆணிடம் நேரடியாக பேசுவ தோ, செல்போன் மூலமோ அல்லது மற்ற நவீன கருவிகள் மூலமோ செய்திகளை அனுப்புவதோ, பேசுவதோ, தனியாக சந்திப்பதோ மார்க்க த்திற்கு முரணானது ஆகும்.
குத்பா ஓதும் இடங்கள்:
பெண் பேசப் போனால் அப் பேச்சைத் தொடங்கு முன் மாப்பிள்ளையோ அல்லது அவனுடைய வக்கீலோ ஒரு குத்பா ஓதுவதும், பிறகு வலீயா னவர் சம்மதித்து வாக்கு கொடுக்கும் முன் வலீ அல்லது அவருடைய வக்கீல் ஒரு குத்பா ஓதுவதும், பின்னர் நிகாஹ் நடைபெறும்போது பெண்ணின் வலீகாரர் ஈஜாபுக்கு முன் ஒரு குத்பா ஓதுவதும் சுன்னத் தாகும்.
ஒருவன் ஒரு பெண்ணை பேசி அதில் சம்மதம் ஏற்பட்டிருக்கும் போது அதை அறிந்த வேறொருவன் அப்பெண்ணை தனக்குப் பேசுவது ஹறா மாகும். மாப்பிள்ளை விஷயத்திலும் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை அல்லது பெண் கேட்டு பேசும் பொழுது ஒருவரைப் பற்றி விசாரித்தால் அறிந்தவர்கள் அவரைப் பற்றியுள்ள விசயத்தை உள்ள படி விபரமாய்க் கூறுவது வாஜிபாகும். இதனால் புறம்பேசுவது ஆகாது . அப்படி உண்மையைக் கூறாது மறைத்தால் கேட்பவருக்கு மோசம் செய்தவராவார்.
நிகாஹு செய்ய தகுதியுடைய பெண்கள்:
‘பொருள் வசதி, கண்ணியமான குடும்பப் பிண்ணனி, அழகு, இஸ்லா மிய மார்க்க நெறி கடைபிடித்தல் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனினும் மார்க்க நெறிக்கு முதலிடம் கொடுத்து அந்தப் பெண்ணைக் கைபிடித்து நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்’ என்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரு சகோதரிகளில் மிக அழகானவளை தேர்ந்தெடுக்காது ஒன்றரை கண்ணுடைய அழகு குறைந்த ஆனால் மார்க்க பக்தி மிகுந்த புத்திசாலிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்தார்கள்.
நல்ல குணமும், சிறந்த புத்தியும், பத்தினித் தனமும் இனப் பெருக்க மும் உடையவளாக இருப்பதும், கன்னி கழியாதவளாக இருப்பதும் சுன்னத்தாகும். மாப்பிள்ளையும் அப்படிப்பட்டவராக பார்ப்பது சுன்னத் தாகும்.
சிறிதும் உறவு முறையேற்படாத அன்னியர்களுடன் சம்பந்தம் செய்வ தை விட சற்று தூரமான உறவில் சம்பந்தம் செய்வது நல்லதாகும்.
திருமணத்தின் ஷரீஅத் சட்டங்கள்:
திருமணத்தின் பர்ளுகள் ஐந்து: மனைவி, கணவன், வலீ, இரண்டு சாட்சிகள், ஈஜாப்-கபூல் வாசகம் ஆகிய ஐந்தாகும்.
1. வலிகாரன் இல்லாமல் நிகாஹு செய்வது கூடாது. ஹனபி மத் ஹபில் பெண் தன் ஒலி கொண்டு திருமணம் முடித்துக் கொள்ளலாம். ஆனால் பாலிகில்லாத சிறுமியின் நிகாஹுக்கு வலிகாரர் வேண்டும்.
வலீ என்பவர் தந்தை, தந்தை இல்லாத நேரத்தில் (அதாவது: தந்தை மரணிப்பதாலோ, அல்லது வலீயாவதற்கு தடையாக இருக்கக் கூடிய பைத்தியம் பிடித்தல், மதம் மாறுதல் போன்ற செயல்களினாலோ தந்தை இழக்கப்பட்ட நேரத்தில்) தந்தையுடைய தந்தை ஆகியோர் ஆவார்கள். இவர்களிருவரும் வயது வராத கன்னி அழியாத பெண்ணை அவளுடைய அனுமதியின்றி ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக் கலாம்.
