Thursday, February 18, 2016

வீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌ கட்டணங்கள்! – நிதி ஆலோசகர் குறிப்பிட்டுச் சொன்ன‍து.

வீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌ கட்டணங் கள்! – நிதி ஆலோசகர் குறிப்பிட்டுச் சொன்ன‍து.

வீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌ கட்டணங் கள்! – நிதி ஆலோசகர் குறிப்பிட்டுச் சொன்ன‍து. 
  
வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடன் மூலமாக  வாங்குகிறார்கள். தற்போது
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்  குறைந் துள்ளது. இதனால் புதிதாகக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டின் மதிப்பில் 80-90 சதவிகிதம் வரைதான் கடன் கிடைக்கும். மீதமுள்ள தொகை யை கடன் வாங்குபவர் செலுத்த வேண்டும். 

கடன்வாங்குபவர்கள் வட்டி விகிதம் குறித்துத்தான் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அவர்கள் பல கட்டணங்கள் செலுத்த வேண்டும். அது  என்னென் ன கட்டணங்கள் என்பதை பார்ப்போம். 

1. செயல்பாட்டுக் கட்டணம்! 

இக்கட்டணம் கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே வாங்கப்படும். இக் கட்டணமும் எக்காரணத்துக்காகவும் திரும்பத் தரப் படமாட்டாது. சில வங்கிகள் இக்கட்டணத்தைக் கட ன் வழங்குவதற்குமுன் வாங்கிவிடும். கடன் தொ கையில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ஒரு குறிப் பிட்ட தொகை செயல்பாட்டுக் கட்டணமாக வசூலி க்கப்படும். மேலும் சிலநேரங்களில் சிறப்பு சலுகை யாக சில வங்கிகள் இந்த கட்டணத்தை ரத்து செய் யும். எனவே அந்த சமயத்தில் கடன் வாங்கினால் உங்களுக்கு சில ஆயிர ங்கள் மிச்சமாக வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கடன்தொ கையில் 0.5 சத விகிதம் அல்லது அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக  இருக்கும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப் படும். 

2. சொத்து அடமான கட்டணம்! 

வங்கிக் கடன் மூலமாக வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கும் போது வீட்டி ன் பத்திரத்தை கடனுக்கு ஈடாக வங்கியின் பெய ருக்கு பத்திரப் பதிவு அலு வலகத்தில் அடமான பதிவுசெய்து கொடுக்க வேண்டும். இதற்கு அரசின் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சதவிகிதம் கட்ட ணம் செலுத்த வேண்டி யிருக்கும். இது ஒவ்வொ ரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படும். தமிழகத்தி ல் 1% தொகை கட்டணமாக செலுத்த வேண்டியிரு க்கும். நீங்கள் செலுத்துக் கட்டணங்களில் அதிகத் தொகை கொண்ட கட்ட ணமாக இது இருக்கும். 

3. சட்டக் கருத்து  கட்டணம்! 

வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன் அந்தச் சொத்தில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள் வதற்காக ஒரு சட்ட ஆலோசகரை நியமித்திருக்கும். இதற்குக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணத்தைக் கட ன் வாங்குபவர்தான் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்கு வங்கிகள் பிராஜெக்ட் கடன் வழங்கி இருக்கும் அது போன்ற வீடுகளுக்கு சட்டக் கட்டணம் இருக்காது. இது கட்டணம் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படு ம்.  

4. முன்கூட்டி கட்டும் கடனுக்கு அபராதம்! 
 
குறிப்பிட்ட காலத்துக்குக் கடன் வாங்கிவிட்டு அதனை  முன் கூடியே செலுத்தினால் அபராதம் கட்ட வேண்டி வரும். மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிரு ந்தால் அபராதம் கூடாது என ஆர்பிஐ கூறியுள்ளது. அது வே நிலையான வட்டி விகிதத்தில் 10, 15  ஆண்டுகளுக்கு கடன் வாங்கியிருந்தால் அபராதம் இருக்கிறது. இந்த மீத முள்ள கடன் தொகையில் 2 சதவிகிதம் அளவுக்கு அபராதம் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...