Tuesday, February 16, 2016

அழகிரி - ஸ்டாலின் மோதல் தி.மு.க., அறக்கட்டளை காரணமா?

தி.மு.க., மீதும், பொருளாளர் ஸ்டாலின் மீதும், அவரது சகோதரர் அழகிரி, காட்டமான விமர்சனங்களை வைப்பதன் பின்னணியில், அறக்கட்டளை சொத்து விவகாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

 உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலை அடுத்து, லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க.,வை அழகிரி கடுமையாக விமர்சித்தார். தி.மு.க., படுதோல்வி அடையும் என, காட்டமாக பேசினார். தி.மு.க.,வுக்கு எதிரான தலைவர்களை சந்தித்து, குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனால், தேர்தலுக்குப் பின், அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.அதன்பின்னும், அவ்வப்போது கட்சியையும், பொருளாளர் ஸ்டாலினையும், அழகிரி விமர்சித்து வருகிறார். இடையில், குடும்பத்தினர் நடத்திய சமாதானப் பேச்சில், மீண்டும் தி.மு.க.,வில் அவர் இணைய இருப்பதாக கூறப்பட்டது. 
ஜன., 30ம் தேதி பிறந்த நாளன்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்று, கட்சியில் இணைந்து விடலாம் என, அவர் திட்டம் போட்டிருந்தார். அதற்கு முன், குடும்பத்தாரிடம் சில நிபந்தனைகளை, அழகிரி விதித்திருந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதை நிறைவேற்ற ஸ்டாலின் தரப்பு, கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, அழகிரி இணைப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அழகிரியை பொறுத்தவரையில், அவரது ஒரே இலக்கு, அறக்கட்டளைக்கு சொந்தமாக இருக்கும் சொத்து விவகாரம் தான். அந்த சொத்துகளை, அறக்கட்டளை உறுப்பினர்கள் நிர்வகித்து வருகின்றனர். அதில், ஸ்டாலின் தன் குடும்பத்தினரை உறுப்பினர்களாக்கி விட்டார். அதில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதே, அழகிரியின் முக்கிய நிபந்தனை. 
துவக்கத்தில், கனிமொழியையும் உறுப்பினராக்க வேண்டும் என, வலியுறுத்தியவர், பின் அதை விட்டுவிட்டார். இந்த நிபந்தனை தான், அவரை கட்சியில் சேர்ப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. கடுப்பில் இருந்த அழகிரி, அதை நேரடியாக சொல்லாமல், காங்., - தி.மு.க., கூட்டணியை விமர்சித்து, தன் எதிர்ப்பை தெரிவித்து விட்டார். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.



ஏற்க முடியவில்லை!

அழகிரி ஆதரவாளர்கள் கூறுகையில், 'கட்சியில் சேர, அழகிரி சில நிபந்தனைகளை விதித்தது நிஜம். ஆனால், டிரஸ்ட் விவகாரம் தான் முக்கியம் என, சொல்லப்படுவதை ஏற்க முடியவில்லை' என்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...