உடலுறவினால் கன்னியழிந்தவளை அவள் பருவமடைந்தவளாக இருப்பின் அவளுடைய அனுமதியின்றி நிகாஹ் செய்து கொடுப்பது யாருக்கும் கூடாது. ஷாபியீ மத்ஹபின்படி பருவமடையாத பெண் ணை தந்தையோ, தந்தையை இழக்கப்பட்ட நேரத்தில் தந்தையின் பாட் டனாரோ தவிர வேறு எவரும் திருமணம் செய்து கொடுக்க கூடாது. ஹனபி மத்ஹபில் வேறு எவரும் திருமணம் செய்து கொடுக்கலாம்.
ஹனபி மத்ஹபில் வலீயாகிறது அஸபாவின் ஒழுங்கு முறைக்குப் பின் தாய்க்கும் மகனுக்கும், தாய் மாமனுக்கும் உண்டு. வலீயாகிறவன் முன்னால் பாகப்பிரிவினையில் கூறப்பட்டுள்ள அஸபாவுடைய தர் தீபின் முறையிலாயிருக்கும். எனினும் தாயைத் திருமணம் செய்து கொடுக்க மகன் வலீயாக மாட்டான். (அஸபாக்காரர்: என்பது பாகப் பிரிவினையில் நியமிக்கப்பட்ட பங்கிற்குரியவர்களின் பங்குகளைக் கொடுத்தது போக மீதியை, அல்லது பங்கிற்குரியவர்கள் எவரும் இல் லையானால் சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு அஸபாகாரர் என்று சொல்லப்படும். அவர்கள் பின்வருமாறு: மகன், மகனுடைய மகன், தந்தை, தந்தையின் தந்தை, தகப்பனும் தாயும் ஒன்றான சகோதரன், தந்தை மட்டும் ஒன்றான சகோதரன், அவர்களு டைய ஆண் குழந்தைகள், தாயும் தந்தையும் ஒன்றான அல்லது தந்தை மட்டும் ஒன்றான சிறிய பெரிய தந்தைகள், அவர்களின் ஆண் மக்கள் ஆகியோராவார்கள். வமிசத்தாலுள்ள மேற்கூறப்பட்ட அஸபாவுக்குப் பின் உரிமை விட்டவன். இவனுடைய அஸபாத்தில் ஆண்கள் மட்டுமே வருவார்கள்.)
அஸபாக்காரர்களில் உள்ள வலீ இல்லையானால் காளீயாகிறவர் தன் னுடைய அதிகாரத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பருவமடைந்த பெண் ணை ஏழு நிலைகளில் திருமணம் செய்து கொடுக்கலாம்.
1. வலீகாரன்தானே அவளை திருமணம் செய்துகொள்வதாயிருந்தாலு ம்.
2. வலீ எவரும் இல்லாத நிலையிலும்(வலீ இருந்தும் அவனிருக்கும் இடம் தெரியாத நிலையிலும்)
3. வலீகாரன் இரண்டு நாட்களின் தூரத்திற்கு அப்பால் மறைமுகமாக இருக்கும் நிலையிலும்,
4. வேறு இடத்திலிரு க்கும் வலீகாரன் வரமுடியாத சூழ்நிலையிலும் 5. அவன் பெரும் அந்தஸ்துடையவனாக இருந்து வராமலிருந்து விட்ட நிலையிலும்
6. பொருத்தமுள்ள மாப்பிள்ளைக்கு முடித்துக் கொடுக்காததால் அவன் கோபித்துக் கொண்ட நிலையிலும்
7. வலீகாரன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டியிருந்த நிலையிலும். இந்த ஏழு நிலையிலும் காளீ திருமணம் செய்து கொடுப்பார்.
உரிய நிபந்தனைகளின்படி உள்ள காளியானவர் இல்லாவிட்டால் நீதி யான ஒரு மனிதரை நடுவராக (முஹக்கமாக) மாப்பிள்ளை பெண் இரு வரும் நியமித்து அவர் மூலம் திருமணத்தை நிறைவேற்றிக் கொள்வா ர்கள்.
வலீகாரருக்கு ஈஜாப் கபூலுடைய வாசகம் தெரிந்திருந்தாலும் அவர் தன க்கொரு வக்கீலை நியமித்து நிகாஹை நடத்துவது கூடும்.
நெருங்கிய வலீகாரர் இருக்கும் போது, தூரமாக உள்ள ஒரு வலீகாரர் ஏழு சந்தர்ப்பங்களில் திருமணத்தை முடித்துக் கொடுக்கலாம். நெருங்கி யவர் காபிராகவோ, பாவம் செய்பவராகவோ, சிறு பிள்ளையாகவோ, அடிமையாகவோ, பைத்தியக்காரனாகவோ, நோட்டம் குறைந்தவனாக வோ, மடமைத்தனம் உள்ளவனாகவோ இருப்பின் தூரத்திலுள்ளவர் வலியாகலாம்.
கன்னியழிந்த பருவமடைந்த பெண்ணை அவள் குறிப்பிடுகின்ற மாப் பிள்ளைக்கே அன்றி வேறு ஒருவனுக்கு தந்தையோ, பாட்டனோ மணம் முடித்துக் கொடுக்கக் கூடாது.
பருவமடையாத தன்னுடைய சிறிய மகனுக்கு சரியான மஹ்ரைக் கொ ண்டு பொருத்தமான பெண்ணைப் பார்த்து தந்தையோ, தந்தையை இழந்த நேரத்தில் பாட்டனோ மணம் முடித்து வைக்கலாம்.
2. பெண்ணின் சம்மதமாகும். பெண் சிறுமியாயிருந்து வலிகாரர் அவ ளை நிகாஹ் செய்து கொடுக்கும் பட்சத்தில் அவள் சம்மதம் தேவையி ல்லை. ஆனால் அவளுக்குத் தெரியப்படுத்துவது ஏற்றமாயிருக்கும்.
3.நீதமுள்ள இரண்டு சாட்சிகள் ஆஜராயிருப்பது. திருமணத்திற்கு வரு கை தந்திருக்கும் ஜமாஅத்தை சாட்சியாக்கி வைப்பது ஏற்றமாயிருக்கு ம். சாட்சிகள் ஈஜாப் கபூல் வாசகத்தை விளங்குகிறவர்களாகவும், நேர் மையானவர்களாகவும் இருப்பது ஷர்த்தாகும்.
4.ஒலிகாரனும், மாப்பிள்ளையுமாவது அல்லது அவர்களுடைய வகீலா வது ஈஜாப் கபூல் சொல்வதாகும். ஈஜாப் என்பது زَوَّجْتُكَ உனக்கு நான் மணம் முடித்து தந்தேன் என்று பெண்ணின் வலீகாரன் (அல்லது அவனி ன் வக்கீல்) சொல்வதாகும். கபூல் என்பது மாப்பிள்ளை (அல்லது அவ னால் குறிக்கப்பட்ட அவனது வகீல் قَبِلْتُ நான் ஒப்புக் கொண்டேன் என்று சொல்வதாகும்.
நிகாஹ் எழுதும் போது ‘என் மகள் இந்தப் பெயருடைய பெண்ணை இத் தனை ரூபாய் மஹருக்கு உனக்கு நான் நிகாஹ் செய்து தந்தேன்’ என்று வலிகாரர் கூற வேண்டும். ‘அவளுடைய நிகாஹை நான் ஒப்புக் கொண் டேன்’ என்று மாப்பிள்ளை கூற வேண்டும்.
மாப்பிள்ளையாகிறவன் முஸ்லிமாகவும், குறிப்பானவனாகவும், மஹ் ரம் இல்லாதவனாகவும், இந்த நிகாஹுக்கு முன் நான்கு மனைவிகள் இல்லாதவனாகவும், இப்பொழுது நிகாஹ் செய்ய நாடும் பெண்ணுக்கு வமிசம் மூலமாகவோ, பால்குடி மூலமோ மஹ்ரமான அக்கா, தங்கை, மாமி, சாச்சி இவர்களில் எவரேனும் ஒருத்தி இவனுடைய நிகாஹில் இல்லாமல் இருப்பது ஷர்த்தாகும்.
இரண்டு சகோதரிகளை ஒன்று சேர்த்து திருமணம் செய்வது ஹராம் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.
நிகாஹில் மாப்பிள்ளையை குறிப்பிடுவது ஷர்த்தாகும். குறிப்பிடாமல் இந்த இருவரில் ஒருவருக்கு நிகாஹ் செய்து தந்தேன் என்று சொன்னா ல் கூடாது.
இரு சகோதரிகளின் இரு மகள்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொ ள்ளலாம்.
5 நிகாஹ் செய்துகொள்ள ஹலாலாகும்படியான நிலைமையில் அந்தப் பெண்இருப்பதாகும். பெண்ணாகிறவள்முஸ்லிமானவளாகவும், வே றொருவருடைய மனைவியாக இல்லாமலிருப்பவளாகவும், இத்தா வைவிட்டு நீங்கியவளாகவும், அவள் யார் என்று குறிக்கப்பட்டவளாக வும், வமிசம், பால்குடி சம்பந்தம் ஆகிய மூன்றிலும் மஹ்ரமியத்தை –திருமணம் செய்ய ஹராமாயிருப்பதை விட்டும் நீங்கியவளாகவும் இருப்பது ஷர்த்தாகும்.
பெண்ணிடம் கவனிக்க வேண்டிய சுன்னத்துக்கள்:
1.தன் கற்பையும், கணவனுடைய சொத்தையும் காப்பவளாயிருப் பதாம்.
2. நற்குணமாயிருக்கும்.
3. அழகாயிருக்கும்.
4. மஹர் குறைவாயிருப்பதாகும். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எந்தப் பெண்ணின் மஹர் குறைவாகவும், அழகு அதிகமாயும் இருக்கிறதோ அவர்களே பெண்களில் மிக நன்மையான வர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
5. மலடியல்லாதவளாயிருப்பதாகும்.
6. கன்னியாயிருப்பதாகும்.
7. மார்க்க நெறி தவறாமல் நடப்பவளாய் இருப்பதாகும்.
8. நெருங்கிய பந்துவாயில்லாமலிருப்பதாகும்.
நிகாஹில் மஹ்ரை குறிப்பது சுன்னத்தாகும். குறிக்கப்பட்ட மஹ்ரை கொடுப்பது வாஜிபாகும். குறித்த மஹர் மார்க்கத்தில் அனுமதிக்கப்படா த மஹராக இருந்தாலும் அல்லது மஹர் குறிக்கப்படாவிட்டாலும் அவ ள் குடும்பத்தில் வழமையான மஹர் விதியாகும்.
மஹ்ர் வெள்ளியாயிருப்பது மற்றொரு சுன்னத்தாகும். விலையாக கொடுக்கல் வாங்கல் செய்ய எதுவெல்லாம் இணக்கமாகுமோ அதை யெல்லாம் மஹராகக் கொடுக்கலாம். மஹரைக் குறிக்காமல் நிகாஹ் முடிப்பது மக்ரூஹ்.
மஹராகிறது விலை மதிப்புள்ளதாக மதிப்பு பெற்ற பிரயோஜனம் உள் ளதாக இருப்பது ஷர்த்தாகும்.
தவணை வைக்கப்படாத மஹரை கைப்பற்றுவதற்கு ஒரு மனைவி தன்னைக் கணவனை விட்டும் தடுக்கலாம். மஹருக்கு தவணை வைத் திருந்தால் கணவனைத் தடுக்கும் உரிமையை இழந்திடுவாள்.
உடலுறவுக்கு முன்னோ அல்லது பின்னோ இருவரில் ஒருவர் இறந்து விடுவதாலும், மேலும் கத்னா அளவு வரை மறைவது கொண்டு உடலு றவு கொள்வதாலும் (இதனால் கன்னி அழியாவிட்டாலும் சரியே)இந்த இரு நிலைகளிலும் மஹ்ர் விதியாகும்.
உடலுறவுக்கு முன் ஒருவன் தலாக் சொன்னால் அரை மஹர் கொடுக்க வேண்டும். ஆனால் உடலுறவுக்கு பின் தலாக் சொன்னால் முழு மஹ ரும் விதியாகும்.
உடலுறவு ஏற்படும் முன் ஃபஸ்கு ஏற்பட்டாலோ, அல்லது அவள் முர்த த்தாகி விட்டாலோ அல்லது அவன் மஹர் கொடுக்க இயலாதவனாகி விடுவதாலோ அல்லது அவளைக் கொண்டு ஏற்படுகிற காரணங்களைக் கொண்டு அவள் ஃபஸ்கு செய்தாலோ மஹர் முழுவதும் விழுந்துவிடு ம்.
பொறுப்புணர்ந்த பருவமடைந்த பெண், தன் கணவன் தர வேண்டிய மஹரை வாங்காமல் நீங்கி விட வேண்டுமென்றால் மஹரை நீக்கி விட்டேன், ஹலாலாக்கினேன், விழுத்தாட்டி விட்டேன், நன்கொடையா க ஆக்கி விட்டேன், ஆகுமாக்கினேன் என்ற வார்த்தைகளைச் சொல்வ தால் அவன் மஹர் கொடுப்பதை விட்டும் நீங்கி விடுவான்.
மஹர் கொடுக்க முடிந்தவன் அதனைக் கொடுக்காமல் இறந்து விட்டா ல், ஜினா செய்தவனைப் போன்று கியாமத்து நாளில் வருவான் என்று கூறப்பட்டுள்ளது.
நிகாஹை ஹராமாக்கும் செயல்கள்:
பெண்ணாகிறவள் முடிக்கப் போகிற மாப்பிள்ளைக்கு வமிசத்தில் திரு மணம் செய்வதற்கு ஹராமானவளாக இல்லாதிருக்க வேண்டும்.
பால்குடி:
உனக்கு பால் கொடுத்தவளும். அவளைப் பெற்றவளும், அவளுக்கு பால் கொடுத்தவளும், உன் தாய், தந்தைக்குப் பால் கொடுத்தவளும் உனக்குத் தாயாகும். அவளுடைய பாலுக்குரியவன் உனக்குத் தந்தை யாகும்.
வமிசத்தால் அல்லது பால் குடியால் உனக்குத் தாய், தந்தையாக இருப் பவர்களின் பாலைக் குடித்தவள் உன் சகோதரியாவாள்.
உன் மனைவியிடம் பாலைக் குடித்தவன், அல்லது உன் மகனுடைய மனைவியிடம் அல்லது குடி மகனுடைய மனைவியிடம் பால் குடித்த வன் உனக்கு மகனாகும். இவர்கள் அனைவரும் ஹராமாகும்.
பால் குடி என்பது, ஒன்பது வயது அடைந்த உயிருடனுள்ள ஒரு பெண் ணின் பாலை இரண்டு வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உறுதியாக ஐந்து தடவை குடிப்பதாயிருக்கும்.
பிள்ளை என்பது தன் விந்தின் மூலம் உண்டாவதால் அது தன்னுடைய உடலில் ஒரு பகுதியாக இருப்பது போல், பாலாகிறது உடலிலிருந்து ஓர் இறைச்சித்துண்டுக்கு ஒப்பாகிறது. ஆகையினால்தான் பால்குடி மூலம் நிகாஹ் ஹராமாக்கப்பட்டுள்ளது.
தந்தையுடைய அல்லது பாட்டனுடைய மனைவிகளும் மகனுடைய மனைவியும் சம்பந்தத்தினால் ஹராமாகும். மகன் வமிசத்தினால் உள் ளவனாக இருப்பினும், பால் குடியினால் உள்ளவனாக இருப்பினும் சரி.
மனைவியின் தாய் வமிசத்தால் தாயானாலும் சரி, பால் குடியினால் தா யானாலும் சரி ஹராமாகும். அந்த மனைவியை உடலுறவு கொண்டி ருந்தால் அவளின் மகளும் ஹராமாகும். எனவே அந்த மனைவியை உடலுறவு கொள்ளும் முன் தலாக் சொல்லி விட்டால் அவளுடைய மக ளைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஹராமல்ல.
தந்தையுடைய மனைவியும், மகனுடைய மனைவியும் ஹராமாகும். அதுபோல் மனைவியின் தாயும் ஹராமாகும். உடலுறவு நடைபெறா மலிருந்தாலும் இவர்கள் எல்லோரும் ஹராமாவார்கள். ஆனால் நிகா ஹ் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஆனால் உடலுறவு நடந்து விட்டால் செல்லுபடியாகாத நிகாஹாக இருந்தாலும் ஹராமாவார்கள்.
உடலுறவு கொண்ட மனைவியின் முந்திய கணவனுடைய மகளை (அவள் அவனுடைய பராமரிப்பில் இருப்பினும், இல்லாவிட்டாலும்) திருமணம் செய்யக் கூடாது.மனைவியை உடலுறவு கொள்ளாவிட் டால் அந்த மனைவியை தலாக் சொல்லி விட்டு (வேறு கணவனுக்குப் பிறந்த) அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை.
காபிரான கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்திற்கு வந்தால் ( அல்லது அவளைத் தலாக் சொல்லி இத்தா முடியும் முன் இஸ்லாத்தில் வந்திருந்தாலும் சரி) குப்ருடைய நேரத்தில் அவளுடைய நிகாஹ் செல்லுபடியாகும்.
விபச்சாரத்தினால் கற்பமுற்றிருப்பவளை நிகாஹ் செய்வது எல்லோரி டத்திலும் கூடும். உடனே அவளை உடலுறவு கொள்ளலாம். ஆனால் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவள் குழந் தையைப் பெற்றெடுக்கும் வரை உடலுறவு கொள்வது கூடாது என்றும், திருமணம் செய்ய நினைப்பவன் அவனே அவளுடன் விபச்சாரம் செய்தவனாக இருந்தால் கூடுமென்றும் கூறியுள்ளார்கள்.
அடிமைகள்:
ஹயாத்தாயிருக்கும் சுதந்திரமான ஒரு பெண்ணால் உரிமையிடப்பட் ட அடிமைப் பெண்ணை அவளுடைய வலீகாரன் நிகாஹ்செய்து கொடு ப்பான். அவளுக்கு வமிசத்தால் வலீகாரன் இல்லாவிட்டால் அவளு டைய அனுமதி பெற்ற ஒரு வக்கீல் நிகாஹ் செய்து கொடுப்பான்.
பருவமடைந்த, புத்தி சுவாதீனமுள்ள ஒரு பெண்ணுடைய அடிமைப் பெண்ணை அந்தப் பெண்ணின் வலீகாரன் அவளுடைய அனுமதி கொ ண்டு மணம் முடித்துக் கொடுப்பான்.
கன்னியாக உள்ள சிறிய பெண், சிறிய ஆண் ஆகியோருடைய அடிமைப் பெண்ணை அவர்களின் தந்தையோ, தந்தையுடைய தந்தையோ மணம் முடித்துக் கொடுப்பான்.
பொருத்தம் பார்ப்பது:
திருமணத்தில் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்ப்பது , பெண்ணாகிறவள் கேவலமடையாமலிருப்பதற்காகத் தேவையானதா கும். இதற்கு அரபியில் குஃப்வு كُفْوُ என்று சொல்லப்படும். இந்த குஃப்வு நிகாஹுக்கு அவசியமான ஷர்த்தல்ல.
சுதந்திரமான பெண் அல்லது அடிமைத் தனத்திலிருந்து உரிமை பெற்ற பெண்ணுக்கு அடிமை ஒருவன் குஃப்வு ஆக மாட்டான். பத்தினித்தன முள்ள பெண்ணுக்கும். மார்க்கப் பற்றுள்ள பெண்ணுக்கும் பாவம் செய் கிறவன் பொருத்தமாக மாட்டான்.
பொருத்தம் பார்ப்பதில் ஏழை, பணக்காரன் என்பதைப் பார்க்க கூடாது. குறைஷீ, ஹாஷிமி, முத்தலிபி கிளையார்களில் உள்ள பெண்ணுக்கு மற்ற அரபிகளோ, மற்றவர்களோ பொருத்தமாக மாட்டார்கள்.
நிகாஹுக்குப் பின் நடக்க வேண்டிய காரியங்கள்:
1. வலிமா விருந்து-கல்யாண விருந்து செய்வதாம். இது சுன்னத்து மு அக்கதாவாகும். இதற்கு அழைக்கப்பட்டால் வருகை தருவது வாஜி பாகும்.
நிகாஹுக்கு முன் நடைபெறும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல் வது வாஜிபல்ல. அது வெறும் விருந்து என்ற முறையில் செல்வது சுன்னத்தாகும்.
வலீமா விருந்தை மணமக்களின் உடலுறவு நடைபெற்ற பின் கொடுப் பது சிறப்பாகும். நிகாஹ் முடிந்த மூன்று நாட்களுக்குள் தவறினால் ஒரு வாரத்துக்குள் செய்து விட வேண்டும்.
தப்பு கொட்டி நிகாஹை பிரஸ்தாபப் படுத்துவதும் அதனால் சந்தோஷ ம் கொண்டாடுவதும் சுன்னத்தாகும்.
வலீகாரன் கைப்பிடித்துக் கொடுக்கப்பட்டு முதன் முதலாக மணமக்கள் சந்திக்கும் பொழுது மாப்பிள்ளை தன் வலக்கரத்தால் பெண்ணுடைய முன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு இருவரும்:
بَارَكَ اللهُ لِكُلٍّ مِّنَّا فِيْ صَاحِبِهٖ
‘நம்மிலிருந்து ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய விஷயத்தில் அல்லாஹ் பரக்கத்துச் செய்வானாக!’ என்று சொல்வதும், மற்ற பேச்சு கள் பேசும்முன் நன்றிக்காகவும், நன்மையைத் தேடியும் இஸ்திகாரா நிய்யத்துச் செய்து கொண்டு இரண்டு ரக்அத் உள்ள தொழுகையை தொழுது கொள்வதும் சுன்னத்தாகும்.
2. மனைவிமார்களுடன் சந்தோஷயமாயிருப்பதாகும்.
மனைவி தன்னிடம் பிணங்கிக் கொண்டால் முதலில் அவளுக்கு உபதே சம் செய்வான். அதில் அவன் திருந்தாவிட்டால் உபதேசத்துடன் அவ ளைப் படுக்கையில் வெறுப்பான். ஆனால் பேசாமல் இருக்கக் கூடாது. உப தேசமோ, படுக்கையில் வெறுத்தலோ பலன் தரவில்லையானால் காயப்படாமல் அடிப்பான். இவ்வாறே அல்லாஹுதஆலா குர்ஆனில் (4:34) மூன்று நிலைகளைக் கூறியுள்ளான்.
وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
எவளும் (கணவனுக்கு) மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால், அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக் கையிலிருந்து அவளை அப்பறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவள் மீது (வேறு குற்றங்கள் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன் மையானவனும் மிகப் பெயரியவனுமாயிருக்கிறான் என இறைவன் அருளியுள்ளான்.
3.பெண்ஜாதிக்கு நப்கா எனும் அன்னவஸ்திரம் கொடுப்பதாகும். உடலு றவுக்கு தகுதியில்லாத சிறுபிள்ளைக்கு நஃப்கா கொடுக்க தேவையி ல்லை.
நஃபகா என்பது அவளிருக்கும் ஊரில் மிகுதம் புழக்கத்தில் இருக்கும் தானியத்தில் ஏழையாக இருப்பவன் ஒரு சிறங்கையும், (இரு கை நிறை யவுள்ள அளவு) நடுத்தரமானவன் ஒன்றரைச் சிறங்கையும், வசதி படைத்தவன் இரண்டு சிறங்கைகளும் ஒவ்வொரு நாளும் சுப்ஹுடை ய நேரத்தில் கொடுத்திட வேண்டும். அதற்குரிய விறகு, தண்ணீர், வழ க்கப்படியுள்ள கறி,மசாலா, ஊறுகாய், ஆகியவையும் கொடுத்திட வேண்டும். பால், தயிர், மோர் புழங்குகின்ற ஊரில் அதனையும் கொடு ப்பது வாஜிப்.,
வீட்டுப் பொருட்கள், சமைப்பதற்குரிய பொருட்கள், உடைகள் தங்குவ தற்கு பாதுகாப்பான வீடு கொடுப்பது வாஜிப்.
4. மார்க்க விஷயங்களை பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதாகும். அவ் வாறு அவன் கற்றுக் கொடுக்கவில்லையானால் அதைக் கற்றுக் கொள் ள அவள் செல்வதாயிருப்பின் அதைத் தடுக்கக் கூடாது.
5. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள் இருப்பின் அவர்களுக்கு கொ டுக்கும் கொடையிலும் தங்கும் நாளிலும் நீதமாய் நடப்பதாகும்.
முறை வைப்பதில் அதிகம் மூன்று இரவுகளாகும். மேலும் கன்னி கழி யாத புதுப் பெண்ணாக இருந்தால் விடுபடாமல் ஏழு இரவுகள் தங்க லாம். கன்னியிழந்த புதுப் பெண்ணாக இருந்தால் மூன்று இரவுகள் தங்கலாம்.
மணம் முடித்து வீடு கூடும் முதலிரவில் ஜமாஅத்துக்கும், ஜனாஸாவு க்கும் வராமலிருக்கலாம். அப்படி வராமலிருப்பது வாஜிபென்று கூட சில இமாம்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதில் இமாம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
மனைவியுடன் இன்பம் பாராட்டுதல்:
மனைவிமார்களுடன் சரச வார்த்தைகள் பேசியும் விளையாடியும். அவர்களுடைய புத்தியின் பக்குவப்படி நடப்பது கணவனின் கடமை.
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தங்களின் மர்மஸ் தானங்களைத் தொட்டு சுகம் பாராட்டிக் கொள்வார்களானால், அல்லா ஹ்விடத்தில் அவர்களுடைய கூலி மிக மகத்தானதாக இருக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று இமாம் அபூ ஹனீபா ரலியல்லா ஹுஅன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
மாதவிடாய் நேரத்திலும், பின் துவாரத்திலும் உறவு கொள்வது ஹராம். பின் துவாரத்தைப் பார்ப்பதும் ஹராமாகும். அதேபோல் நோயு ற்றிருப்பவளை வேதனைப் படுத்தி உடலுறவு கொள்வதும், விரலி னால் கன்னியழியும்படி செய்வதும் ஹராமாகும்.
கர்ப்பமாவதைப் பயந்து விந்தை வெளியில் போகச் செய்வதும், உடல் உறவு கொள்ளும்போது பேசுவதும் மக்ரூஹ். உடலுறவு கொள்ளும் போது நடந்த விசயங்களை வெளியில் சொல்வது இருவருக்கும் ஹ ராம். மறைவான இடத்தில் உடலுறவு கொள்வது முஸ்தஹப்பாகும்.
ஆண்,பெண்கள் மர்மஸ்தானங்களை பார்ப்பது அது தன்னுடையதா யினும் மக்ரூஹ் ஆகும். அதனால் கண்பார்வை கெட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
தன் கையினால் விந்தை வெளியாக்குவது ஹராம். அவன் ஜினாவைப் பயந்தாலும் சரி.
இரவின் துவக்கத்தில் உடலுறவு கொள்வது மக்ரூஹ். மாதத்தின் துவக்கத்திலும், நடுவிலும் கடைசியிலும் உடலுறவு கொள்வது மக்ரூ ஹ் என்பதாகவும் அந்த தினங்களில் உடலுறவு கொள்வதால் அதில் ஷைத்தானும் கலந்து கொள்கிறான் என்பதாகவும் அலீ, முஆவியா, அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மூலம் அறிவிக் கப்பட்டுள்ளதாக ஙஸ்ஸாலி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதியுள்ளார்கள்.
இருவதும் ஒரு போர்வையில் மூடிக் கொள்வதும், ஒரே விரிப்பில் உறங்குவதும், உடல் உறவை நாடும் போது மணம் பூசிக் கொள்வதும், கழுத்துடன் கழுத்தை கட்டிப் பிடித்து முத்தமிட்டுக் கொள்வதும், இன் பம் கொடுக்கும் பேச்சுக்களை பேசிக் கொஞ்சிக் குலாவி விளையாடுவ தும், உறவு கொள்ளும் நேரத்தில் பின்வரும் துஆவை ஓதிக் கொள்வ தும் சுன்னத்தாகும்.
بِسْمِ اللهِ اللهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا .
பொருள்:
‘அல்லாஹ்வின் திருநாமத்தால் யா அல்லாஹ் ஷைத்தானை எங்க ளை விட்டும் தூரமாக்கி வைப்பதுடன் அவனை எங்களுக்கு நீ கொடுத் திருப்பதை விட்டும் தூரமாக்கி வைப்பாயாக!’
விந்து வெளிப்படும் போது பின்வரும் ஆயத்ததை மனதினால் சொல் லிக் கொள்ள வேண்டும்.
الْحَمْدُ لِلّهِ الَّذِيْ خَلَقَ مِن َ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَّصِهْرًا.
பொருள்:
‘தண்ணீரிலிருந்து (விந்திலிருந்து) மனிதவர்க்கத்தைப் படைத்து அதைப் (பிறப்பைக் கொண்டு) பந்துக்களாகவும், (திருமணத்தினால்) சம் பந்திகளாவும் ஆக்யிய அல்லாஹுத் தஆலாவுக்கே புகழனைத்தும்’
அவனுக்கு விந்து முதலில் வெளிப்படுவதாக இருந்தால் சற்று தாமதி த்து அவளுக்கு வந்து வெளியாகும் வரை முடிந்த மட்டும் விளையா ட்டில் ஈடுபட்டு அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது சுன்னத் தாகும்.
மறுமுறை உடலுறவு கொள்ள நாடினாலும், அல்லது எதையேனும் சாப்பிட, குடிக்க விரும்பினாலும் இருவரும் தங்களுடைய மர்மஸ்தா னங்களைக் கழுவி சுத்தப்படுத்தி ஒளு செய்து கொள்வதும் சுன்னத் தாகும்.
கணவன் மனைவி இருவரும் உடலுறவின் விளையாடுவது அல்லா ஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.
பிரயாணம் போய் விட்டுத் திரும்பி வந்த நேரத்திலும், ஸஹருடைய நேரத்திலும் உடலுறவு கொள்வது சுன்னத்தாகும். பகலில் உடலுறவு கொள்வது மக்ரூஹ். ஆனால் வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன் மக்ரூஹ் அல்ல. மாறாக அது சுன்னத்தாகும்.
கழுதைபோல நிர்வாணமாக உடலுறவு கொள்ளக் கூடாது. தமர்காளை போல மொச்சை போடக் கூடாது என்று ஹதீதில் அறிவிக்கப்பட்டு ள்ளது.
உடலுறவில் ஆணுக்கு மேல் பெண்ணை ஆக்கிக் கொள்வது மக்ரூஹ். அதிலும் விந்து வெளியாகும்போது அவ்வாறு செய்வது கொடிய மக் ரூஹ். ஏனெனில் அது நீர்த்தாரையில் நோவை உண்டாக்கும் என்று மஙானியில் கூறப்பட்டுள்ளது.
சக்தி பெற்றவன் நான்கு தினங்களுக்கு ஒரு தடவை உறவு கொள்வதும், அதிகமான ஆசையுள்ளவனுக்குத் தேவையான அளவு கொள்வதும் சுன்னத்தாகும்.
உடலுறவில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் படுத்துக் கொண்டு செய்வது நிலையில் நின்று கொண்டு செய்வதை விடச் சிறந்தது. எந்த வகையிலும் ஆண், பெண்ணை இன்பம் அனுபவிக்கலாம்; பின்துவராத் திலும் மாதவிடாய் உள்ள நேரத்திலும் தவிர.
ஆகவே கணவன் மனைவி ஆகிய இருவரும் மார்க்க சட்டப்படி நடந்து நல்வாழ்க்கை வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக!
No comments:
Post a Comment